இடுகைகள்

நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு: எதற்கெல்லாம் அனுமதி? நீடிப்பு ?

 ஊரடங்கு உத்தரவு நான்காவது முறையாக மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அடுத்த சுமார் 2 வாரங்களுக்கு இந்தியாவில் எதற்கெல்லாம் அனுமதி, எதற்கெல்லாம் தடை நீட்டிக்கப்படுகிறது என்பதை தற்போது பார்க்கலாம். பலரும் எதிர்பார்த்திருந்த விமான போக்குவரத்திற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 31ஆம் தேதி வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் எதுவும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவைகளும் இயங்காது. பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். தற்போது போலவே உணவகங்கள் ஆன்லைன் டெலிவரி சேவைகளை தொடரலாம். சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள், பார்கள் திறக்கப்படாது. விளையாட்டு அரங்கங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளjது.

ஊரடங்கு நீட்டிப்பு: :: விரிவான தகவல்கள்

மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்களில் பாஸ் இல்லாமல் வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை அத்தியாவசிய பணிகளுக்காக, வேளாண்மை, வியாபாரம், மருத்துவம் போன்ற பணி நிமித்தமாக பயணம் செய்ய மட்டும் பயன்படுத்தலாம். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்வதை கண்டிப்பாக பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஏற்கனவே இருக்கும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லாமல் கட்டுப்பாடுகள் தொடரும். புதிய தளர்வுகளின்படி, தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில 25 மாவட்டங்களில் தற்போதுள்ள 50 சதவீத பணியாளர்களை 100 சதவீத பணியாளர்களாக உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.    சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தற்போதுள்ள தளர்வுபடி 50 நபர்களுக்கு குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீத பணியாளர்கள...

துபாயில் இறந்த தூத்துக்குடி இளைஞர் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை: உறவினர்கள் கோரிக்கை

துபாயில் இறந்த தூத்துக்குடி இளைஞர் உடலை துபாயில் இறந்த தூத்துக்குடி இளைஞர் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர், தமிழக முதல்வருக்கு குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.. தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, புளியம்பட்டி அருகிலுள்ள கொடியன்குளம் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் மகன் வேல்முருகன் (35). துபாய் நாட்டில் உள்ள RAS AL KHAIMAH என்ற இடத்தில், KHANBOLLI Electro Mechanical Cont LLC எனும் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். கொரோனா நோயால் துபாய் நாட்டிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக இளைஞர் வேல்முருகன் தனது சக பணியாளர்களுடன் 10.05.2020 அன்று அவரது நிறுவனத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். அப்போது திடீரென்று மின்னழுத்தம் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.  மருத்துவமனைக்கு கொண்டு சென்று அதனை உறுதி செய்துள்ளனர். இப்போது உடல் துபாயில் உள்ள மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வைத்துள்ளனர். துபாயில் இருக்கும் வேல்முருகன் மனைவி மணிமேகலை தனது கணவரின் உடலைக் கூட...

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வெனி மாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

படம்
                                                                                                தூத்துக்குடி மாவட்டத் தில்            தனியார்  (SETC  )பணிபுரிந்து வநத  பீகார் மாநிலத்தை சேர்ந்த 263 தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு செல்ல திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு அரசு போக்குவரத்து கழகத்தின் 10 சிறப்பு பேருந்துகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.05.2020) வழிஅனுப்பி வைத்தார்.           பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:                                           ...

நான்காவது கட்ட ஊரடங்கு பிரதமர் மோடி அறிவிப்பு

படம்
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நான்காவது முறையாக பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்றும், அது மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 3-ஆம் கட்டமாக அமலில் உள்ள ஊரடங்கு, வரும் 17-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று பொதுமக்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலர் தங்களுடைய வேலையை இழந்துள்ளனர். வெளிநாடுகளில் லட்சக்கணக்கில் மக்கள் பலியாகியுள்ளனர். நாம் கடினமான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் வாழ்க்கை நடத்துவதே சிரமமாக உள்ளது. இப்படியொரு நிலைமையை நாம் பார்த்ததே கிடையாது. இந்த இக்கட்டான நிலையிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும். இந்தியாவில் பிபிஇ சிறப்பு உடைகள் உற்பத்தி செய்யப்பட்டதில்லை. இன்று 2 லட்சம் பிபிஇ சிறப்பு உடைகள் தயாரிக்கப்படுகின்றன. கரோனாவால் உலகமே மாறிக் கொண்டிருக்கிறது.இந்தியாவின் மாற்றங்களை உலகமே கவனிக்கிறது. அதேசமயம், நாமு...

கோவில்பட்டி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

படம்
கோவில்பட்டி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு                                                                                                                            தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாண்டவர்மங்களம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜிவ்நகர்; மற்றும் இளம்புவனம் தனிமைபடுத்தபட்ட பகுதியில்; மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.05.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.                                      மேலும் வ.உ.சி. பள்ளி மைதானத்தில் தற்காலிகமாகசெயல்பட்டுவரும்காய்கறி சந்த...

கொரோணா தொற்று தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

படம்
கொரோணா தொற்று தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் மழவைராயநத்தம் ஊராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு   வரும்  தடுப்பு  பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  நேரில்  ஆய்வு                                                   . . .                                                                                                                       தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் மழவைராயநத்தம் ஊராட்சி தனிமைபடுத்தபட்ட பகுதியில்; மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று நோய் த...