இடுகைகள்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக போடப்பட்ட வழக்குகள் வாபஸ் ,

படம்
தூத்துக்குடியில் 22.05.2018 அன்று  ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி அருணாஜெகதீசன் அவர்கள் தலைமையிலான விசாhணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை 14.05.2021 அன்று தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.  இந்த அறிக்கையில் இந்த போராட்டம் குறித்து காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தேவையற்ற வழக்குகளை திரும்பப் பெற ஆணையம் பரிந்துரைத்துள்ளது.   இந்த பரிந்துரைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் அவர்களின் கருத்தும், காவல்துறைத் தலைவரின் அறிக்கையும் பெறப்பட்டு அரசால் கவனமாக பரிசீலிக்கப்பட்டது.   மேற்கூறிய பரிந்துரைகள் மற்றும் கருத்துரைகளின் அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் பின்வரும் முக்கிய முடிவுகளை  அறிவித்துள்ளார்கள்.  இந்த சம்பவம...

*கொரோனா தடுப்பு பற்றிய இணைய வழி கருத்தரங்கம்

படம்
 *கொரோனா தடுப்பு பற்றிய இணைய வழி கருத்தரங்கம்* தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் அவர்களின் அறிவுரைப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் கொரோனா கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து  21-05-2021 வெள்ளி கிழமை அன்று  ஆற்றுப்படுத்துநர்களிடம் பொதுமக்களால்  கேட்கப்பட்ட கேள்விகளை தொகுத்து இணையவழி கருத்தரங்கம் வாயிலாக பதில் கொடுக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் கேட்ட சந்தேகங்களுக்கு Dr. Vinay kumar, Joint Director Immunization, Directorate of Public Health, Chennai மற்றும் Dr. Ajay Shankar, Medical Officer, Health Department, Kovilpatti அவர்கள் விளக்கமளித்தனர். இக்கருத்தரங்கை தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி  Smt. Shelin George, Dr. Kanniyammal, APM- NHM, Thoothukudi மற்றும் Dr. Somasundaram, DTTMO, Thoothukudi அவர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.

கொரோனா பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் ஆய்வு

படம்
 தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் மகளீர் விடுதியில் கொரோனா பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான பணிகளை சமூக நலன் மகளீர் உரிமை துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் பார்வையிட்டார், மாவட்ட ஆட்சியர் மரு. கி , செந்தில்ராஜ் இ ஆ ப ,அவர்களும் ஆய்வு செய்தனர், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் , இ ஆ ப  மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான்  வட்டாச்சியர்  ஜஸ்டின், ஆகியோர் உடன் உள்ளனர்

கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள

    கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் 21.05.2021 அன்று சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்  தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய்  கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர்  விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.  நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சியில் 21.05.2021 அன்று சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்  தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலையில் வார்டு 5, எட்டையாபுரம் ஹவுசிங் போர்டு வார்டு 6, சக்திவிநாயகபுரம், வார்டு 23, பிரமுத்து விளை வார்டு 19, எஸ்.எஸ்.மாணிக்கபுரம், வார்டு ...

உண்டியலில் சேகரித்த தொகை : எம்.பி யிடம் வழங்கிய குழந்தைகள்.

படம்
 தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் பணம் குளம் கிராமம் சடையின் கிணறு காலனி பகுதியை சேர்ந்த திரு இரட்டை முத்து திருமதி வளர்மதி தம்பதிகள் மகள் இன்பசுவாதி (வயது 9 ) மகன் விசாகன் (வயது 4 ) ஆகியோர் தனது உண்டியலில் சேகரித்த தொகையினை மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களிடம் வழங்கினார்கள் அருகில் மாண்புமிகு மீன் வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு .கி செந்தில் ராஜ், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு ஊர்வசி ,அமிர்தராஜ் மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் உள்ளனர்

Kindly attend the zoom meeting webinar on 21.05.2021

படம்

21 குண்டுகள் முழங்க எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் அவர்களின் இறுதிச்சடங்கு

படம்
   கரிசல் இலக்கியத்தின் தந்தை எனவும் இலக்கிய உலகத்தால் கி.ரா என்றும் அன்போடு அழைக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் அவர்களின் இறுதிச்சடங்கு சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இடைச்செவல் கிராமத்தில் அரசு மரியாதையுடன்  21 குண்டுகள் முழங்க நடைபெற்றது. ------------------------------------------ கரிசல் இலக்கியத்தின் தந்தை எனவும் இலக்கிய உலகத்தால் கி.ரா என்றும் அன்போடு அழைக்கப்பட்ட எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் அவர்கள் முதுமையால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் 17.05.2021 அன்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று (19.05.2021) அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இடைச்செவல் கிராமத்தில் அரசு மரியாதையுடன் நடைபெற்றது.  இறுதி சடங்கு நிகழ்ச்சியில் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள், மாண்புமிகு தொழில்துறை, தமிழ் ஆட்சி மற்றும் பல தமிழ் பண்பாட்டுத் தொல்பொருள்  துறை அமைச்...