இடுகைகள்

பெண்கள் மேம்பாட்டு வளர்ச்சி மையத்தை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை தொடங்குகிறது. உலக மகளிர் தின கொண்டாட்டத்தில் 1500-க்கும் மேலான பெண்கள் பங்கேற்றனர்.  தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களின் ஒட்டுமொத்த நலனை குறிக்கோளாகக் கொண்டு, தூத்துக்குடி நகரில் பெண்கள்  மேம்பாட்டு வளர்ச்சி மையம் தொடங்கப்படுவதை ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் இன்று அறிவித்திருக்கிறது.  உலக மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டுள்ள பெண்கள் மேம்பாட்டு வளர்ச்சி மையம், தொழில்முனைவு செயல்பாட்டின் வழியாக, பொருளாதார ரீதியாக தற்சார்புள்ளவர்களாக பெண்கள் முன்னேறுவதை குறிக்கோளாக கொண்டிருக்கிறது.  தொழிற்முனைவோர்க்கான முக்கிய மூன்று தேவைகள் நிதி உதவி, திறன் மேம்பாடு மற்றும் தொழிற்நுட்ப வர்த்தகத்திற்கு வழிவகுத்தல். மேற்கூறிய மூன்று தேவைகளையும் பூர்த்தி செய்ய தேவையான வசதிகளாகிய  நுண்கடன் திட்டம், திறன் மேம்பாடு  மற்றும் வளர்ச்சி மையம் ஆகியவற்றை ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் வழங்க உறுதிகொண்டுள்ளது. இன்று நடைபெற்ற ஒரு சிறப்பான விழாவில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமைச் ச...

வெயிலில் பணி செய்யும் காவலர்களுக்கு மோர் லெமன் ஜீஸ்

படம்
                   வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தூத்துக்குடி போக்குவரத்து காவலர்களுக்கு கோடை காலம் முழுவதும் நீர்,மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா இ.கா.ப. அவர்கள் இன்று காலை 10.15 மணிக்கு தென்பாகம் காவல் நிலையத்தில் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் லெமன் ஜுஸ் போன்ற பாணங்கள் காவல் துறை கண்காணிப்பாளர் வழங்கினார்.
படம்

ஆயிரம் மெகா வாட் மின் நிலையம் நாட்டிற்கு அர்பணிப்பு

படம்
         ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி நிலையம் இன்று நாட்டிற்கு அர்பணிக்கப்டடது.                      04-03-2019  திங்கள் : நெய்வேலி என்.எல்.சி. நிறுவனமும், தமிழ்நாடு கழகமும் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள் கொண்ட வ.உ.சி துறை முகம் அருகில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடியில்  மின்சார உற்பத்தி செயல்பாட்டிற்கு  பின் இன்று மத்திய இரயில்வே மற்றும் நிலக்கரி துறை அமைச்சர்  திரு.பியூஸ் கோயல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு செய்தார்" மேலும் விருதுநகர், மற்றும் இராமநாதபுரம்   மாவட்டத்தில் என் .எல்.சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள  150 மெகா வாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தையும் இந்த நிகழ்ச்சியோடு நாட்டிற்கு அர்பனிக்கப்பட்டது.                                      இந்த நிகழ்ச்சிக்கு   மத்திய இணை அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன், தமிழக மின்சார துறை அமைச்சர் பி.தங்கமண...

சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் நலதிட்ட உதவிகள் ...

படம்
தூத்துக்குடியில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 30 லட்சம் மதிப்பீல் நலத்திட்ட உதவிகளை அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.      தூத்துக்குடி ஜெயலலிதா 71வது பிறந்தநாளையொட்டி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சேவியர், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான்சி, மாரியப்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர் முருகன் வரவேற்புரையாற்றினார். அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் பேசுகையில்  இணை ஓருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் பன்னீர்செல்லவம் ஆணைங்கிணங்க நடைபெறுகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த தாலிக்கு தங்கம், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்புக், சைக்கிள், மடிக்கணினி, கர்ப்பினி பெண்களுக்கு 18 ஆயிரம், மிக்சி, கிரைண்டர், போன்ற சாதனை திட்டங்களை முதலமைச்சர் நடைமுறைப்படுத்தி செயல்படுத்தி வருகின்றார். தமிழர் திருநாளுக்கு எல்லோருக்கும் ஆயிரம் வழங்கிய முதல்வர் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள அமைப்...

பாரதிக ஜனதா கட்சி சார்பில் இரு சக்கர வாகன பேரணி

படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பாக இரு சக்கர வாகன பேரணி மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  தூத்துக்குடி போல் பேட்டை பகுதியில் அமைந்துள்ள பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் முன்பு  இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து சென்றனர். இதை மாநில அமைப்பு பொதுச் செயலளார் கேசவ விநாயகம் அவர்கள் கலந்து கொண்டு இருசக்கர வாகன பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி கட்சி அலுவலகம் முன்பு தொடங்கி தேரடி திடல் வரை சென்றடைந்தது. தலைமை தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர் குலசை ரமேஷ், கலந்துகொண்டவர்கள் மாவட்ட துணைத் தலைவர் PM பால்ராஜ்,  மாவட்ட பொதுச் செயலாளர் சிவராமன், மாவட்ட பொருளாளார் சண்முகசுந்தரம்,சட்டமன்ற பொருப்பாளர் VSR.பிரபு, தெற்கு மண்டலத் தலைவர் சின்னத் தங்கம், கிழக்கு மண்டலத் தலைவர் சந்தனக்குமார் மற்றும் 200க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் வேலுமணி தூத்துக்குடி வருகை:

படம்
                                                                  1-3-2019 வெள்ளி                                                  தூத்துக்குடிக்கு வருகை தந்த நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு. எஸ்.பி வேலுமணிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு கொடுக்கப்படடது.இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர்  திரு.சி.த.செல்லப்பாண்டியன், தூத்துக்குடி மாநகராட்சியின் முன்னால் துணை மேயர் திரு .செவியர், தூத்துக்குடி மேற்கு பகுதி கழக செயலாளர் திரு.முருகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.