இடுகைகள்

மக்களின் கோரிக்கை ஏற்று... மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

படம்
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி அருகேயுள்ள புதியம்புத்தூர் அருகே ஆட்சியர் காரை வழி மறித்த பொதுமக்களால் பரபரப்பு ஓட்டப்பிடாரம் தாலுகா புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி சமுதாய நலக்கூடத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து விட்டு பின்னர் செல்லும்போது நடுவக்குறிச்சி கிராம பொதுமக்கள் ஆட்சியர் காரை மறித்து தங்கள் பகுதியில் ரோடு வசதி குடிநீர் வசதி வாறுகால் வசதி மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை வைத்தனர் இதனால் புதியம்புத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து காரில் இருந்து இறங்கிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நடுவக்குறிச்சி பகுதியில் உள்ள தெருக்களில் பார்வையிட்டு அப்பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றவும் வாறுகால் வசதி ரோடு வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வட்டாட்சியர் காளிராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜன் ஆகியோருக்கு உத்தரவிட்டார் இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்

கவிஞர் மாரிமுத்துவுக்கு பாராட்டு

படம்
                                        புதுவை தமிழ் சங்கம் சார்பில் அதன் 9ம் ஆண்டு விழா கடந்த 05-1-2019 அன்று  நடைபெற்ற அதன் 9ம் ஆண்டு விழாவில் நடத்தப்பட்ட கவிதைப்போட்டியில் தூத்துக்குடியை சார்ந்த கவிஞர் மாரிமுத்து இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்களை புதுவை கலை, மற்றும் பண்பாடுதுறை இயக்குனர் திரு.அ.கணேசன் அவர்கள் பராட்டி பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.                                பரிசு பெற்ற கவிஞர் மாரிமுத்து  அவர்களை "நமது எழுத்தாணி " அன்போடு வாழ்த்துகிறது.                        

துப்புரவு பணியாளர்கள் நலன் குறித்து ஆலோசனை கூட்டம்

படம்
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி பணி மற்றும் துப்புரவு பணியாளர் நலன் குறித்த ஆய்வுக்கூட்டம் தேசிய மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.                          தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட ஊரக பகுதி மற்றும் பணியாளர்கள் நல வாழ்வு மற்றும் மறுவாழ்வு பணிகளுக்கான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தேசிய மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஷிர்மணி  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.இது இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் திட்ட மதிப்பீடு அவற்றின் நிலை ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டது மேலும் மாவட்டத்தில் உள்ள துப்புரவு தொழிலாளர்களின் நலன் மற்றும் அவர்களின் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் புதுவாழ்வு திட்டங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்கீஸ் மாவட்ட காவல் கண்காணிப்...

தொடங்கிடும்.. இரயில் பயணத்தில் .. தொடர்ந்திடும் கால தாமதம்.

படம்
தூத்துக்குடி       சென்னையிலிருந்து புறப்படும் தூத்துக்குடி லிங்க் எக்ஸ்பிரஸ் வண்டி எண்  16129 குருவாயூர் எக்ஸ்பிரஸ் வாஞ்சிமணியாச்சி சந்திப்புக்கு மாலை 6:30 மணி வந்தடைகிறது. ஆனால் தூத்துக்குடி ரயில்வே  நிலையத்திற்கு சென்றடைய 8:40 மணி ஆகிவிடுகிறது. வந்த  இந்த பயண நேரம் பயனிகளால் காலதாமாக கருதப்படுகின்றது.  இந்த குறை எப்போது தீர்க்கப்படும் என பயணிகளின் ஏதிர்ப்பார்பாக உள்ளது. இதனால் மதுரை மண்டல மேலாளர் தீர்வு காண்பாரா! சென்னை To குருவாயூர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடிக்கு அரைமணிநேரத்திற்கு முன்பாக வரவேண்டிய இடத்தில் 8:45 மணி அளவில் மணி அளவில் வருவதேனோ?மேலும் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் சரியான உணவகங்கள், தேநீர் கடைகள் இல்லை. இதனால் வயதானவர்கள்,உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள்,மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த சிரமத்துகுள்ளாகின்றனர். மேலும் தூத்துக்குடியிலிருந்து  புறப்பட்டு வரும்  குருவாயூர் லிங்க் எக்ஸ்பிரஸ் மணியாச்சி ரயில் சற்றுப் சந்திப்பில் தூத்துக்குடி லிங் பெட்டிகளை இனணக்கும் இடத்,திலும், சென்னையிலிருந்து வருகின்ற குருவ...

ஊராட்சி சபையில் உதயா நீதி ஸ்டாலின்

படம்
தி.மு.க.சார்பில் முடிவைதானேந்தலில் ஊராட்சி சபை கூட்டம் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் பொருட்டு திமுக நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் கனிமொழி எம்பி தலைமையில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டன. இந்தநிலையில் நடிகரும் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். இதில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். குறிப்பாக சாலை வசதி, போக்குவரத்து, மருத்துவமனை, வேலைவாய்ப்பு, மின்பாதை சீரமைத்தல், குடிநீர் வினியோகம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என உதயநிதி ஸ்டாலினிடம் பொதுமக்கள் முற...
.க.சார்பில் முடிவைதானேந்தலில் ஊராட்சி சபை கூட்டம் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் பொருட்டு திமுக நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் கனிமொழி எம்பி தலைமையில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டன. இந்தநிலையில் நடிகரும் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். இதில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். குறிப்பாக சாலை வசதி, போக்குவரத்து, மருத்துவமனை, வேலைவாய்ப்பு, மின்பாதை சீரமைத்தல், குடிநீர் வினியோகம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என உதயநிதி ஸ்டாலினிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.   தேவேந...

இட ஒதுக்கீடு கேட்டு ஆட்டோ தொழிலாளர்கள் கோரிக்கை.

படம்
தூத்துக்குடி அண்ணாபழைய பேருந்து நிலைய ஆட்டோ தொழிலாள்கள் நல சங்க உறுப்பினர்கள் 83ஆட்டோ ஒட்டுனர்கள் கடந்த  பல வருடங்களாக தூத்துக்குடி அண்ணா பழைய பேருந்து நிலைய வளாகத்தில் ஸ்டாண்ட் அமைத்து தொழில் செய்து வருகின்றனர். சமீபத்தில் பழைய பேருந்து நிலையத்தினை இடம் மாற்றம் செய்யும் வகையில் புதிய பேருந்து நிலையத்தோடு ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக மாற போவதாக தகவல் அறிந்ததை தொடர்ந்து அவ்வாறு இடம் மாற்றம் செய்யும் பட்சத்தில் திருச்செந்தூர், திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், பேருந்துகள் , புறப்படும் இடத்திற்கு அருகில் எங்களது சங்கத்தை சார்ந்த பழைய பேருந்து நிலைய 83ஆட்டோ ஒட்டுனர்கள் ஆட்டோக்களை இயக்கி தொழில் செய்ய அனுமதி வழங்குமாறு  மாலட்ட ஆட்சி தலைவரிடம்  கோரிக்கை மனு ஒன்றை தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பாக கொடுக்கப்பட்டது.