இடுகைகள்

538 காவல்துறையினருக்கு பணி மாறுதல் : தூத்துக்குடி மாவட்ட எஸ். பி. உத்தரவு

படம்
*தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றிய  இரண்டாம் நிலை காவலர்கள், முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள மொத்தம் 538 காவல்துறையினருக்கு கலந்தாய்வின் மூலம் விருப்பப்பட்ட காவல் நிலையங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் பொதுமாறுதல் வழங்கி உத்தரவு.* *தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல்துறையினருக்கு இரண்டாம் கட்டமாக  22.12.2022 அன்று  மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து, அவர்களிடம் நேரடியாக கேட்டு, காவல் நிலையங்களில் உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப அவர்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் இன்று பொதுமாறுதல் வழங்கினார்.   கடந்த 19.12.2022 அன்று முதற்கட்டமாக 271 காவல்துறையினருக்கு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதனையடுத்து   தூத்துக்குடி ஊரகம், கோவில்பட்டி, மணியாச்சி, விளாத்திகுளம் உட்கோட்ட காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் 3 ஆண்டுகள் பணி முடித்த இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிற...

39வது மண்டல அளவிலான விளையாட்டு போட்டி

படம்
தூத்துக்குடி தருவை மைதானத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை இணைந்து நடத்தும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கிடையேயான 39வது மண்டல அளவிலான விளையாட்டு போட்டியை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை நடத்தும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கிடையேயான 39வது மண்டல அளவிலான விளையாட்டு போட்டி இன்று (21.12.2022) தொடங்கி 3 நாட்கள் தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி, பின் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.  இதில் முதல் போட்டிகளில் திருநெல்வேலி மண்டல அளவில் 300 மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், விளையாட்டு போட்டிகளில் ஒரு இலக்கோடு விளையாடினால்தான் வெற்றிபெற முடியும், அதே போல் நமது வாழ்க்கையிலும் நமக்கென்று ஒரு இலக்கை அமைத்து கொண்டு அதை நோக்கி சென்றால்...

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

படம்
     தூதுக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் இன்று ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமயில் நடைபெற்றது.   தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படைக்கு 35 ஆண்கள் 6 பெண்கள் என 41 பேர் ஊர்க்காவல் படை வீரர்களாக (ர்ழஅந புரயசனள) தேர்வு செய்யப்பட உள்ளனர் எனவும், விண்ணப்பதாரர்கள் இன்று (21.12.2022) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் உரிய சான்றிதழ்களுடன் ஆஜராகுமாறு கடந்த 14.12.2022 அன்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.  அதன்படி இன்று (21.12.2022) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 52 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 389 பேர் ஆஜராகியிருந்தனர். ஆஜரான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் உயரம், கல்வித்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைைமயில் நடைபெற்றது.  இத்தேர்வு தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், ஆயு...

டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் இளைஞர்களின் தனித் திறன்கள் பதிவு செய்யும் நிகழ்ச்சி

படம்
  இளைஞர்களின் தனித் திறன்கள் பதிவு செய்யும் நிகழ்ச்சி கடந்த 13-12-2022  திங்கள் கிழமை அன்று சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல்  கல்லூரியில் இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கீழ் செயல்படும்   தூத்துக்குடி மாவட்டம்  நேரு யுவகேந்திரா  மற்றும் நாட்டு நல பணித்திட்ட சார்பாக இளைஞர்களின் தனித் திறன்கள் பதிவு செய்யும் நிகழ்ச்சி. சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப்  பொறியியல்  கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் தன்னார்வலர் செயற்கை திட்டத்தின் மூலம் இளைஞர்களின் தனித் திறன்கள் பதிவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது  இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் திரு. ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார்.  கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். நேரு யுவகேந்திரா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு.இசக்கி மற்றும் ஏகம்பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ஆறுமுகம் முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மாணவ மாணவிகள்  உற்சாகமாக  கலந்து கொண்டனர். இந்த...

தூத்துக்குடியில் ஜனநாயக மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் "மனித உரிமை தின " விழா

படம்
 மனித உரிமை தின விழா தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் மனித உரிமை தின விழா 10 -12 -2012 சனிக்கிழமை அன்று தூத்துக்குடி கனி ரெசிடென்சியில்  சிறப்பாக நடைபெற்றது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலோடு துவங்கிய இந்த நிகழ்ச்சியில்  தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் பொருளாளர் வழக்கறிஞர் திரு P. ரமேஷ் B.A B.Lஅவர்கள் வரவேற்புரை ஆற்றினார் தலைமை உரையாக தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் தலைவர்  வழக்கறிஞர் திரு T.J கார்த்திகேயன் அவர்கள்  தனது உரையில் மாவட்ட ,தாலுகா, ஒன்றிய நிர்வாகிகளிடம் அமைப்பின் வளர்ச்சி குறித்தும் நமது அமைப்பின் சார்பாக மக்கள் பணிகளான சட்ட விழிப்புணர்வு மற்றும் மனித உரிமை மீறல் நடைபெறுவதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை பற்றி ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் நிர்வாகிகளிடம் விளக்கங்கள் அளித்தார் தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் மாவட்ட செயலாளர்  திரு N. சுவாமிநாதன் அவர்களும் தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் புறவலரும், AVL குரூப் ஆஃப் இன்ஜினியரிங்  MD யுமான திரு A. V ...

பள்ளி குழந்தைகளுக்கு யோகா பயிற்சி

படம்
 1-12-22 வியாழக்கிழமை அன்று தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில்  அமைந்துள்ள  இந்து அரிசனதுவக்கப் பள்ளியில் வைத்து  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கும்  இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பயிற்சி நிலைய மருத்துவர் உயர்திரு திருமுருகன் அவர்கள் தலைமையில் காந்திநகர் இந்து அரிஜன பள்ளியில்  படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு  மருத்துவ குழுவினர்களோடு வந்து  இங்கு பயிலும் குழந்தைகளுக்கு இயற்கை மருத்துவத்தையும் ,யோகா பயிற்சியையும்  விளக்கமாக எடுத்துரைத்து , செய்முறை பயிற்சியை நடத்தி காட்டினார்கள்    இந்த பயிற்சியில்   பள்ளி குழந்தைகள் மிகுந்த ஆர்வத்தோடும், மன மகிழ்வோடும் பங்கேற்றனர்  நடைபெற்ற   இந்நிகழ்ச்சி மிகவும் சிறப்பானதாகவும் , பயனுள்ளதாகவும்   இருந்தது   எனவே இயற்கை மருத்துவ குழுவினருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிர்வாகத்தினருக்கும் இப்பள்ளியின் சார்பாகவும் ஆசிரியர்கள் சார்பாகவும் இங்கு பயிலும் குழந்தைகள் சார்பாகவும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர் 

தூத்துக்குடி மாவட்ட. ராஜபாளையம் திரு இருதய மெட்ரிக் பள்ளியின் கிறிஸ்மஸ் விழா

படம்
 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளை யூரணி ஊராட்சி பகுதியில் உள்ள ராஜபாளையம்   திரு இருதய மெட்ரிக் பள்ளியில்  கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது  பள்ளி கிறிஸ்மஸ் விழாவில் அருட்சகோதரி மரிய நேசம் தலைமை வகித்தார் கராத்தே மாஸ்டர் முத்துசங்கர் குமார் வரவேற்புரை ஏற்றினார் வரவேற்புரை ஆற்றினார் மாணவ மாணவிகளின் கண் கவரும் கலை நிகழ்ச்சிகள் கிறிஸ்துமஸ் கீதா ஆராதனைகள் கிறிஸ்துவின் பிறப்பு குறிக்க நிகழ்ச்சிகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாப்பிள்ளை ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவர் வருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணகுமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் அவர் தனது உரையில் அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ... நல்ல ஒழுக்கத்துடன் குழந்தை செல்வங்கள் படிக்க வேண்டும் மதத்தை மதிப்பதோடு மனிதநேயத்தை வளர்த்து அதை  ஒற்றுமையுடன் பேணி பாதுகாக்க வேண்டும் மக்கள் நலன் ஒன்றே தான் முக்கியம் என்று பணியாற்றுவோம் என தனது உரையில் குறிப்பிட்டார்...