இடுகைகள்

தூத்துக்குடியில் மேம்பாலம் பணிகள்: போக்குவரத்து மாற்றம் - ஆட்சியர் தகவல்!

படம்
  தூத்துக்குடியில் மேம்பாலம் பணிகளில்  32 ராட்சஷ காண்கிரிட் தூண்கள் பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (நவ.2) முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட  மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் செய்திக்குறிப்பு :  தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், திருச்செந்தூர் வஉசி துறைமுகம்,ஸ்பிக் செல்லும் ரவுண்டானாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினால் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேற்படி பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் சாலைபணிகள் முடிக்கப்பட்டு மத்தியில் ராட்சஷ காண்கிரிட் தூண்கள் 32 எண்ணம் அதற்கான இடத்தில் பொறுத்தும் பணி மிகவும் முக்கியமானது ஆகும்.  மிகுந்த கவனத்துடன் இப்பணிகளை செய்வதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர், தூத்துக்குடி திட்ட செயலாக்க பிரிவு முனைப்புடன் அதற்கான ஆயத்த பணிகளை செய்து மேற்படி  பாலம் 2023 பெப்ரவரி மாத்த்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்நேர்வில் இப்பாலம் அமைப்பதில் முக்கிய பணியான 32 தூண்களை பொறுத்தும் பணி 2.11.2022 முதல் 11.11.2022 வரை நடைபெறவுள்ளது. •...

சிறுபான்மையின மாணவ - மாணவியர்களுக்கு. மத்திய அரசின் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

படம்
  03.11.2022 சிறுபான்மையின                                மாணவ - மாணவியர்களுக்கு.            மத்திய அரசின் கல்வி உதவித்தொகை       விண்ணப்பிக்க கால நீட்டிப்பு          தூத்துக்குடி  மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்             தமிழ்நாட்டில் வசிக்கும் இசுலாமியர், கிறித்துவர், சீக்கியர், பார்சி, ஜெயின் மற்றும் புத்த மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய -  மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ஆம் கல்வியாண்டில் பள்ளி படிப்பு (ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை)பயிலும் மாணவஃமாணவியர்கள் விண்ணப்பிப்பதற்கு 15.11.2022 வரையிலும், பள்ளி மேற்படிப்பு (11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை) மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி (தொழிற்கல்வி- தொழில்நுட்பக்கல்வி) பயிலும் மாணவ - மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு கால அவகாசம் 30-11-2022 வரை,...

பூஜை பொருள் விற்பனை செய்யும் கடையில் தீ

படம்
தூத்துக்குடியில் சிவன் கோயில் அருகே பூஜை பொருள் விற்பனை செய்யும் கடையில்    ஏற்பட்ட   தீவிபத்தில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் தூத்துக்குடியில் உள்ள பழமைவாய்ந்த சிவன் கோயில் அருகே உள்ள மில்லர்  புரத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக பூஜை பொருள் மற்றும் கொலு பொம்மைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.  நேற்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்து விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென கடை தீப்பிடித்து எரிந்துள்ளது.       இதையறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து  தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். எனினும் கடையில் இருந்த பூஜை பொருட்கள் மற்றும் கொழு பொம்மைகள் உட்பட ரூபாய் .2லட்சம் மதிப்புள்ள பாெருட்கள் எரிந்து சேதம் ஆனது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது  இதுகுறித்து மத்தியபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறா

அனைவருக்கும் நமது எழுத்தாணியின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

படம்
 

தூத்துக்குடியில் புத்தகத் திருவிழா ஆரம்பம்

படம்
                              நாள்.22.10.2022 தூத்துக்குடி ஏ.வி.எம். மஹாலில் மாவட்ட நிர்வாகம் சார்பாக  புத்தகத் திருவிழா – 2022 நவம்பர் 22 முதல் நவம்பர் 30 வரை நடைபெறவுள்ளது  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல். ------------------------------- தூத்துக்குடி ஏ.வி.எம். மஹாலில் மாவட்ட நிர்வாகம் சார்பாக புத்தகத் திருவிழா – 2022, நவம்பர் 22 முதல் நவம்பர் 30 வரையில் (22.11.2022  -30.11.2022) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.  புத்தகத் திருவிழா – 2022 தொடர்பான இலச்சினையை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப. அவர்கள், மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.பெஜெகன் அவர்கள், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சி.சண்முகை...

கராத்தே வீரருக்கு "வீரக்கலை வித்தகர்" விருது.

படம்
 நாசரேத் கராத்தே வீரருக்கு வீரக்கலை வித்தகர் விருது.  20-10-2022  வியாழக் கிழமையன்று தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள மூக்குபேரி  கிராமத்தில். . கிராமப்புற தமிழ் மன்றத்தின் சார்பாக மாதாந்திர கூட்டம்  நடைபெற்றது. இந்த மாதாந்திர கூட்டத்திற்கு தமிழ் மன்ற நிறுவனர் கவிஞர் தேவதாசன் வரவேற்பு உரையாற்ற தமிழ் மன்ற பணியாளர் அரிமா வி.வி.ன் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார் .  தமிழ் மன்றத்தின் சார்பாக  நாசரேத் பகுதியில் உள்ள   மாணவ, மாணவியற் களுக்கு  தற்காப்பு கலைகளான கராத்தே, சிலம்பம் போன்ற கலைகளில்  சிறப்பான பயிற்சியளித்து  மாவட்ட, மாநில, மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க  செய்து , வெற்றியை  பெற செய்த  ஆலன் திலக் கராத்தே பள்ளி மாஸ்டர் டென்னிசன் அவர்களுக்கு வீரக்கலை வித்தகர்  என்ற விருது வழங்கப்ட்டு  கௌரவிக்கப்பட்டது  டென்னிசன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார். நிறைவாக தமிழ் மன்ற பணியாளர் முனைவர் மோசஸ் தயான் நன்றி கூறினார். மூக்கு பேரி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

சாயர்புரத்தில் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் தூய்மை பணி.

படம்
 சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் சாயர்புரத்தில் தூய்மை பணி.   கடந்த 14-10-2022  வெள்ளி கிழமையன்று   சாயர்புரத்தில்  உள்ள டாக்டர். ஜி. யு. போப்  பொறியியல்  கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் சார்பில் மாணவ மாணவிகள் தூய்மை இந்தியா தினத்தை ஒட்டி சாயர்புரம் பகுதியில் தூய்மை பணி நடைபெற்றது.      இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் திரு. ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக சாயர்புரம் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி திரு.சுப்பிரமணியன்  தொடங்கி வைத்து தூய்மை இந்தியா பணியை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.  வார்டு கவுன்சிலர் திரு.கண்ணன், மேற்பார்வையாளர் திரு.நித்திய கல்யாண் உறுதிமொழி கூறினார். மாணவ மாணவிகள் சாயர்புரம் தெருவில்  தூய்மை பணி செய்தனர்.  இந்த நிகழ்ச்சியை நாட்டு நல பணி திட்ட அலுவலர் உதவி பேராசிரியர் சா.டென்னிசன் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் இயந்திரவியல் துறை தலைவர் திரு.கனிசெல்வன், திரு.தாமஸ், திர...