தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்களை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் இயக்குனர் திரு.மோகன் சி லாசரஸ் அவர்கள் வழங்கினார். ------------------ தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (18.05.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம், மாஸ்க், என் 95 மாஸ்க், ப்ளோமீட்டர், பல்ஸ் மீட்டர், சாணிடைசர், கையுறைகள், தெர்மல் தெர்மாமீட்டர்;, இருமல் மருந்துகள் உள்பட ரூ.5 லட்சம் மதிப்பிலான பல்வேறு கொரோனா நிவாரண உதவி பொருட்களை இயேசு விடுவிக்கிறார் அ...