இடுகைகள்

மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ஆலோசனைகூட்டம்

படம்
23.07.2020  தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம், தூய பனிமய  அன்னையின் பெருவிழா ஆகிய நிகழ்ச்சிகளில்பொதுமக்கள்கலந்துகொள்ள வேண்டாம். தங்களது வீட்டில் இருந்தே யூடுயுப் மற்றும் தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சிகளை பார்த்துக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அவர்கள் மற்றும் மாவட்டஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரிஇ இ.ஆ.ப.இ அவர்கள் வேண்டுகோள்  -------------------------------------------------------------- தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ஆலோசனைகூட்டம்மாவட்டஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரிஇ இ.ஆ.ப.இ அவர்கள் தலைமையில் இன்று(23.07.2020) நடைபெற்றது. கூட்டத்தில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில்இ தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம்இ தூய பனிமய அன்னையின் பெருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்பாகவும்இ திருவிழா நேரடியாக ஒளிபரப்புவது செய்வது தொடர்பாகவும் ஆலோ...

தூத்துக்குடி பிரையண்ட் நகரில் கொரனா பரிசோதனை முகாம்

படம்
  கொரனா பரவுவதை கட்டுப்படுத்திட  22 -7- 2020 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை  வணிகர்கள் மற்றும்  பொதுமக்கள் பரிசோதனை செய்து கொள்ள ... தூத்துக்குடி மாவட்ட சுகாதரத் துறையால் ..  தூத்துக்குடி பிரையண்ட் நகர் காமராஜ் மகாலில் பரிசோதனை முகாம்   நடைபெற்று வருகிறது 

அம்மாவாசை தினத்தில் கடற்கரை மற்றும் ஆற்றங்கரையில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க காவல் துறை வேண்டு கோள்

படம்
கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், குற்றவியல்  விசாரணை நடைமுறைச்சட்டம் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாலும் நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடி அமாவாசை நாளில் சடங்கு, சம்பிரதாயங்கள் செய்வதற்காக  தாமிரபரணி ஆற்றங்கரை மற்றும் கடற்கரையோரங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு பாய்ந்து செல்லும் வழிகளில் ஆற்றங்கரை  ஓரங்களில் அமைந்துள்ள முக்கிய படித்துறைகளில்மற்றும்கடற்கரையோரங்களில் ஆண்டுதோறும் ஆடி, அமாவசை நாளில் அதிக அளவில் பொதுமக்கள் ஒன்று கூடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும், மறைந்த உறவினர்களுக்கும் திதி, தர்ப்பணம்  மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்களை செய்வதும் நீராடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.                                                   இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் க...

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் தலா ரூ.17 லட்சம் மதிப்பில் கொரோனா தொற்று பரிசோதனை 2 ஆர்டிபிசிஆர் கருவிகளை துவக்கி வைப்பு .

படம்
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா  தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாண்புமிகு சுகாதாரத்துறை  அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் இன்று (18.07.2020) நடைபெற்றது. கூட்டத்தில் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள், கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய நேரத்தில் உணவு வகைகள் வழங்கிடவேண்டும்.இதற்குதேவைப்பட்டால் கூடுதலாக பணியாளர்களை தற்காலிக அடிப்படையில் ஈடுபடுத்திட வேண்டும். அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய சிசிச்சைகளை அளித்திட வேண்டும். தூத்துக்குடி மருத்துவமனையில் ஆக்சிசன்  லைன் படுக்கைகளுக்கு ஏற்றவாறு தேவையான அளவு அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்கள். கூட்டத்தில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்...

பெருந்தலைவர் காமராஜரின் 118 வது பிறந்த நாள் விழா

படம்
தூத்துக்குடி பிரையண்ட் நகர் ஐக்கிய நாடார்கள் சங்கத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 118 வது பிறந்த நாள் விழா பெருந்தலைவர் காமராஜர் மஹாலில் கொண்டாடப்பட்டது. பிரையண்ட் நகர் ஐக்கிய நாடார்கள் சங்க நிர்வாகிகள் சட்ட ஆலோசகர்கள் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டனர். தூத்துக்குடி பாசகரங்கள் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரைன்ட் நகர், டூவிபுரம்;, மேலசண்முகபுரம் மற்றும் ஸ்பிக் நகர் ஆகிய நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

படம்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரைன்ட் நகர் 8வது தெரு, டூவிபுரம்  இரண்டாவது மற்றும் மூன்றாவது தெரு, மேலசண்முகபுரம் வன்னார் இரண்டாவது தெரு மற்றும் ஸ்பிக் நகர் ஆகிய நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.07.2020)  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, நோய் கட்டுப்பாட்டு பகுதியில்  உள்ள அனைவருக்கும் தெர்மல் ஸ்கிரினிங் மற்றும் பல்சஸ் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், மேலும் இப்பகுதியில் எந்த ஒரு தளர்வும் அனுமதிக்க கூடாது எனவும், கொரோனா தடுப்பு பணிகளை இப்பகுதியில் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டநபர்களின்தொடர்பாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் டூவிபுரம் நான்காவது தெருவில் அமைந்துள்ள சங்கரநாராயணன் பூங்காவில் மாநகராட்சி மூலம் காய்ச்சல் மருத்துவ முகாமில் மருத்துவ பரிசோதனை செய்யும் பணிகளை  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து ஸ்பிக் ...

ழுழு ஊரடங்கை தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

படம்
கொரோனா வைரஸ்பரவலைதடுப்பதற்குஇன்றுமுழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், ஊரடங்கு அமல்படுத்தி வருவது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று மாவட்டம் முழுவதும்நேரில்சென்றுஆய்வு.தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (12.07.2020) ஒரு நாள்முழுஊரடங்குஅமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று 19.07.2020 மற்றும் 26.07.2020 ஆகிய இரு ஞாயிற்று க்கிழமைகளிலும் முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.                                        இன்று மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் ஊரடங்கு அமல்படுத்தும் பணியிலும்,  பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்காமல் இருப்பதற்கான  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.  காவல்துறையினரின் இப்பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மாவட்டம் முழுவதும் ரோந்து சென்று ஆய்வ...