இடுகைகள்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை. அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் துவக்கி வைத்தார்

படம்
      தூத்துக்குடி. மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் துவக்கி வைத்தார். ---------------------- தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  அவர்கள் தலைமையில் இன்று (05.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.மார்க்கண்டேயன் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது, சுகாதாரத்துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியினை மாண்புமிக...

நாசரேத் கராத்தே மாணவர்கள் மாநில அளவிலான கராத்தே போட்டிக்கு தேர்வு

படம்
        நாசரேத் கராத்தே மாணவர்கள் மாநில அளவிலான  கராத்தே போட்டிக்கு தேர்வு தூத்துக்குடியில் சாரா கலை பள்ளியில் வைத்து கடந்த  23- 07-2021 வெள்ளி கிழமை அன்று    தூத்துக்குடி மாவட்ட அச்சிவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில்  நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள், மாநில கராத்தே போட்டிக்கு தகுதி பெற்றனர் .  போட்டியில் வெற்றி பெற்று  மாநில போட்டிக்கு  தகுதி பெற்ற முன்னாள் அமைச்சரும்,  அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதன் பரிசு வழங்கி வாழ்தினார். இதில் அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் திருப்பார்கடல், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் காசி; மற்றும் பலர் கலந்து கொண்டு ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கனையும் பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டர் டென்னிசன்னை பாராட்டினார்கள்.

இராஜகோபாலன் கோசாலையின் சார்பாக படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டுகள்.

படம்
                                                                                                                                                     02-08-2021. திங்கள் கிழமை  அன்று    மாலை தூத்துக்குடி முத்தையாபுரம் அருகிலுள்ள ராஜீவ் நகர் பகுதிகளில், வாழும் உப்பள தொழிலாளர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு , தூத்துக்குடி அகிலாண்டபுரம் பாஞ்சாலங்குறிச்சி செங்கமலம் இராஜகோபாலன்கோசாலையின் சார்பாக இலவச நோட்டுகள் வழங்கப்பட்டன. இதில் ஐம்பதிற்கும் மேற்ப்பட்ட பள்ளி குழந்தைகள் பயனடைந்தனர். மேலும் இந்நிகழ்சியில் சிறப்பு அழைப்பாளராக உயர்திரு விஜயன் அவர்கள் செந்தில் ஆண்டவர் அறக்கட்டளையின் சார்பில் கலந்து கொண்டு பள்ளி மாணவர...

புதுக்கோட்டை குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி துவக்கி வைப்பு : மேலும், திருச்செந்தூர் வட்டம் உடன்குடி, அடைக்கலாபுரம் பகுதியில் கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிக்கும் இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு .

படம்
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். மேலும், திருச்செந்தூர் வட்டம் உடன்குடி, அடைக்கலாபுரம் பகுதியில் கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிக்கும் இடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ------------------------- தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை குளத்தினை வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் மற்றும் தொழில் நிறுவனத்தின் மூலம் குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் துவக்க நிகழ்ச்சி இன்று (03.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகளை துவக்கி வைத்து பார்வையிட்டார்.                                                                                             ...

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் ஜெனரேட்டரை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார்

படம்
                                                  :       தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் ஜெனரேட்டரை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார். மேலும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 11 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான ஆதார நிதியுதவி மற்றும் 30 மகளிருக்கு மானிய விலையிலான இருசக்கர வாகனங்களை வழங்கினார். - -----------------------------------   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் ஜெனரேட்டர் திறப்பு நிகழ்ச்சி மற்றும் கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீடுகள் திறப்பு நிகழ்;ச்சி  கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ...

நெல்லை மாவட்டம் கேடிசி நகர் தெற்கு பகுதி திமுக சார்பில். "கொரோனா தடுப்பு ஊசி முகாம் "

படம்
31 7 2021 சனிக்கிழமை நெல்லை மாவட்டம் கீழநத்தம் பஞ்சாயத்து கேடிசி நகர் சமுதாய நலக் கூடத்தில் கொரோனா தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது                                     .                                                                       ...                                                                           இந்த தடுப்பூசி முகாமில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது  .                          .   ...

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக. கொரோனா தொற்று பரவல் 3வது அலை தடுப்பு விழிப்புணர்வு. நடவடிக்கைகள்

படம்
     தூத்துக்குடி   மாவட்ட காவல்துறை சார்பாக தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் 3வது அலை தடுப்பு விழிப்புணர்வு விளம்பர பலகையை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, துப்புரவு பணியாளர்கள், ஏழைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசிப்பை மற்றும் கபசுரக்குடிநீர் வழங்கினார். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் புறக்காவல் நிலையத்தில்; 3 இடங்களில் கொரோனா தொற்று பரவல் 3வது அலையை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பலகை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த கொரோனா விழிப்புணர்வு விளம்பர பலகையை இன்று (01.08.2021) தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து விழிப்புணர்வு உரையாற்றினார். பின்னர் இந்நிகழ்ச்சியில் துப்பரவுபணியாளர்கள் மற்றும் ஏழை எள...