இடுகைகள்

கொரோனா தடுப்பு பணிகளையும், வீடு, வீடாக சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்யும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு

படம்
}த்துக்குடி மாநகராட்சி உட்பட்ட திரேஸ்புரம் தோமையார் கோவில் தெரு நோய் கட்டுப்பாட்டுபகுதிகளில்மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு பணிகளையும், வீடு,  வீடாக சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்யும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.07.2020) நேரில் சென்று பார்வையிட்டு  ஆய்வு செய்தார். மேலும், நோய்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள வீட்டில் அனைவருக்கும் தெர்மல் ஸ்கிரினிங் மற்றும் பல்சஸ் பரிசோதனை செய்து, படிவத்தில் தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும் எனவும், சளி, காய்ச்சல், இரும்பல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்களின் விபரங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள்மூலம்மாவட்டநிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.  பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தாவது:                 தமிழக அரசின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சிக்க...

தரிசு நிலங்களை பண்படுத்தி வேளாண்மை செய்திட 50 சதவிகித அரசு மானியம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப் நந்தூரி , இ.ஆ.ப., அவர்கள் தகவல்

படம்
 தரிசு நிலங்களை பண்படுத்தி வேளாண்மை  செய்திட 50 சதவிகித அரசு மானியம் - மாவட்ட ஆட்சித்தலைவர்  சந்திப் நந்தூரி , இ.ஆ.ப., அவர்கள் தகவல்  ------------------------------------------------------------------------------------------------------------   தமிழ்நாடு அரசு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், இரு மடங்கு  உற்பத்தி மூன்று மடங்கு லாபம் என்ற இலக்குடன் தொடர்ந்து முற்போக்கான,  புதுமையான திட்டங்களை விவசாயிகளுக்கு அளித்து வருகிறது. இந்த வருடம் 2020- 21 மத்திய அரசுடன் இணைந்து பயறு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய்வித்து  பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு, 5 ஆண்டுகள் அல்லது அதற்கு  மேலாக தரிசாக போடப்பட ;டுள்ள நிலங்களை மீண்டும் விவசாயம் செய்திட ஏதுவாக  நிலத்தைப் பண்படுத்தும் செலவில் 50 சதவிகித மானியம் வழங்கும் திட்டத்தை  செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை, தரிசாக உள்ள நிலங்களை  பண்படுத்தி சிறுதானிய பயிர்கள் பயிரிடுவதற்கு 250 எக்டர் இலக்கும், பயறு வகை  பயிர்கள் பயிரிட 250 எக்டர் ...

M. பாவா அஹமது ரிஃ பாயி அவர்களது 3வது ஆண்டு நினைவு நாள்

படம்

பொது மக்களிடம் எவ்வாறு ? நடந்து கொள்ள வேண்டும் உதவி ஆய்வாளர்களுக்கு ஜ.ஜி - எஸ்.பி அறிவுரை

படம்
  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக டி.ஐ..ஜி திரு.பிரவீண்குமார் அபிநபு இ.கா.ப அவர்கள்மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்கண்காணிப்பாளர்திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.                                                                                                                                                                                                             ...

தூத்துக்குடியில் காவல் துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்

படம்
  தூத்துக்குடி  வடபாகம் திரேஸ்புரம் நாட்டுப்படகு பொது பஞ்சாயத்து  அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார்  அவர்கள் தலைமையில்  போலீஸ் பொதுமக்கள்நல்லுறவுக்கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் (04.07.2020) காலை தூத்துக்குடியில்உள்ளதிரேஸ்புரம் பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கவும், அது நம்மை பாதிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் எடுத்துக்கூறினார்.                   பின்னர்  தூத்துக்குடி வடபாகம் நாட்டுப்படகு பொது பஞ்சாயத்து அலுவலகத்தில் அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். காவல்துறை உங்களுக்கு உதவ எந்த நேரத்திலும் தயாராக உள்ளது எனவும் உங்களது குறைகளை என்னிடம் நேரடியாக தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.                                             ...

ஈரான் நட்டிலிருந்து தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சார்ந்த மீனவர்கள் இந்திய கப்பல் படை சேர்ந்த JALASWA கப்பல் மூலம் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் வருகை

படம்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு ஈரான் நாட்டில்; இருந்து இந்திய கடற்படைக்கு சேர்ந்த  JALASHWA    கப்பல் மூலம் வருகை தந்த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 687 மீனவர்களை சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் (01.07.2020) அன்று நடைபெற்றது.          இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு       ஈரான் நாட்டில் இருந்து இந்தியகடற்படைக்கு சேர்ந்த JALASHWA   கப்பல் மூலம் வருகை தந்த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 687 மீனவர்களை வரவேற்று, பயணிகள் கப்பலில் இருந்து இறங்கியதுடன் கைகளை சுத்தம் செய்தற்கு சாணிடைசர் வழங்கப்பட்டதையும், உடமைகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, உடல் வெப்பநிலை கண்டறிய செய்யப்பட்ட தெர்மல் ஸ்கிரினிங் பணிகளையும் பார்வையிட்டார்  . இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகத்தின் தலைவர் திரு.டி.கே.ராமச்சந்திரன், இ.ஆ.ப., ...

தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்றம் சார்பாக வழங்கப்பட்ட நல திட்ட நிகழ்ச்சி

படம்