இடுகைகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சிதலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்ட

படம்
  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  --------------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.04.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே இடத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி கொரோனா வைரஸ் பரவலை தடுத்திடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்கு எண்ணிக்கை மேஜைகள் இ...

செயின்பறிப்பில் ஈடுபட்ட பிரபல கொள்ளையர்கள் - போலீஸ் சார் விரட்டி பிடித்து கைது

படம்
    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயின்பறிப்பில் ஈடுபட்ட பிரபல கொள்ளையர்களை ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் விரட்டிப்பிடித்து கைது - ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள தங்கச் செயின் மீட்பு - கைது செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.   ஆறுமுகநேரி குருஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜவஹர் மனைவி ரோஸ்மேரி என்பவர் நேற்று (19.04.2021) தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்ணைவிளை மொட்டையாசாமி கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது அங்கு நம்பர் பதிவு இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கத்தியை காண்பித்து மிரட்டி ரோஸ்மேரியின் கழுத்திலிருந்த 3 ¼ சவரன் தங்க செயினை பறித்து  சென்றுள்ளனர்.  இதுகுறித்து ரோஸ்மேரி அளித்த புகாரின் பேரில் உடனடியாக மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, அனைத்து போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு, ஆங்காங்கே காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரோந்துப் பணியிலிர...

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகள்

படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய்  கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர்  விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.  நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. வல்லுநர் குழுக்களின்  பரிந்துரைகளின் படி இரத்தக் கொதிப்பு, இதயநோய், சிறுநீரகபாதிப்பு, புற்றுநோய் போன்ற தொற்றா நோய் பாதிப்புள்ள மக்கள், கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள், முதியோர் போன்ற நோய் தொற்றினால்  எளிதில் பாதிக்கக் கூடிய நபர்களுக்கு கொரோனா தொற்று வராமல் தடுக்க களப்பணியாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  தொடர் கண்காணிப்பு, முகக் கவசம் அணிதல், அபராதம் விதிப்பு, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் முகக்கவசம் அணிதல் ஆகியவை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.                                             ...

தூத்துக்குடியிலிருந்து. இயக்கப்படும். பேருந்துகளின் இயக்க நேரம் மாற்றம் குறித்த அறிவிப்பு

படம்
  தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு நாளை 20.04.2021 முதல் அமுல்படுத்தப்படுவதை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தூத்துக்குடியிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் இயக்க நேரம் கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்யப்படுகிறது.  தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி ஃ தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் காலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை மட்டுமே இயக்கப்படும்.  தூத்துக்குடியிலிருந்து மதுரை வரை இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் காலை 04.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை மட்டுமே இயக்கப்படும்.   இவை தவிர தொலைதூர இடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்படும் என்ற விபரம் திருநெல்வேலி அரசுபோக்குவரத்துக் கழக பொது மேலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி

தூத்துக்குடி காவல்துறையினருக்கு. கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்

படம்
          தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்றது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் 2வது கட்டமாக தீவிரமாக பரவி வருகிறது.  பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்திலுள்ள விருப்பமுள்ள அனைத்து காவல்துறையினருக்கும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  அதன்படி அன்று (18.04.2021) தூத்துக்குடி மாநகர காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு தூத்துக்குடி கணேஷ் நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்க...

புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு*

படம்
      தமிழகத்தில் வரும் 20 ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்; ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்:  மே 5-ம் தேதி தொடங்க இருந்த பிளஸ் டூ தேர்வு ஒத்திவைப்பு .   புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு* தமிழகம் முழுவதும் ஏப்ரல் 20 முதல் இரவுநேர ஊரடங்கு விதிக்கப்பட்டு தமிழக அரசு அறிவித்துள்ளஅதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.* மேலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.             ஞாயிற்றுகிழமைகளில் அத்தியவாசிய பணிகளைத்தவிர முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.* இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:*  ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுடன், கீழ்க்காணும்செயல்பாடுகளுக்கும் 20.4.2021 அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது* இரவு நேர ஊரடங்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார் / பொது பேருந்து போக...

அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

படம்