இடுகைகள்

வீடு தேடிவருகிறது ஹீயுமன் ரைட்ஸ் டுடே மாதஇதழ்

படம்
                                                                                                                          

தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

படம்
தூத்துக்குடி மாவட்டஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில்  79 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் திருT.J. கார்த்திகேயன் தலைமையில்.. தொழிலதிபரும்,கழக துணைத் தலைவருமான திரு. A.V. லினோ அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து. சுதந்திரத்தின் மகத்துவத்தையும்,அதன் வரலாறு பற்றியும்  சிறப்புரையாற்றினார். நிகழச்சியின் நிறைவில்  அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு..-- ஜனநாயக மக்கள் உரிமை கழக செய்தி தொடர்பாளர் A..கரிகாலன் -A.V. மது -K.A.சமசுதின்-ட.மதிராஜன்-V.முருகேசன்-வெங்கடேன்-மாரிமுத்து- நமது செய்தியாளர்கள் : இசிவகாமிநாதன் - முருகன்- பழனிச்செல்வம் மற்றும் A.V. L இன்ஜினியரிங்  அலுவலர்கள்,மற்றும் பணியாளர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்

அமைச்சருடன்... விதவைகள் நல்வாழ்வு சங்கத்தின் சங்க தலைவி திருமதி R.சங்கீதா

படம்
     உங்களுடன்  ஸ்டாலின்.   ‌‌             திட்ட முகாம் தூத்துக்குடி பீச் ரோடு  மேரிஸ் கல்லுரியில் வைத்து நடைபெற்ற போது .... தூத்துக்குடி மாவட்ட விதவைகள் நல்வாழ்வு சங்கத்தின் சங்க தலைவி திருமதி R.சங்கீதா ரமேஷ் மாண்புமிகு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான திருமதி பி‌.கீதா ஜிவன் M.COM,B,ED அவர்களை சந்தித்து பேசிய போது எடுக்கப்பட்ட படம்

விதவைகள் நல்வாழ்வு சங்க அமைப்பு கூட்டம்

படம்
 தூத்துக்குடி மாவட்ட விதவைகள் நல்வாழ்வு சங்க அமைப்பு கூட்டம்  தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு காந்தி நகர் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினரும் மாநகர தலைவருமான. திரு  இரா.மாடசாமி. அவர்கள் தலைமையில் நடைபெற்றது    சங்கத்தின் மாவட்ட தலைவியாக திருமதி R.சங்கீதா ரமேஷ் துணைத்  தலைவியாக திருமதி நிர்மலா, வள்ளி மனேகரன் செயலாளராக திருமதி வேளாங்கண்ணி இணைச் செயலாளராக திருமதி இந்துமதி துணைச் செயலாளராக நஜீமி பீபி பொருளாளராக திருமதி R.சுந்தரி ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி தூத்துக்குடி மாநகராட்சி ஒய்வுதியர்கள் சங்க துணை தலைவர் திருமதி ல. அல்போன்ஸ் வாழ்த்தி பேசினார்கள் இறுதியில் சங்க துணை தலைவி திருமதி M.வள்ளி நன்றி கூறினார்

எழுத்தாளர். "முத்தாலங்குறிச்சி காமராசு வின் பெருமிதம் "

படம்
      சமீபத்தில் தொடுவானம் கலை இலக்கிய பேரவை சார்பில்  நூல் வெளியீட்டு நிகழச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு... நிகழ்ச்சியை பற்றி எழுத்தாளர். முத்தாலங்குறிச்சி காமராசு  பெருமிதத் தோடு கூறியது ....   தூத்துக்குடியில் இயங்கி வரும் தொடுவானம் கலை இலக்கிய  பேரவை மிக முக்கிய   அமைப்பாகும்.  இதன் நிறுவனர் மற்றும் தலைவர் நெல்லை தேவன் ஆவார்.  எனக்கு கிட்டத்தட்ட ஐந்து வருடமாக பழக்கம். சிறந்த எழுத்தாளர்.   நான் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற போது எனக்கு கோவில்பட்டியில் வைத்து பாராட்டு விழா நடத்தும் போது அவருக்கும் பாராட்டு சான்றிதழ் கொடுத்தார்கள். அப்போது தான் முதல் முதலில் சந்தித்தேன். அதன் பிறகு அவர் என்னிடம் அடிக்கடி பேசிக்கொள்வார். அவர் மாதந்தோறும் நடந்தும்  தொடுவானம் நிகழ்ச்சியில் ஒரு நாள் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். அதன் பின் புத்தக கண்காட்சியில்  இணைந்தோம்.            தொடர்ந்து தூத்துக்குடி சிறுகதை எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியிலும் ஒருங்கிணைந்தோம். இ...

"உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை தொடங்கி வைத்து.. மனுதார்களிடம்.. கலந்துரையாடல்

படம்
     மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் கடலூர் மாவட்டம் வாண்டையார் திருமண மண்டபம், சிதம்பரத்தில் இன்று (15.07.2025) "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை தொடங்கி வைத்து, துறை சார்ந்த அரங்கில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு, மனுதாரர்களுடன் கலந்துரையாடியதை தொடர்ந்து...    மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள்,மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பி.கீதா ஜீவன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கோவில்பட்டி சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமை பார்வையிட்டார்     .மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆ.இரவிச்சந்திரன் அவர்கள்,நகராட்சி தலைவர் கோவில்பட்டி திரு.கா.கருணாநிதி அவர்கள்,மாண்புமிகு மேயர் திரு.பெ.ஜெகன் அவர்கள்,உதவி ஆட்சியர்( பயிற்சி) திரு.தி.புவனேஷ் ராம் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.

கராத்தே கருப்பு பட்டைய தேர்வு

படம்
    தூத்துக்குடி மாவட்ட    நாசரேத்தில் கராத்தே கருப்பு பட்டைய தேர்ச்சி போட்டி ஆலன் திலக் கராத்தே பள்ளியில் சார்பாக  கராத்தே கருப்பு  பட்டைய தேர்வு போட்டி   கடந்த 13-07-2025 ஞாயிறு கிழமை  அன்று   நடைபெற்றது.  ஆலன் திலக் தூத்துக்குடி மாவட்ட தலைமை கராத்தே மாஸ்டர் டென்னிசன் தலைமை தாங்கி மாணவர்களை தேர்வு செய்தார். சிறப்பு விருந்தினராக  நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சத்தியமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை கூறி  கராத்தே கருப்பு பட்டயமும் சான்றிதழும் வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் பெரியதுரை, ஜான், மாஸ்டர் சபரி, குமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை மாஸ்டர் கராத்தே டென்னிசன் செய்திருந்தார்.