இடுகைகள்

இன்று தடுப்பூசி முகாம்கள் : 30.06.2021 இன்று தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில்

படம்
  தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் 30.06.2021 அன்று தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்  தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய்  கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர்  விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.  நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில 30.06.2021 அன்று தடுப்பூசி முகாம்கள் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் இடங்கள்   தூத்துக்குடி மாநகராட்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி - தூத்துக்குடி, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - பாளை ரோடு, மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - கணேஷ் நகர், மாநகர ஆரம்ப சுகாத...

ஆகாய தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி. பயிற்சி முகாம்

படம்
              தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் கொட்டாரக்குறிச்சியில் ஆகாய தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்தல் தொடர்பாக ஊராட்சி மகளிர் கூட்டமைப்புகளுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். --------------------- தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் கொட்டாரக்குறிச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் சார்பில் ஆகாய தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்தல் தொடர்பாக ஊராட்சி மகளிர் கூட்டமைப்புகளுக்கான பயிற்சி முகாம் இன்று (28.06.2021) நடைபெற்றது.                                                                                                         ...

தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் மற்றும் உப்பாத்து ஓடையில் நிரந்தர சீரமைப்பு பணிகள்

படம்
  தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளம் மற்றும் உப்பாத்து ஓடையில் நிரந்தர சீரமைப்பு பணிகள் மதிப்பீடு தயாரித்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். -------------------------- தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளம் மற்றும் உப்பாத்து ஓடையில் நிரந்தர சீரமைப்பு பணிகள் மதிப்பீடு தயாரித்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (28.06.2021) நேரில் சென்று ஆய்வு செய்தார்.                                                                தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளம் பகுதியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். கோரம்பள்ளம் குளம் குடிநீர் வழங்கும் ரிசர்வ் டேங்க் பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தார். கோரம்பள்ளம் குளம் பொட்டல்காடு மதகு பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு ...

தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெரு " காமராஜர் " மஹாலில் கொரானா தடுப்பூசி முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலகம் சார்பாக  தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெரு *காமராஜர் மஹாலில்*  *29-06-2021*  செவ்வாய்க்கிழமை  அன்று காலை *9-30* மணியிலிருந்து கொரானா தடுப்பூசி  முகாம் நடைபெறுகிறது. 18 வயதிற்கு கொள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள் தடுப்பூசி போட விருப்பமுள்ளவர்கள்     கொடுக்கப்பட்டுள்ள   9443132119   என்ற   தனது வாட்ஸ் அப் எண்ணில்      தொடர்பு கொண்டு  தங்களுடைய பெயர் மற்றும்  செல்போன் என்னை  பதிவு செய்து கொள்ளுமாறு   பணிவுடன் கேட்டுக் கொள்கிறார்  "சுகன்யா S செந்தில் குமார் "    மேலும்  நண்பர்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு கொரானா இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு  வழங்கும் மாறும்  வேண்டுகோள் விடுத்துள்ளார்

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவமனை மருத்துவ அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்

படம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சுகாதார திட்ட பணிகள் இயக்க திட்ட இயக்குநர் டாக்டர் எஸ்.உமா, இ.ஆ.ப., தலைமையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில்  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவமனை மருத்துவ அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் அன்று (25.06.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுகாதார திட்ட பணிகள் இயக்க திட்ட இயக்குநர் டாக்டர் எஸ்.உமா, இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை மக்கள் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு மருத்துவமனை மட்டுமின்றி காப்பீட்டு திட்டத்தில் இணைக்கபட்டுள்ள தனியார் மருத்துவமனையிலும் கொரோனா சிகிச்சைக்கு காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்கள். எளிய மக்களுக்கு உதவிடும் திட்டமான காப்பீட்டு திட்டத்தின்கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி மற்ற நோயாளிகளுக்க...

கொரோனா கட்டுப்பாட்டு அறை (WAR ROOM ) அலுவலர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பாராட்டி சான்றிதழ்

படம்
  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை (WAR ROOM )     அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார் -------------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் 24  x  7 (WAR ROOM )   பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (24.06.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு அலுவலர்கள் அனைவரையும் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாட்டு அறை   (WAR ROOM)  பல்வேறு துறை அலுவலர்கள் ஒன்றாக ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றினீர்கள். அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன். கொரோனா ஊரடங்கு நேரத்திலும் பணிக்கு வருவது ஒரு கடினமான விசயமாக இருந்திருக்கும். ஒருசில க...

கடந்த வாரம்; சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பாராட்டு

படம்
            தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த வாரம்; சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.   ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் கடந்த 17.06.2021 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை குற்ற பின்னணி உள்ள 3 போக்கிரிகள் மற்றும் ஒரு எதிரியை கைது செய்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அருள், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. மாணிக்கராஜ், முதல் நிலை காவலர்கள் திரு. சாமுவேல், திரு. மகாலிங்கம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக சங்கர் என்பவரை கொலை செய்ய முயன்ற எதிரிகள் மூவர...