இடுகைகள்

கராத்தே மற்றும் சிலம்பு பள்ளி மாஸ்டருக்கு கலை வளர்மணி” பட்டம்

படம்
 சிறந்த சிலம்பாட்டக் கலைஞர், “ கலை வளர்மணி” பட்டத்தை ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்பு பள்ளி மாஸ்டர் கராத்தே டென்னிசனுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலை மன்றம் சார்பில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2023-24 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான சிறந்த சிலம்பாட்டக் கலைஞர் மற்றும் சிறப்பு விருதுக்குரிய “ கலை வளர்மணி ” என்ற பட்டத்தையும் ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்பப் பள்ளி  சிலம்பம் மற்றும் கராத்தே மாஸ்டர் கராத்தே டென்னிசன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அவர்கள் விருது வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார் .இந்நிகழ்ச்சியில் கலைஞர்களுக்கு விருதுகள், சால்வைகள் மற்றும் பணமுடிப்பு போன்றவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசன், கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், தூத்துக்குடி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி உட்பட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார முகாம்

படம்
  சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார முகாம். சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப்  பொறியியல்   கல்லூரியில்  தூத்துக்குடி நேரு யுவகேந்திராவும் தேசிய நாட்டு நல பணி திட்டம் சார்பாக  வாக்காளர்  விழிப்புணர்வு பிரச்சார முகாம் நடைபெற்றது  . இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் திரு. ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார்.  கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார்.  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நேரு யுவகேந்திரா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இசக்கி விழிப்புணர்வு எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு வாக்களிப்பது அவசியத்தை பற்றி உறுதிமொழி எடுக்கப்பட்டது.   மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லூரி நாட்டு நல பணி அலுவலர் டென்னிசன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். உடற்கல்வி இயக்குனர் மாதவன் மற்றும் ஜாஸ்பர் விளையாட்டுப் போட்டிகளை  நடத்தினார்கள்.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி  துறை தலைவர்கள் டாக்டர். விஜயலட்சுமி டாக்டர். ஜேஸ்பர்லின், செல்வ...

நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் தென் மண்ட அளவிலான போட்டியில் வெற்றி

படம்
  நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் தென் மண்ட அளவிலான போட்டியில் வெற்றி .  தென் மண்ட அளவிலான கராத்தே போட்டி.  தூத்துக்குடி  மாவட்டம் முத்தையாபுரத்தில் வைத்து      நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட. இப்போட்டியில்  ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் கட்டா மற்றும் சண்டை பிரிவில்  வெற்றி பெற்று பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பெற்றனர்.  பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டர் கராத்தே டென்னிசனை சவுத் இந்தியன் டிரஸ்ட் நிறுவனர் சுரேஷ் மற்றும் சாண்டி மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் பாராட்டினார். இதில்  மாஸ்டர் காளிராஜ் மாஸ்டர் சபரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

படம்
 சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி. சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப்  பொறியியல்   கல்லூரியில்  இயந்திரவியல் துறை மற்றும் தேசிய நாட்டு நல பணி திட்டம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .  இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் திரு. ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார்.  கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார்.  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு விநாயகம் அவர்கள் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு   குறித்து உரை நிகழ்த்தினர்,.  வாகன ஆய்வாளர் தனபால் வாகன விதிமுறைகளை எடுத்துரைத்தார் இயந்திரவியல் துறை தலைவர் டென்னிசன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் இந்த நிகழ்ச்சியில் துணை பேராசிரியர் கனகராஜ் பிரைட்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

படம்
   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

"அப்பாவின் இரண்டாவது மரணம்" என்ற சிறுகதை நூல் பற்றிய ஆய்வு

படம்
தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் 11-ஆவது நிகழ்வு கடந்த ஞாயிறு(21.01.24) அன்று தூத்துக்குடி அழகப்பா கல்வி மையத்தில் உள்ள சித்திரக்கூடம் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்- நாசரேத்தைச் சார்ந்த தேரி எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன் அவர்கள் எழுதிய "அப்பாவின் இரண்டாவது மரணம்"  சிறுகதை நூல் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் கவிஞர் சைமன் அவர்கள் வரவேற்றுப் பேசினார். தூத்துக்குடியைச் சார்ந்த தமிழாசிரியர் முனைவர் சு.முருகன் மற்றும் நாசரேத்தைச் சார்ந்த இலக்கிய ஆர்வலர் ம.கண்ணன் இருவரும் நூலைக்குறித்து சிறப்பாக ஆய்வு செய்து பேசினர். மூக்குப்பேரி கவிஞர் தேவதாசன்,நாசரேத்தைச் சார்ந்த மேனாள் பேராசிரியர் காசிராசன் மற்றும் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் அய்யாக்குட்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் கண்ணகுமார விஸ்வரூபன் அவர்கள் ஏற்புரை வழங்கினார். புலைவர் சு.முத்துசாமி அவர்கள் நன்றியுரை வழங்க நிகழ்வு இனிது நிறைவுற்றது. பேரவையின் சார்பில் நூலாசிரியருக்கு சான்றிதழுடன் நூலாடையும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. தோழமையுடன்- நெல்லை தேவன்.

தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் சார்பாக குடியரசு தின கொடியேற்று விழா

படம்
 தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் சார்பாக குடியரசு தின கொடியேற்று விழா  26 1 2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற 75வது குடியரசு தினத்தில் தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக நமது தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது   இந்த விழாவில்  ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் நிறுவனத் தலைவரும் , "ஹியூமன் ரைட்ஸ் டுடே" மாத இதழின் பதிப்பு ஆசிரியருமான டாக்டர் திரு .S.சுந்தர் அவர்களின் வழிகாட்டுதல் படி தூத்துக்குடி மாவட்டத் தலைவர், வழக்கறிஞர் திரு. T.J  கார்த்திகேயன்  தலைமையில், மற்றும் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர்  P. ரமேஷ் அவர்கள்  முன்னிலையில்  ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின்  ஆட்சி மன்ற குழு தலைவர் திரு A.V.லினோ அவர்கள் தேசிய  கொடியேற்றினார் பின்னர் இனிப்புகள்  வழங்கப்பட்டது இந்த  நிகழ்ச்சியில் மாவட்ட புரவலர்  திரு.செல்வராஜ் மாவட்டஅமைப்பாளர்  சம்சுதீன்  ஒருங்கிணைப்பாளர்  திரு. சின்னச்சாமி - மக்கள் தொடர்பு அலுவலர்  கரிகாலன் -  மாவட்...