இடுகைகள்

சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் நிறுத்தி வைப்பு : அரசு அறிவிப்பு .

படம்
தமிழ்நாடு முழுவதும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்  காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கை வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் உள்ளிட்ட தேர்வுப் பணிகள் நடைபெற உள்ளன.   இப்பணிகளுக்கு மிக அதிக அளவில் மனு பெறப்படுவதால், நேர்காணல் தேர்வு பணிகளில் மனுதாரர்கள் அதிக எண்ணிக்கையில்  கலந்து கொள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவல் முற்றிலும் நீங்காத நிலையில், நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன், சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் அரசால் நிறுத்தி வைக்கப்படுகிறது. 

MP - கனிமொழி தலைமையில் திமுக மகளிர் அணியினர் பேரணி :

படம்
  சென்னையில்ஹத்ராஸ் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கனிமொழி தலைமையில் திமுக மகளிர் அணியினர் கவர்னர் மாளிகை நோக்கி . அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து மாநி லங்களில் போராட்டம் நடக்கிறது.                                                                                                      இந்நிலையில் இன்று ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து தி.மு.க. எம்.பி.யும்,. மகளிர் அணியைச் சேர்ந்தவருமான கனிமொழி தலைமையில் கவர்னர் மாளிகை நோக்கி மெழுகு வர்த்தி ஏந்தி பேரணி சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடு...

தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியில் பைக்குகள் திருடிய இருவர் கைது : 6 பைக்குகள் பறிமுதல் - தனிப்படைக்கு எஸ்.பி - பாராட்டு

படம்
தூத்துக்குடி மாவட்டம், தெர்மல் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பைக்குகள் திருடிய இருவர் கைது, அவர்களிடமிருந்து 6 பைக்குகள் பறிமுதல் - கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. . தெர்மல்நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த சுடலைமணி மகன் சந்தனமுத்து (20) என்பவரது  இரு சக்கர வாகனம்  நகர் விலக்கு பகுதியிலும், ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூரைச் சேர்ந்த செல்லப்பா மகன் செல்வமதுகரன் என்பவரது  இரு சக்கர வாகனம் அதே பகுதியிலும், தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் மதன்குமார் (30) என்பவரது வாகனம் கீரீன் கேட் நுழைவு வாயில் அருகேயும், தூத்துக்குடி முள்ளக்காட்டைச் சேர்ந்த மூக்காண்டி மகன் முனியசாமி (27) என்பவரது வாகனம் அதே கீரீன் கேட் நுழைவு வாயில் அருகேயும், தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி மணி மகன் தினேஷ் (19) என்பவரது வாகனம் நகர் விலக்கு அருகேயும் மற்றும் விளாத்திக்குளம், பல்லாகுளத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகன் வரதராஜ் (25) என்பவரது வாகனமும் கீரீன் கேட் நுழைவு ...

உத்திர பிரதேசத்தில் சிறுமியை கொடூரமாக கொலையை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க கோரி " விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்பாட்டம்

படம்
உத்திர பிரதேசத்தில் சிறுமியை கொடூரமாக கொலையை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க கோரி " விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்பாட்டம் உத்தரபிரதேசத்தில் தலித் சிறுமியை கற்பழித்து கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க கோரியும் மத்திய அரசின் வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்கும் விதமாக மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக 5 10 2020 திங்கள்கிழமை மாலை நாலு முப்பது மணி அளவில் விவிடி சிக்னல் அருகில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது                                                                                                                             ...

காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

படம்
         தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல்  போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு - பெண்ணை மீட்டு ஒப்படைத்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.  சென்னை முகப்பேரில் உள்ள வுhந டீயலெயn என்ற சமூக சேவை அமைப்பில் பணிபுரியும் மானஷா என்பவர் தங்களது பராமரிப்பில்; மாயா என்ற பெண் இருப்பதாகவும், அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், மாயாவின் உறவினர்களை கண்டுபிடித்து அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கக்கோரி, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார் மனு அளித்தார்.  மேற்படி புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. கணேஷ் மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. அன்னராஜ் தலைமையில் பெண் தலைமைக் காவலர் திருமதி. அலாய்ஷியஸ் ரொசாரி மேக்ஸினா மற்றும் காவலர் திரு. ஆறுமுக ந...

வீடு புகுந்து தங்க நகைகளை திருடியவர் கைது - தங்க நகைகள் மீட்பு - கைது செய்த தனிப்படையினருக்கு பாராட்டு

படம்
           தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடியவர் கைது  - ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள 13 பவுன் தங்க நகைகள் மீட்பு - கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடையற்காடு தெற்கு தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி பிச்சையம்மாள் (62) என்பவர் தனது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 13 பவுன் எடை கொண்ட தங்க நகைகள் 5  மோதிரம், ஒரு கைச்செயின் மற்றும் ஒரு இரண்டு வடச்செயின் ஆகியவற்றை 15.05.2020 அன்று யாரோ வீடு புகுந்து திருடிச் சென்று விட்டதாக  16.05.2020 அன்று பிச்சையம்மாள் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் மேற்பார்வையில் ஏரல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. ம...

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கிராம விழிப்புணர்வு குழு கூட்டம்

படம்
  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி என். கே மஹாலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கிராம விழிப்புணர்வு குழு கூட்டம் (Village Vigilance Committee meeting)   நடைபெற்றது.  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எட்டயாபுரம் ரோட்டில் உள்ள என்.கே மஹாலில் இன்று (02.10.2020) கிராம விழிப்புணர்வு குழு கூட்டம் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கலைக்கதிரவன் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.   இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் கிராமபுறங்களில் உள்ள பொதுமக்கள் உட்கார்ந்து, அவரவர் பகுதிகளில் உள்ளவர்கள் குழுவாக அமர்ந்து கலந்தாய்வு செய்ய வேண்டும். இதற்கு தலைவர், செயலாளர் போன்றெல்லாம் எதுவும் தேவையில்லை. இதில் அனைத்து தரப்பட்ட மக்களும் கலந்து கொண்டு, உங்கள் பகுதிகளில் குறைகள் என்னவென்பதை அறிந்து, பொதுவான நலன் சார்ந்த கருத்துக்களை பரிமாறிக்கொண்டு, உங்கள் பகுதி முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை கண்டறிந்து அவற்றை செயல்படுத்துவதற்கான கூட்ட...