இடுகைகள்

கடலைமிட்டாய் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி முகாம்

படம்
 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எல்.ஜி செல்வ மஹாலில் இந்திய பேக்கேஜிங் நிறுவனம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்திய கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்.இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்  ---------------------------  தூத்துக்கு மாவட்டம் கோவில்பட்டி எல்.ஜி செல்வ மஹாலில் இந்திய பேக்கேஜிங் நிறுவனம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்திய கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்.இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, பயிற்சி முகாம் கையேட்டினை வெளிட்டார்கள்.  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்.இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:- தமிழ்நாட்டில் 5 மாவட்டத்தில் உள்ள உற்பத்தி பொருட்களை சந்தை மதிப்பில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக புதிய சந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பேக்கேஜிங் உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டு பயிற்சி வகுப்பு இன்று துவக்கி வைக்கப்படுகிறது . நமது தூத்துக்குடி மாவட்டத்தில்தான்முதல...

"பேரலையின் பிரவேசம்".

படம்

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் அரியவகை பறவைகள்

படம்
  தூத்துக்குடி துறைமுகம் செல்லும் சாலையில் சுற்றுலா மாளிகைக்கு எதிரே உள்ள கடல் நீர் மற்றும் கடல் தாவரங்கள் வளர்ந்த பகுதியில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து இறங்கி அப்பகுதியில் தங்களது இரைகளை தேடிக்கொள்கின்றன இந்தப்  பாதையில் செல்வோர் தங்களது வாகனத்தை நிருத்தி  பறவைகளை  கண்டு களித்து  தங்களது செல்போன்களில் படம் எடுத்து செல்கின்றனர் இந்த பறவைகள் நாரை இன வகை சார்ந்தது என சொல்லப்படுகிறது

200 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு -. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை.

படம்
  23.12.2021. தூத்துக்குடிவட்டத்தில் கொலைமுயற்சி, போக்சோ மற்றும் கஞ்சா விற்பனை செய்த வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகள் 5 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - இந்த ஆண்டு இதுவரை 200 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை.  கடந்த 28.10.2021 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ராஜா (எ) புஷ்பராஜ் (32), த/பெ. ராமராஜ், வீரவாஞ்சி நகர், கோவில்பட்டி என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதியை சேர்ந்வர்களான 1) சின்னராசு (32), தஃபெ. முத்துபாண்டி, 2) சக்திமணி (22), தஃபெ. கணேசன், 3) முத்துபாண்டி (27), தஃபெ. கருத்தப்பாண்டி, 4) கார்த்திக் (எ) அட்ட கார்த்திக், 5) பொன்னுதுரை (27), தஃபெ. செண்பகவேல், மற்றும் 6) சரவணன், (34), தஃபெ. கனி ஆகிய 6 பேரையும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.  மேற்படி இவ்வழக்கின் முக்கிய எதிரிகளான சக்திமணி மற்றும் பொன்னுதுரை மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க...

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு

படம்
 தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 18 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.   சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கின் எதிரிகளை போலீஸ் காவலுக்கு எடுத்து அவர்களிடமிருந்து வழக்கின் சொத்தான 45 பவுன் தங்க நகைகளை மீட்ட சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர் சங்கர், காவலர்கள் சதீஷ் மற்றும் திவான் பாட்ஷா ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,   ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டு இருப்பது போன்ற வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த வழக்கின் எதிரிகள் 2 பேரை கைது செய்தும், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 70 வழக்குகளை லோக்அதாலத் நீதிமன்றத்தில் முடித்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், முதல் நிலை காவலர் அனுசங்கர் மற்றும் தனிப்பிரிவு காவலர் சுப்பிரமணியன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காக...

தூத்துக்குடி SMS இசை மற்றும் நாட்டியப்பள்ளி மாணவிகளின் நாட்டியாஞ்சலி

படம்
20-1-2021 திங்கள்கிழமை  ஆருத்ரா தரிசன நன்னாளில் திருமந்திரநகர். தூத்துக்குடி அருள் மிகு கைவல்ய மடலாயம் நடராசப்பெருமான் ஆலயத்தில் ...தூத்துக்குடி     SMS இசை மற்றும் நாட்டியப்பள்ளி மாணவிகளின் நாட்டியாஞ்சலி  நடைபெற்றது.  இந்த ஆலயத்திற்கு.  வந்த பக்தர்கள் அனைவரும் SMS இசை மற்றும் நாட்டியப் பள்ளி மாணவிகளின்  நாட்டியாஞ்சலியை  பக்தி பரவத்தோடு ரசித்தார்கள்

தமிழக ஆளுநர் தூத்துக்குடி வருகை

படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாண்பு மிகு தமிழக ஆளுநர் திரு ஆர் .என் ரவி அவர்களை மாவட்ட ஆட்சிதலைவர்   மரு.கி.செந்தில்ராஜ்  இ.ஆ.ப அவர்கள் விமானநிலையத்தில்  வரவேற்றார்