இடுகைகள்

முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க புதிய யூ.டி.எஸ் செயலி: ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு

படம்
  தூத்துக்குடி ரயில் நிலையத்தில்  வரிசையில் நிற்க தே வை இல்லை   வந்துவிட்டது  யூ.டி.எஸ் - செயலி  முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்பது குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு  கவுண்டரில் வரிசையில் நிற்க தேவையில்லை முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க புதிய செயலி ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு தூத்துக்குடி தூத்துக்குடி கவுண்டரின் கவுண்டர்களின் வரிசையில் நிற்காமல் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை  புதிய யூடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் எடுக்கலாம் என தூத்துக்குடி ரயில் பயணிகளுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் முன்பதிவு இல்லாத டிக்கெட் நாடு முழுவதும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதற்கு ஏற்ப ரயில்கள் ரயில் நிலையங்களில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது மேலும் ரயில் பயணிகளுக்காக ஆன்லைன் சேவைகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன  அதன்படி ரயில் பயணிகள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் முன்பதிவு டிக்கெட் களை எடுத்துக் கொள்ள முடிகிறது இது தவிர முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை நடைமேடை டிக்கெட் ஆகியவற்றை ரயில் நிலையங்களில் இரு...

திரு.கீர்த்திமலர் அவர்கள் எழுதிய "தூங்கா இரவு" சிறுகதை நூல் குறித்த திறனாய்வு

படம்
 தொடுவானம் கலை இலக்கியப்பேரவையின் சார்பில் இன்று (08.10.23 )ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.மணி. தூத்துக்குடி அழகப்பா கல்வி மையத்தின் சித்தரை கூடத்தில் தூத்துக்குடி எழுத்தாளர் திரு.கீர்த்திமலர் அவர்கள் எழுதிய "தூங்கா இரவு" சிறுகதை நூல் குறித்த திறனாய்வு நடைபெற்றது. நூலை எழுத்தாளர் திரு.முகமது யூசுப்,திரு.பத்மநாதன் இருவரும் திறனாய்வு செய்து பேசினார்கள். திரு.செய்யது முகமது ஷெரீப்,புலவர் முத்துசாமி இருவரும் வாழ்த்துரை வழங்கினர். காதைக்களம் அன்பு சிறார் இலக்கியம் குறித்துப் பேசியதோடு சிறுகதை ஒன்றையும் கூறினார். மேலும் நிகழ்வில் திரு. தனசேகரன்,குறும்பட  இயக்குனர் அருந்ததி அரசு,தூத்துக்குடி நடிகர் சங்கத்தின் தலைவர் திரு.முருகேசன்,திரு.மாரிமுத்து,நாடக நடிகர் திரு.சக்திவேல் ஆகியோர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.நூலாசியர் திரு.கீர்த்திமலர் ஏற்புரை வழங்கினார்.கவிஞர் ஆ.மாரிமுத்து அவர்கள் நன்றி கூறினார்.

டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பாக ஸ்வச்சதா ஹி சேவா' தூய்மை பணி

படம்
 சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி சார்பாக சாயர்புரம் பஞ்சாயத்தில் உள்பட்ட பகுதியில்  தேசிய மாணவர் படை சார்பாக ஸ்வச்சதா ஹி சேவா' தூய்மை பணி. தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப்  பொறியியல்  கல்லூரியின்  தேசிய மாணவர் படை  சார்பாக  ஸ்வச்சதா ஹி சேவா' தூய்மை பணி சாயர்புரம் பஞ்சாயத்து பகுதியில் கடந்த செப்டம்பர் 28 - 09-2023 ஞாயிற்று கிழமையன்று  நடைபெற்றது  இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் திரு. ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார்.  கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சாயர்புரம் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி திரு. பாபு தொடங்கி வைத்து மாணவர்களுக்கு தூய்மை பணியை எடுத்துரைத்தார்.  கல்லூரி மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு தூய்மை பணி செய்தனர்.இந்த நிகழ்ச்சியை கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் உதவி பேராசிரியர் திரு. சா.டென்னிசன் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முன்னாள் டீன் திரு.ஐசக் பாலசிங் கல்லூரி இயந்திரவியல் துறை தலைவர் திரு.கனிசெல்வன் உடற...

தூத்துக்குடியில் : ஏசாதுரை அவர்கள் தொண்டர்களுடன் ... பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

படம்
புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் அரசியல் வாரிசு கழக ஒருங்கிணைப்பாளர் கழகப் பொருளாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஐயா ஓபிஎஸ் அவர்கள் ஆணையின் படி     பேரறிஞர்  அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்தநாளான 15-9-2023 வெள்ளி கிழமை அன்று காலை 10 மணி அளவில்  தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களது சிலைக்கு  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓ பி எஸ் அணியின் சார்பாக அதன்  தூத்துக்குடி மாநகர் ,  மாவட்ட கழக செயலாளர் எஸ். ஏசாதுரை அவர்கள் தலைமையில்  தொண்டர்கள் மற்றும் - மகளிர் அணியினர் திரண்டு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்          மேலும் அந்த வளாகத்தில் உள்ள  புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது  இந்த நிகழ்ச்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஓ.பி.எஸ் அணியின் பிரமுகர்களும் , கட்சித் தொண்டர்...

ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்த நாள் விழா

படம்
  தமிழக முன்னாள் முதல்வர்  பேறறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்த நாளை   15 -09-2023  வெள்ளிக்கிழமை  அன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்ப்ட்டது அந்த வகையில் தமிழ்நாடு   நகராட்சி மாநகராட்சி ஓய்வூதிய சங்கம் சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி கட்டிடவளாகத்திற்குள் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி நகராட்சிகளில் பணியாற்றும்  அலுவலர்களுக்கு ஒய்வு பெறும் காலத்தில்  ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்தார் நமது முன்னாள் முதல்வர் மாண்புமிகு பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்னாரது 115 வது பிறந்தநாள் விழா வை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு  நகராட்சி மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பாக தூத்துக்குடி பழையநகராட்சி கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு.... தமிழ்நாடு , நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பாக அதன் மாநில செயற்குழு உறுப்பினரும் மாநகர தலைவருமான திரு மாடசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்க...

தொடுவானம் இலக்கிய இதழின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் புலவர்.சு.முத்துசாமி அவர்கள் எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா

படம்
  தொடுவானம் இலக்கிய இதழின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் புலவர்.சு.முத்துசாமி அவர்கள் எழுதிய "கவிதைப் பூஞ்சோலை"கவிதை நூல் வெளியீட்டு விழா  (10.09.23) ஞாயிற்று கிழமை காலை 11 மணி அளவில் தூத்துக்குடி  அழகப்பா கல்வி மைய அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதலாவதாக    D.தனசேகர் வந்திருந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்   தொடுவானம் இலக்கிய இதழின் ஆசிரியர் நெல்லை தேவன், தொடுவானம் கடந்து வந்த பாதை மற்றும் ஒவ்வொரு ஆண்டும் நடத்திய போட்டிகள் குறித்துப் பேசினார்.தொடர்ந்து இந்த ஆண்டு நடத்திய புதுக்கவிதைப்போட்டி குறித்தும் பேசினார்.     கவிதை போட்டியில் வெற்றிபெற்ற கவிதைகளை ஆசிரியர் தேவன் மற்றும் துணையாசிரியர் ஆ.மாரிமுத்து இருவரும் வாசித்தார்கள்.      கவிஞர் மூக்குப்பேரி தேவதாசன்  தொடுவானம் இதழ் குறித்துப் பேசினார் நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியாக ... வீதிநாடகக் கலைஞர்.ப.சக்திவேல் நூலாசிரியரைப்பற்றி அறிமுக உரையாற்றினார். தூத்துக்குடி சரவணா ஹோட்டல் உரிமையாளர் திரு.செந்தில் ஆறுமுகம் நூலை வெளியிட சுபா கிராபிக்ஸ் உரிமையாளர் தி...

சுதந்திர தினத்தில் கவிஞர் குரு ராமலிங்கம் அவர்களின் கவிதை