இடுகைகள்

12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு “ உயர்வுக்கு படி” மற்றும் “கல்லூரி கனவு” வழிகாட்டல் நிகழ்ச்சி

படம்
நாள்: 26.06.2023 தூத்துக்குடி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு “ உயர்வுக்கு படி” மற்றும் “கல்லூரி கனவு” வழிகாட்டல் நிகழ்ச்சி     தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு “ உயர்வுக்கு படி” மற்றும் “கல்லூரி கனவு” வழிகாட்டல் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.  இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த வழிகாட்டல், கல்விக்கடன், உதவித்தொகை, முதல் பட்டதாரி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் விடுதியில் தங்கி படித்தல் போன்ற உதவிகள் செய்து தரப்படும்.       இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியானது முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை 27.06.2023 அன்று செயின்ட் மேரீஸ் ஆண்கள் மேல்நிலைப்ப...

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கருத்தரங்கம் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சி

படம்
சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல்  கல்லூரியில் இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கீழ் செயல்படும்   தூத்துக்குடி மாவட்டம்  நேரு யுவகேந்திரா  மற்றும் நாட்டு நல பணித்திட்ட சார்பாக மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கருத்தரங்கம் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சி கடந்த 16-6-2023  வெள்ளி  கிழமை அன்று.     நடைபெற்றது. சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப்  பொறியியல்  கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நேரு யுவகேந்திரா  மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கருத்தரங்கம் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் திரு. ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார்.  கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். நேரு யுவகேந்திரா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு.இசக்கி  முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மாணவ மாணவிகள்  உற்சாகமாக  கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை நாட்டு நல பணி திட்ட அலுவலர் உதவி பேராசிரியர்...

நகர்ப்புற உள்ளாட்சிகளில் திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் : அமைச்சர் திரு.கே.என்.நேரு தகவல்

படம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி  நகர்ப்புற உள்ளாட்சிகளில் திட்டப்பணிகளை  விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் ------------------------------------------------------------------------------     தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.56.65 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகரம் மற்றும் 15வது நிதிக்குழுத் திட்டங்களின்கீழ் முடிவுற்ற பணிகளை மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் தலைமையில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (26.05.2023) திறந்து வைத்தார். ரூ.10.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல அடுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடம், ரூ.7.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டோபிகானா, ரூ.13.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சிக்குட்பட்ட 8 பகுதிகளில் பூங்கா, ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வளமீட்பு மையம், சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா, ரூ.2 கோட...

விடாமுயற்சியுடன் தொடர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம் :

படம்
                                                மாணவர்கள் விடாமுயற்சியுடன் தொடர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்தூத்துக்குடி  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் இ.ஆ.ப., அவர்கள் அறிவுறை --------------------------------------------------------------------------------------------------------     தூத்துக்குடி மாநகராட்சி அறிஞர் அண்ணா மண்டபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 56 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கான உயர் கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியான நான் முதல்வன்-கல்லூரி கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.05.2023) மாணவர்களை ஊக்கப்படுத்தி பாராட்டி தெரிவித்ததாவது:       பள்ளிக் கல்விக்கு பிறகு மாணவர்கள் அனைவரும் அர்த்தமுள்ள உயர் கல்வி படிப்புகளை தொடரச் செய்வதே நான் மு...

மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறித்தி தூத்துக்குடியில் SDPI கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்

படம்
  மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தடுத்து  நிறுத்த வலியுறித்தி தூத்துக்குடியில் SDPI கட்சியினர் கண்டன ஆர்பாட்டம் !  தூத்துக்குடி மாவட்டம்  SDPI கட்சி    சார்பாக மணிப்பூரில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, 10.05.2023   இன்று புதன்கிழமை மாலை திரேஸ்புரம் பகுதி மேட்டுப்பட்டி திடலில் மாவட்ட பொதுச்செயலாளா் காதா் முகைதீன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் மின்னல் அம்ஜத் வரவேற்புரை ஆற்றினார்.இதில் sdpi  கட்சியின் மாவட்ட தலைவா் முஹம்மது உமர், அருட் தந்தை பென்ஜமின், சுந்தரிமைந்தன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி பாத்திமா பாபு, தமிழ் விடியல் கட்சி மா.செயலாளா் சந்தனராஜ், தமிழ்நாடு மக்கள் கட்சி மாநில தலைவா் காந்தி மள்ளர், தமிழ் புலிகள் கத்தாா் பாலு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.  தமுமுக மா.செயலாளா் அலி அக்பர் திரு இருதய நண்பர்கள் இயக்கம் தங்கையா, PUCL பிரின்ஸ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனா்.    இறுதியாக தொகுதி தலைவா் காதர் ஹீசைன் நன்றியுரை நிகழ்த...

சர்வதேச குண்டு எறிதல் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட மாணவி சாதனை

படம்
  சர்வதேச அளவிலான பாரா தடகள விளையாட்டு போட்டி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 4 முதல்  7 வரை நடைபெற்றது. இதில் 20-க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்   நேபால், கஜகசஸ்தான், மங்கோலியா, ஸ்ரீலங்கா ,லஞ்ச் ,ப்ளீஸ், கென்யா, போன்ற நாடுகளிலிலிருந்து  கலந்து கொண்டனர்    இதில் இந்தியா சார்பாக 50க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்  இப் போட்டியில் தமிழகத்தில் இருந்து 21 பேர் கலந்து கொண்ட  ... இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த மாணவி  முத்துமீனா f20 கேட்டகிரியில்  குண்டு எறிதலில் மூன்றாம் இடம்(8.88) மீ. பிடித்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்  வெற்றி பெற்ற இவர் கடந்த  மே. 8ம் தேதி திங்கள் கிழமையன்று  தூத்துக்குடி திரும்பிய  முத்துமீனாவுக்கு   தூத்துக்குடி இரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது  ..  இந்த நிகழ்வில்  தூத்துக்குடி  மாவட்ட பாரா சங்க செயலாளர் திரு ஸ்டீபன் அவர்கள்  வரவேற்றார் தூத்துக்குடி மாவட்ட...

தொடுவானம் கலை இலக்கிய பேரவை சார்பாக நூல் வெளியீடு

படம்
தொடுவானம் கலை இலக்கிய பேரவை மற்றும் காட்சில்லா கலைக்கூடம் பதிப்பகம் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழா 7. 5 .2023 ஞாயிற்றுக்கிழமை மாலை தூத்துக்குடி "பாம்ஸ் அகாடமி" அரங்கத்தில் வைத்து தொடுவானம் கலை இலக்கிய பேரவை மற்றும் காட்சில்லா கலைக்கூடம் இணைந்து நூல் வெளியீட்டு விழா நடத்தியது  இந்த நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் அன்னம் காலண்டிதழ் ஆசிரியர் பணி. ச. தே. செல்வராசு அவர்கள் தலைமையில் கவிஞர் மாரிமுத்து அவர்கள் எழுதிய நேச குளத்தில்" தினமொரு கல் " என்ற கவிதை புத்தகத்தை தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை சார்ந்த திரு விசாகன் அவர்கள் கவிதையின் முதல் படிப்பை வெளியிட அதை மூக்கு பேரி கிராமப்புற தமிழ் மன்றத்தின் தலைவர் கவிஞர் தேவர் நேசன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்     பின்னர் வெளியிடப்பட்ட கவிஞர் மாரிமுத்து அவர்களின் "நேச குளத்தில் தினமொரு  கல் " என்ற கவிதை நூலை பற்றி ஊத்துமலை சார்ந்த பட்டதாரி தங்க துரையரசி அவர்களும்  அடுத்து முனைவர் பட்ட ஆய்வாளர் திருமதி லில்லி மலர் அவர்களும்  திறனாய்வு செய்து திறனாய்வு உரை நிகழ்த்தினார்கள் இதனைத் தொடர்ந்து  அடுத்த நி...