இடுகைகள்

திருடு போன. இருசக்கர வாகனங்கள் - மடிக்கணினி - செல்போன்கள் மீட்பு : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

படம்
  தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 8 இடங்களில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறார்கள் உட்பட 5 பேர் கைது - ரூபாய் 1.75 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்கள், மடிக்கணினி மற்றும் 7 செல்போன்கள் மீட்பு - கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.          கடந்த சில நாட்களாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்; சில இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்தது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ், தலைமை காவலர் திரு. பென்சிங், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. மாணிக்கராஜ், தெர்மல்நகர் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. சாமுவேல், வடபாகம் காவல் நிலைய காவலர் திரு. மகாலிங்கம், தென்பாகம் காவல் நிலைய காவலர் திரு. திருமணிராஜன், முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் திரு. ம...

தூத்துக்குடி மாவட்ட சட்ட மன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

படம்
 

தூத்துக்குடி மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் : கீதாஜீவன்

படம்
  தூத்துக்குடி மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் : கீதாஜீவன்  தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக திமுக சார்பில் போட்டியிட்ட தற்போதைய எம்.எல்.ஏவும், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதாஜீவன் வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக திமுக சார்பில் போட்டியிட்ட தற்போதைய எம்.எல்.ஏவும், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதாஜீவன் 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விஜயசீலனை விட 51 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம், திருச்செந்தூர், கூட்டனி கட்சி போட்டியிட்ட ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி ஆகிய 4 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கீதா ஜீவன், மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று தூத்துக்குடி தொகுதி மக்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ள‌னர். வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி தொகுதி வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காவும் தொடர்ந்து பாடுபடுவேன் என்றார்.

தமிழ் திரைப்பட மூத்த நடிகர் செல்லதுரை காலமானார்

படம்
    தமிழ் திரைப்பட மூத்த நடிகர் செல்லதுரை காலமானார்.அவரது வயது 84. வயது முதிர்ச்சியால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் தனது வீட்டில் செல்லதுரை சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை காலமானார். இவரது மறைவுக்கு பிரபடங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி, அட்லீ இயக்கத்தில் தெறி, தனுஷின் மாரி, ரஜினிகாந்தின் சிவாஜி உள்ளிட்ட பலவெற்றித் திரைப்படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகர் செல்வதுரை.

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்.

படம்
  BREAKING: இயக்குநர் கே.வி.ஆனந்த் காலமானா். பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார். அவருக்கு வயது 54. கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு உயிர் பிரிந்தது. பத்திரிகைகளில் புகைப்பட கலைஞராக வாழ்க்கையை தொடங்கிய கே.வி.ஆனந்த், ஒளிப்பதிவாளராக தனது முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றார். கணா கண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்த கே.வி.ஆனந்த், அயன், கோ, மாற்றான், அனேகன், கவண் மற்றும் காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன் காணமல் போன பெண் நலமுடன் மீட்டு உறவினர்களிடம் சேர்த்து வைப்பு !

படம்
        தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பண்டாரவிளை அருகிலுள்ள  வண்யனூர் சார்ந்த சித்திரைச் செல்வி  (வயது 55) என்பவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல் போயிருந்தார் .                                                                                                                                                                                                                      சித்திரை செல்வியின் கணவர்    ...

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகன தணிக்கையை நேரில் சென்று ஆய்வு.

படம்
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு அமல்படுத்தி வருவது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று வாகன தணிக்கையை நேரில் சென்று ஆய்வு. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (25.04.2021) நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் ஊரடங்கு அமல்படுத்தும் பணியிலும், வாகன சோதனையிலும், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். காவல்துறையினரின் இப்பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி முதலில் இன்று (25.04.2021) தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சிட்டி டவர் சந்திப்பில்; தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஆ...