இடுகைகள்

மகளிர் தினத்தில் மகளிருக்கான சிறப்பு தொழில் ஊக்குவிப்பு முகாம்

படம்
மகளிர் தினத்தில் மகளிருக்கான சிறப்பு தொழில் ஊக்குவிப்பு முகாம்     தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயமாகத் தொழில் தொடங்கி வருவாய் ஈட்டவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் 25 முதல் 35 சதவிகிதம் வரை மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்களை தமிழக அரசு மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கி வருகிறது. படித்த வேலைவாயப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ,  (PMEGP)  புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில நிறுவன மேம்பாட்டுத் திட்டம்   (NEEDS)  மற்றும் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்  (PMEGP)   ஆகிய மூன்று திட்டங்களின் மூலமும் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கடன் பெற்று சுயதொழில் தொடங்கி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.  இம்மூன்று திட்டங்களிலும் மகளிருக்கு 50சதவிகித ஒதுக்கீடு செய்யப்பட்டு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களுக்கான அழகு நிலையம், ஜவுளி வியாபாரம், தையல் தொழில், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், உடற்பயிற்சி நிலையங்கள், உணவுப் பொருட்கள் பதப...

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக. ஜெகன் பெரியசாமி போட்டியின்றி தேர்வு

படம்
  தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட திமுக சார்பில் அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீயிடம் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேறு யாரும் போட்டியிடாததால் ஜெகன் பெரியசாமி போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மேயருக்கான அங்கி, ஜெகன் பெலியசாமிக்கு அணிவிக்கப்பட்டு அவருக்கு 111 பவுன் தங்கச் செயின் மற்றும் வெள்ளி செங்கோலை மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக எல். பாலாஜி சரவணன் இன்று (02.03.2022) பொறுப்பேற்பு

படம்
   சென்னை பெருநகர காவல் துணை ஆணையர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் இன்று காலை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்பு. சென்னை பெருநகர காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்த டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் இன்று (02.03.2022) காலை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.  பொறுப்பேற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் எவ்வித பாரபட்சமுமின்றி சட்டம் ஒழுங்கு முழுமையாக பராமரிக்கப்படும்,  மாவட்டம் முழுவதும் அனைத்து சமுதாய உறுப்பினர்களுடன் காவல்துறையினர் நல்லுறவு வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தப்பட்டு சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகளை அறிந்து தீர்த்து வைப்பதற்கான சிறந்த சமுதாயக் காவல் பணி மேற்கொள்ளப்படும்.   சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுப்பதில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் எவ்வித பாரபட்சமுமின்றி சட்டப்படி க...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்

படம்
 

ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் செயற்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம்

படம்
  ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் செயற்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம் மதுரையில் 27-2 -2022 ஞாயிற்று கிழமை  அன்று நேற்று  ஹோட்டல் டியூக் - ல் ஜனநாயக மக்கள் உரிமை கழக செயற்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம் மாநில   நிர்வாகிகள் முன்னிலையில் ஜனநாயக மக்கள் உரிமை கழகம் மனித உரிமை கழகம் நிறுவனர் தலைவர் ஹியூமன் ரைட்ஸ் டுடே மாத இதழின் ஆசிரியருமான டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது கொரோனா  நோய்த்தொற்று பரவல்  காலகட்டமான  கடந்த 2 ஆண்டுக்கு பின் கூடிய நிர்வாக செயற்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம் தமிழ்தாய் வாழ்த்துடன்  தொடங்கியது  ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் நிறுவனர் தலைவர் டாக்டர் சுந்தர் அவர்களின் தாயார்  மறைவுக்கும் , மறைந்து போன ஜனநாயக மக்கள் உரிமை கழகம் நிர்வாகிகளுக்கும், நிர்வாகிகளின் குடும்பத்தில் மறைந்து போன உறவுகளுக்கும்  ஒரு  நிமிடஅஞ்சலி  அனுஷ்டிக்கப்பட்டது பின்பு மாவட்ட வாரியாக மாவட்ட நிர்வாகிகளிடம் வளர்ச்சி குறித்தும் பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்...

நாசரேத் நகர அ.இ.அதிமுக இளைஞரணி சார்பாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா

படம்
  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு நாசரேத் நகர அ.இ.அதிமுக இளைஞரணி சார்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ். பி. சண்முகநாதன்  அவர்கள் வழிகாட்டுதலின்படி நாசரேத் ரயில்வே நிலையம் எதிரில் நாசரேத் நகர இளைஞரணி செயலாளர் கராத்தே டென்னிசன் தலைமையில்   நாசரேத் நகர அ.இ.அதிமுக இளைஞரணி சார்பாக  மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா  கொண்டாடப்பட்டது   இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் ஞானையா அவர்கள் கழகப் பிரமுகர் பெரியதுரை, 12வது வார்டு கவுன்சிலர் ரவீந்திரன், நாசரேத் நகர துணை செயலாளர் முருகேசன், நகர இளைஞரணி துணைச்செயலாளர் பிரபு, நாசரேத் நகர இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஜெயக்குமார், வார்டு செயலாளர் கணேசன், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தேசிய அளவிலான வூசூ போட்டிக்கு. தூத்துக்குடி திருஇருதய மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேர்வு

படம்
 தேசிய அளவிலான வூசூ  போட்டிக்கு தூத்துக்குடி  திருஇருதய மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேர்வு. கடந்த மாதம் 27 , 28 தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வூசூ  போட்டியில்  திருஇருதய மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் கலந்து கொண்டனர்.  நாற்பத்தி ஐந்து கிலோ எடை பிரிவில் மாணவர்கள் அருண்குமார் தங்கப்பதக்கமும் , 52 கிலோ எடைப்பிரிவில் மாணவர் முத்துவேல் தங்கப்பதக்கமும், இருபத்தி எட்டு கிலோ எடைப்பிரிவில் மாணவர் அசோக்குமார் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். தங்கம் மற்றும் வெள்ளி வென்ற மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.   வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  இவ்விழாவில் பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி அண்டனி சாரால் ரோஸ் அவர்களும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கருப்பசாமி மற்றும் பயிற்சியாளர்கள் சாலமோன், சுடலை கண் ஆகியோர் கலந்து கொண்டனர் . பள்ளியின் தாளாளர் அவர்களும் மற்ற ஆசிரியப் பெரு மக்களும் வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சியாளர் களையும் பாராட்டி கௌரவித்தனர்.  விழா ஏற்பாடுகளை பள்ளியி...