இடுகைகள்

மனிதநேயத்தின் மற்றொறு மறுவுறுவம் மறைந்தது

படம்
 திரை உலகிலும், அரசியலிலும்,  புரட்சி கலைஞர் என்றும் , கேப்டன் என்றும் , கருப்பு எம்.ஜி.ஆர் என்றும் ரசிகர்களாளும் , மக்களாளும் பிரியமாக அழைக்கப்பட்டவர் தான் நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்த் அவர்கள்   விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, உலக தமிழ்  வாழ்  நெஞ்சங்களிலும் , மனிதநேய கொண்டோர் மனதிலும், சாமானிய மக்கள் இதயத்திலும் நீங்கா சோகத்தை தந்துள்ளது திரைத்துறையில் சாமானியனாக .. போராடி  பிரவேசித்து  மெல்ல... மெல்ல பட வாய்புகளை பெற்று , பெற்ற வாய்புகளில் தவறாமல் தனது திறமைகளை வெளிபடுத்தினார்.  தனக்கென ஒரு பாணியை உருவாக்கி... வாய்ப்புகள் தன்னை தேடி வரும் நிலைக்கு உயர்ந்தார். தான் உயர்ந்த போது தன்னோடு நடித்த சக நடிகர்களையும் தொழில் நுட்ப கலைஞர்களையும்  கை கொடுத்து உயர்த்தினார் என்பது விஜயகாந்த் அவர்களின் தனி சிறப்பு. பிறர் பசியை போக்குவதிலும் ... பிறர் தேவை அறிந்து மனித நேயத்தோடு உதவுவதிலும்  அவர் இன்னொறு எம்.ஜி.ஆர் ஆக வாழ்ந்ததால் ... அவரை கருப்பு எம்.ஜி.ஆர்  என அனைவராலும் கருதப்பட...

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைத்தில் FISH NOVA -2023 மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையான வினாடி வினா போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி

படம்
FISH  NOVA -2023 மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையான  வினாடி வினா போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி: மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தூத்துக்குடி FISH NOVA  2023 , மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான வினாடி வினா போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சியானது 6 -12 -2023 அன்று தூத்துக்குடி மீனவ மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவர் சங்கம் 2023-  24 அறிவியல் கழகத்தால் நடத்தப்பட்டது,  இதில் ஏறத்தாழ 85 மாணவர்கள் 8  பள்ளிகளின் சார்பில் பங்கேற்றனர்   காலை 8:30 மணி அளவில் பள்ளி மற்றும் போட்டிக்கான பதிவேற்றும் தொடங்கப்பட்டது அதனை தொடர்ந்து முனைவர் B. அஹிலன் FC &RI  தூத்துக்குடி அவர்களால் இந்த நிகழ்ச்சியானது காலை 10 மணி அளவில் தொடங்கி வைக்கப்பட்டது காலை வினாடி வினா போட்டிக்கான ஆரம்பச் சுற்றில் எட்டு அணிகள் பங்கேற்றனர் அதிலிருந்து 5 அணிகள் மட்டும் பிரதான சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்   அறிவியல் கண்காட்சியில் 31 அணிகள் பங்கேற்றனர்    நிறைவு விழாவானது மாலை 5 மணி அளவில் டாக்டர் B.அகிலன் முனைவர் முதல்வர் FC&RI...

தேரி எழுத்தாளர் கண்ணகுமார் விஸ்வரூபன் அவர்களின் நூல் வெளியீட்டு விழா

படம்
  "அப்பாவின் இரண்டாவது மரணம்" நூல் வெளியீட்டு விழா... கடந்த சனிக்கிழமை(28.10.23)மாலை 04.00 மணிக்கு  நாசரேத்தில் தேரி எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன் அவர்கள் எழுதி எமது காட்சில்லா கலைக்கூடம் பதிப்பகம் மூலம் பதிப்பிக்கப்பட்ட "அப்பாவின் இரண்டாவது மரணம்"என்ற சிறுகதை நூல் வெளியிடப்பட்டது. விழாவிற்கு மேனாள் தமிழ்ப்பேராசிரியர் மா.காசிராசன் அவர்கள் தலைமை தாங்கினார். தொழிற்சங்கத் தலைவர் ஈ.கிருஷ்ணராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப்பேசினார். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் முனைவர் நா.இராமச்சந்திரன் அவர்கள் நூலை வெளியிட தொடுவானம் இதழின் ஆசிரியர் நெல்லை தேவன் அவர்கள் நூலைப் பெற்றுக்கொண்டார் த.க.இ.பெ.ம. மாநிலச்செயலாளர் மருத்துவர் த.அறம் அவர்கள் நூலை அறிமுகம் செய்துவைக்க...தூத்துக்குடி மாவட்ட க.இ.பெ.ம தலைவர் அருட்சகோதரி மீ.சு.எழிலரசி,எழுத்தாளர் சொ.பிரபாகரன்,தூய சவேரியார் கல்லூரி து.பேராசிரியர்-ஜே.பி.ஜோஸ்பின் பாபா,ஏரல் லோபா பள்ளி தாளாளர்  முருகன் ஆகியோர் நூல் குறித்து தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். நூலாசிரியர் கண்ணகுமார விஸ்வரூபன் ஏற்புரை வழங்கினார்.இலக்கிய ஆர்வலர் ம.கண்ணன் நன்றி...

நாசரேத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி

படம்
 நாசரேத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. நாசரேத்தில் 13 வது  மாநில அளவிலான கராத்தே போட்டி  கடந்த 28-10-2023 சனிகிழமை  அன்று தூத்துக்குடி மாவட்டம்  நாசரேத்  ஆலன் திலக் கராத்தே பள்ளி சார்பாக நடைபெற்றது.  இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து      சுமார் 300க்கும் மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்    தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, போன்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டிகளில் இரண்டு வகையாக நடைபெற்றது கட்டா மற்றும் குமட்டி என்ற பிரிவில் நடைபெற்றது.  இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்க துணைத் தலைவர் திரு. விவின் அவர்கள்  கலந்து கொண்டு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.  ஆலன் திலக் கராத்தே பள்ளி தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் கராத்தே டென்னிசன் போட்டி ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு கராத்தே மாஸ்டர் அந்தோணி, சிலுவை ரஞ்சித்,அருண் காளி ராஜ், சபரி ,குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

படம்
    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை :   தமிழகத்தின் , தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று முன்தினம் உருவானது . இது மேற்கு , வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்க அரபிக் கடல் பகுதிகளில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் . பின்னர் 21 ம் தேதி மேலும் வலுப்பெற்று மத்திய அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் . அதேபோல , வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது . இது நாளை (20 ம்தேதி ) மத்திய வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகக்கூடும் . மேலும் , தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இருந்து குமரிக் கடல் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது . இதன் காரணமாக தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது...

முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க புதிய யூ.டி.எஸ் செயலி: ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு

படம்
  தூத்துக்குடி ரயில் நிலையத்தில்  வரிசையில் நிற்க தே வை இல்லை   வந்துவிட்டது  யூ.டி.எஸ் - செயலி  முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்பது குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு  கவுண்டரில் வரிசையில் நிற்க தேவையில்லை முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க புதிய செயலி ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு தூத்துக்குடி தூத்துக்குடி கவுண்டரின் கவுண்டர்களின் வரிசையில் நிற்காமல் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை  புதிய யூடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் எடுக்கலாம் என தூத்துக்குடி ரயில் பயணிகளுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் முன்பதிவு இல்லாத டிக்கெட் நாடு முழுவதும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதற்கு ஏற்ப ரயில்கள் ரயில் நிலையங்களில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது மேலும் ரயில் பயணிகளுக்காக ஆன்லைன் சேவைகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன  அதன்படி ரயில் பயணிகள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் முன்பதிவு டிக்கெட் களை எடுத்துக் கொள்ள முடிகிறது இது தவிர முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை நடைமேடை டிக்கெட் ஆகியவற்றை ரயில் நிலையங்களில் இரு...

திரு.கீர்த்திமலர் அவர்கள் எழுதிய "தூங்கா இரவு" சிறுகதை நூல் குறித்த திறனாய்வு

படம்
 தொடுவானம் கலை இலக்கியப்பேரவையின் சார்பில் இன்று (08.10.23 )ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.மணி. தூத்துக்குடி அழகப்பா கல்வி மையத்தின் சித்தரை கூடத்தில் தூத்துக்குடி எழுத்தாளர் திரு.கீர்த்திமலர் அவர்கள் எழுதிய "தூங்கா இரவு" சிறுகதை நூல் குறித்த திறனாய்வு நடைபெற்றது. நூலை எழுத்தாளர் திரு.முகமது யூசுப்,திரு.பத்மநாதன் இருவரும் திறனாய்வு செய்து பேசினார்கள். திரு.செய்யது முகமது ஷெரீப்,புலவர் முத்துசாமி இருவரும் வாழ்த்துரை வழங்கினர். காதைக்களம் அன்பு சிறார் இலக்கியம் குறித்துப் பேசியதோடு சிறுகதை ஒன்றையும் கூறினார். மேலும் நிகழ்வில் திரு. தனசேகரன்,குறும்பட  இயக்குனர் அருந்ததி அரசு,தூத்துக்குடி நடிகர் சங்கத்தின் தலைவர் திரு.முருகேசன்,திரு.மாரிமுத்து,நாடக நடிகர் திரு.சக்திவேல் ஆகியோர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.நூலாசியர் திரு.கீர்த்திமலர் ஏற்புரை வழங்கினார்.கவிஞர் ஆ.மாரிமுத்து அவர்கள் நன்றி கூறினார்.