இடுகைகள்

நாசரேத்தில் சிலம்பப் பொங்கல் கொண்டாட்டம்.

படம்
  நாசரேத்தில் சிலம்பப் பொங்கல் கொண்டாட்டம். 14 - 1 -2023 சனிகிழமை அன்று  காலையில் , தூத்துக்குடி மாவட்டம்  நாசரேத்தில்  ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்பு பள்ளி சார்பாக நாசரேத்தில் பொங்கல் தினத்தை ஒட்டி சிலம்ப பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.  ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்பு பள்ளி மாஸ்டர் டென்னிசன் விழாவிற்கு தலைமை தாங்கினார். புது பானையில்  மாணவ மாணவிகளால்  பொங்கல்  விடப்பட்டது.  அனைத்து சிலம்ப மாணவ மாணவிகள் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து சிலம்பம் சுற்றி தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக உற்சாகத்தோடு கொண்டாடினர்.  பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு அஇஅதிமுக வார்டு செயலாளர் பெரியதுரை,12 வார்டு கவுன்சிலர் ரவீந்திரன், குமார்,ஜெய்சங்கர், உலக ஆனந்தன், மாஸ்டர் அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக. சமத்துவ பொங்கல்

படம்
பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஆயுதப்படை வாளாகத்தில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ஆயுதப்படை வளாகத்தில் இன்று (14.01.2023) காவல்துறையினருடன் சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடினார். அதனை தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. விளையாட்டு போட்டிகளில் காவல்துறையினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுடலைமுத்து தலைமையிலான ஆயுதப்படை காவல்துறையினர் செய்திருந்தனர்.   இவ்விழாவில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பா...

தை பொங்கல் திருநாள்

படம்
 

தூத்துக்குடியில் ஆறாவது தேசிய சித்த மருத்துவ தினம்

படம்
 ஒவ்வொரு வருடமும் அகத்தியர் பிறந்த தினமான மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரம் அன்று தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது அதனை முன்னிட்டு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் சார்பாக , தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் சித்த மருத்துவ பிரிவின் சார்பாக ஆறாவது தேசிய சித்த மருத்துவ தினம்  2023ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி அன்று தூத்துக்குடி காந்தி நகர் இந்து  அரிஜன துவக்க பள்ளியில் கொண்டாடப்பட்டது.   இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாக தலைவர் திரு ராமசாமி, பள்ளி செயலாளர் திரு M.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலையில் C.K. கே ராமச்சந்திரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் திருமதி R.ராஜ செல்வி அவர்கள் தலைமையில் நடைபெற்றது,  இந்த நிகழ்ச்சியில் தொடக்கமாக  தமிழ்த்தாய் வாழ்த்து பள்ளி குழந்தைகள் பாட,   குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கியது. மாவட்ட தலைமை  சித்த மருத்துவ அலுவலர்  திருமதி R.ராஜ செல்வி அவர்கள் தனது சிறப்புரையில் மாணவர்களுக்கு ஆரோக்கிய வாழ்வுக்கான நெறிமுறைகளை எடுத்துக் க...

தனது உயிரையும் பொருட்படுத்தாமல் 4 வயது சிறுமியை காப்பாற்றிய இளைஞர் : தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாராட்டு

படம்
  குற்றால அருவியில் குளித்து கொண்டிருக்கும்போது வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட 4 வயது சிறுமியை தனது உயிரை பொருட்படுத்தாமல் விரைந்து சென்று காப்பாற்றிய தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த இளைஞருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பொன்னாடை போர்த்தி வெகுமதி வழங்கி பாராட்டு.         கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர் கடந்த 29.12.2022 அன்று தனது குடும்பத்தினருடன் தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் குளித்தபோது அவரது மகளான 4 வயது சிறுமி தடாகத்தில் உள்ள துவாரத்தின் வழியாக தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு, சுமார் 40 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தாள். அப்போது இதனைப் பார்த்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் ரோடு பகுதியை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநரான செல்வராஜ் மகன் விஜயகுமார் (24) என்பவர் விரைந்து சென்று, பள்ளத்தில் இறங்கி சிறுமியை பத்திரமாக மீட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.          அருவி தடாகத்தில் குளித்த சிறுமி தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டப...

மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர் - திருவுருவசிலை - படத்திற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஏசாதுரை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி மரியாதை

படம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் கழக பொருளாளரும் ,தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான   ஓ.பி.எஸ் அவர்கள் ஆணைக்கிணங்க  மக்கள் போற்றும் மகத்தான தலைவர் சத்துணவு தந்த சரித்திர நாயகர்  புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல்  டாக்டர் எம்ஜிஆர் அவர்களின்  35 ஐந்தாவது ஆண்டுநினைவு தினத்தை  தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் எஸ் ஏசாதுரை அவர்கள் தலைமையில்  சிவன் கோவில் தேரடி அருகே மாநகர்மாவட்ட கழகம் சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்ட  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது  அதனைத் தொடர்ந்து  பழைய மாநகராட்சி உள்ள தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் சிலை  தருவை மைதானத்திற்கு அருகே உள்ள டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் சிலை சத்திரம் பஸ் ஸ்டாப்பிற்கு அருகே உள்ள  பொன்மனச் செம்மல் எம் ஜி ஆர் அவர்களின் சிலைகளுக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதது இந்நிகழ்ச்சியில்  தருவை எம் எஸ் மாடசாமி  , மாநகர் மாவட்ட அவை தலைவர் பழனிச்சாமி பாண்டியன்  ...

ஆயுதப்படை காவல்துறையினர் சார்பாக ரத்ததான முகாம்

படம்
*தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி  ஆயுதப்படை காவல்துறையினர் சார்பாக ரத்ததான முகாம்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி  24.12.2022 சனிக்கிழமை அன்று தூத்துக்குடி மில்லர்புரத்திலுள்ள ஆயுதப்படை வளாகத்தில் இரத்த தான சிறப்பு முகாம் நடைபெற்றது.  தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுடலை முத்து அவர்கள் தலைமையிலான ஆயுதப்படை போலீசார் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரத்த சேமிப்பு வங்கி மருத்துவ அலுவலர் திரு. ராஜேஷ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஏற்பாடு செய்திருந்த  முகாமில் ஆயுதப்படையைச் சேர்ந்த 6 பெண் காவலர்கள் உட்பட 50 காவலர்கள் இரத்த தானம் வழங்கினர்.  இந்த இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஆயுதப்படை உதவி ஆய்வாளர் திரு. சதீஷ்குமார் உட்பட காவல் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.