இடுகைகள்

தமிழ்நாடு போட்டோ வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா.

படம்
தமிழ்நாடு  போட்டோ வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா. கடலூர் .மார்ச் .11. கடலூர் நகர அரங்கத்தில் தமிழ்நாடு போட்டோ வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் கடலூர் மாவட்ட தொழிற்சங்க தொடக்கவிழா நல வாரியத்தில் உறுப்பினர்களை இணைக்கும் விழா அடையாள அட்டை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த முப்பெரும் விழாவிற்கு மாநில செயலாளர் கபாலீஸ்வரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ரமேஷ், பொருளாளர் சரவணன், துணை தலைவர்கள் திருநெல்வேலி சங்கர், திருவண்ணாமலை வீரபாகு, இணைச் செயலாளர்கள் தூத்துக்குடி செந்தில்குமார், கோவை ஜேம்ஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இந்நிகழ்ச்சிக்கு மாநில ஒருங்கிணைப்பாளராக ரமேஷ் செயல்பட்டார். கடலூர் மாவட்ட தலைவராக உமாபதி, செயலாளராக கல்யாண முருகன் பொருளாளராக சரவணன், இணைச் செயலாளர்கள் அறிவு, குமாரசாமி ,பாலமுருகன், துணைத்தலைவராக மகேஷ்குமார் சுப்பிரமணியன், சிவசங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக சுரேஷ், சக்திவேல், பாலு, பரமசிவம், பொன்னியின் செல்வன், ரமேஷ், மணிகண்டன் வடி...

மகளீர் தின வாழ்த்துக்கள்

படம்
மகளீர் தின வாழ்த்துக்கள்

தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு

தூத்துக்குடி 2020 மார்ச் 6 ; தூத்துக்குடி ரோட்டரி சங்கம் ரோட்டரி இன்டர்நேஷனல் ப்ராஜெக்ட் பாசிடிவ் ஹெல்த் திட்டத்தின் கீழ், தூத்துக்குடியில் சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் மனிதச்சங்கிலி மற்றும் விழிப்புணர்வுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். இம்மனிதச்சங்கிலியில் சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை நர்ஸிங் கல்லூரி மாணவிகளும், புனித மரியன்னை கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாநகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.  தொற்றா நோய்களான சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, ஸ்ட்ரோக் மாரடைப்பு மற்றும் உடல் பருமன் பற்றிய பதாகைகளைக் கையில் வைத்துக் கொண்டு மாணவியர்கள் கைகோர்த்து நின்றார்கள்.  தொற்றா நோய்கள் பற்றிய கோஷங்களையும் மாணவியர் எழுப்பினர். மாணவியரோடு ரோட்டரி மாவட்டத்தின் முன்னாள் ஆளுநர் டாக்டர் விஜயகுமார், ரோட்டரி சங்கத் தலைவர் ஜோ பிரகாஷ், செயலாளர் ஆனந்த் கணேஷ், பொருளாளர் டேவிட் ராஜா மற்றம் முன்னாள் தலைவி உஷா கணேசன்;, சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் அருள்ராஜ் (முன்னாள் அகில இந்த...

திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை

படம்
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97). வயது முதிர்வு காரணமாக கடந்த மாதம் வரை வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.அவரது உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.                          அன்பழகன்மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட நாள் முதல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று டாக்டர்களிடமும், அன்பழகனின் குடும்பத்தாரிடமும் விசாரித்து அறிந்தார்.       அன்பழகனின் உடல் நிலை குறித்து விசாரிக்க மு.க.ஸ்டாலின் இன்றும் மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அவருடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட பலர் சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.       பின்னர், முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து, கூறுகையில், திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை திமுக பொதுச்செயலாளர் ...

அரசு பஸ் மரக்கிளையில் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் காயம;

படம்
: பிப்ரவரி 28, திருச்செந்தூர் அருகே அரசு பஸ் மரக்கிளையில் மோதிய விபத்தில்  டிரைவர் உள்பட 2 பேர் காயமடைந்தனர். நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு  நேற்று காலையில் அரசு பஸ் புறப்பட்டு சென்றது.  அந்த பஸ்சை ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த துரை  - வயது 37  ஓட்டிச் சென்றார். பஸ்சில்    சுமார் 30 பயணிகள் பயணம் செய்தனர். திருச்செந்தூர் அருகே கோயில்விளையை கடந்து சென்றபோது, முன்னால் சென்ற வேனை  பஸ் முந்தி செல்ல முயன்றது. அப்போது நிலைதடுமாறிய பஸ், சாலையின் வலதுபுறத்தில்  உள்ள மரங்களின் கிளைகளில் மோதியவாறு சென்றது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி  முழுவதும் நொறுங்கி விழுந்தது. இதில் டிரைவர் துரை காயமடைந்தார். உடனே டிரைவர்  திடீரென்று ‘பிரேக்‘ பிடித்து பஸ்சை நிறுத்தினார்.        அப்போது பஸ்சின் முன்பக்கத்தில் தனி இருக்கையில் இருந்த பாளையங்கோட்டை  சமாதானபுரத்தைச் சேர்ந்த ஜெயா - [25]  நிலைதடுமாறி சாலையில் தவறி விழுந்து காயமடைந்தா இந்த விபத்தில் காயம் அடைந்த ஜெயா, டிரைவர் துரை ஆகிய 2 பேர...

இன்று முதல் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிப்பு

படம்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். இந்த அறிவிப்பு உடனடியாக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மூலம் அரசாணையாக வெளியிடப்பட்டது. இதன்மூலம் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, ஜெயலலிதா பிறந்தநாளான இன்று (திங்கட்கிழமை) மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகள் பாதுகாப்பினை வலியுறுத்தும் வகையில், மனித சங்கிலி, உறுதிமொழி ஏற்பு, பேரணி, கருத்தரங்கம், தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது. அனைத்து அரசு அலுவலகங்களிலும், அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட்டைக்கு எதிரே உள்ள பொதுப்பணித்துறை வளாகத்தில் மரக்கன்று நடுகிறார். அதைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கோட்டையில் நடைபெறும் மாநில பெண் குழந்தைகள் பாத...

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக முதல்வர் அவர்கள் கலந்து கொண்ட நிகழச்சிகள்

படம்