இடுகைகள்

தருவைக்குளம் காவல் நிலைய காவலர் சாலை விபத்தில் காலமானர்

படம்
  தூத்துக்குடி மாவட்டம்,  தருவைக்குளம் காவல் நிலைய காவலர் கனகவேல்;  அவர்கள் சாலை விபத்தில்   16-07-2021  அன்று காலமானார். அன்னாரது உடலுக்கு   தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  தருவைக்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் திரு. கனகவேல் (26) அவர்கள், அவரது சொந்த ஊரான சூரங்குடி அருகேயுள்ள தங்கம்மாள்புரத்திற்கு பைக்கில் சென்றுவிட்டு, தருவைக்குளம் காவல் நிலையத்திற்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக வடக்கிலிருந்து தெற்காக திரும்பி வரும்போது பாலார்பட்டி விலக்கில் வந்தபோது எதிரே வந்த டாட்டா ஏஸ் என்ற வாகனம் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 17.07.2021 அன்று அவரது உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  அவரை தொடர்ந்து தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்...

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் ஆய்வு

படம்
  தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். ---------------------------- தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் இன்று (17.07.2021) ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின்போது சமூக நல இயக்குநர் திருமதி.டி.ரத்னா, இ.ஆ.ப., அவர்கள், சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் திருமதி.எஸ்.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.                தூத்துக்குடி ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு பாதிக்கப்பட்ட மகளிருக்கு ஆலோசனைகள் கூறும் பகுதிகளையும், தங்கும் பகுதிகளையும் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து அடைக்கலாபுரம் செயின்ட் ஜோசப் அறக்கட்டளையில் புனித சூசையப்பர் மழலையர் இல்லத்தில் உள்ள 1 வயதுக்கும் கீழ...

சமூக நலத்துறை மண்டல அளவிலான ஆய்வு கூட்டம்

படம்
  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது  ------------------------------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தலைமையில் இன்று (17.07.2021) நடைபெற்றது. கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அரசு முதன்மை செயலாளர் திரு.ஷம்பு கல்லோலிகர், இ.ஆ.ப., அவர்கள், சமூக நல இயக்குநர் திருமதி.டி.ரத்னா, இ.ஆ.ப., அவர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் இயக்குநர் திருமதி.வி.அமுதவல்லி, இ.ஆ.ப., அவர்கள்  சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் திருமதி.எஸ்.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள்   மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் உங்கள் த...

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ,மாவட்ட சிறுதொழில் சங்கம், மாவட்டம் தொழில் மையம் இணைந்து Entrepreneurs Clinic துவக்கம்

படம்
     --------------------- தூத்துக்குடி ராம்நகர் துடிசியா அரங்கில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தூத்துக்குடி மாவட்ட சிறுதொழில் சங்கம் (துடிசியா), தூத்துக்குடி மாவட்டம் தொழில் மையம் இணைந்து     Entrepreneurs Clinic துவக்க நிகழ்ச்சி இன்று (15.07.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.. அவர்கள் பங்கேற்று Entrepreneurs Clinic சேவையை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.  இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.. அவர்கள் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டும் வகையியை வழங்க வேண்டும் என தெரிவித்தார்கள். அதனடிப்படையில் தமிழகத்தில் முதன்முதலாக தூத்துக்குடி துடிசியாவில் இச்சேவை துவக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி பகுதி மக்களுக்கு தொழில் தொடங்குவது என்பது ரத்தத்தில் ஊறியுள்ளது. வெள்ளையனை எதிர்த்து கப்பல் ஓட்டிய வ.உ.சிதம்பரனார் பிறந்த மண் இது. கோவிட் 19 கொரோனா பாதிப்பால் தொழில் து...

தூத்துககுடியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 119வது பிறந்தநாள் விழா

படம்
  அனைவருக்கும் இலவச கல்வி தந்த   பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்  119வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் அனைத்து தரப்பினராலும் பெருமிதத்தோடு கொண்டாடப்பட்டது .                                         அந்த வகையில் தமிழ் நாடு காமராஜ் பேரவை சார்பில் தூத்துக்குடி  பிரையண்ட் நகர்  பிரதான பகுதியில்  அலங்கார மேடையில்  பெருந்தலைவர் திரு உருவ படம் அமைத்து   தமிழ்நாடு காமராஜ் பேரவையின் நிர்வாக பெருமக்களால் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது . பின்னர்   நிர்வாகிகளால் கேக் வெட்டி, இனிப்புகள் , பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது                                                                     பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் தன்னலமற்ற சேவைகளையும் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி  வ...

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையio

படம்
 . தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.  ----------------------- தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா இன்று (15.07.2021) நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.  இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இன்று புறக்காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விற்கப்படும் மீன்களுக்கு நல்ல மரியாதை உள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்கள் சென்னை, பெங்களுர் மற்றும் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செ...

தன்னார்வலராக பணியாற்றிய மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்

படம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் தன்னார்வலராக பணியாற்றிய மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். ------------------------------ தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் தன்னார்வலராக பணியாற்றிய மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று (14.07.2021)  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு தன்னார்வலராக பணியாற்றிய 36 மாணவர்களுக்கும், 12 தொண்டு நிறுவனங்களுக்கும், 30 தன்னார்வலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நேரத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துள்ளீர்கள். மாவட்ட நிர்வாகத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலர்களும், காவல் துறையின...