இடுகைகள்

.ரூ 8 லட்சம் செலவில் கண்மாய் வடிகால் தூர்வாரி கரை பலப்படுத்தும்; பணிகள் . மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைப்பு

படம்
 குலையன்கரிசல் ஊராட்சியில் இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் தூத்துக்குடி சமூக பொறுப்பு நிதி ரூ8லட்சம் செலவில் கண்மாய் வடிகால் தூர்வாரி கரை பலப்படுத்தும்; பணிகளை  ளை  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி , இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குலையன்கரிசல் ஊராட்சியில் இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் தூத்துக்குடியின் சமூக பொறுப்பு நிதி ரூ.8 லட்சம் செலவில் கண்மாய் வடிகால் தூர்வாரி கரை பலப்படுத்தும் பணிகள் துவக்க நிகழ்ச்சி இன்று (31.07.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு, கண்மாய் வடிகால் வாய்க்கால் தூர்வாரி கரை பலப்படுத்தும்  பணிகளை துவக்கி வைத்தார்.   பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடிமராத்து திட்டம் என்ற அற்புதமான திட்டத்தினை தமிழகம் முழுவது...

தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் அதன் தலைவரும், திரைப்பட இயக்குநருமான திரு.பாரதிராஜா அவர்கள் தலைமையில் அமைச்சரிடம் கோரிக்கை மனு

படம்
மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்களை இன்று தமிழ் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் சந்தித்து தங்களது கோரிக்கை மனுவினை அளித்தார்கள். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (28.7.2020) மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்களை, தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் அதன் தலைவரும், திரைப்பட இயக்குநருமான திரு.பாரதிராஜா அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளடங்கிய மனுவினை அளித்து, தங்களது கோரிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டார்கள்.                                                                                                                  ...

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் வயல்களில் நுண்ணீர்ப் பாசன முறையினை அமைத்து பயன்பெறலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்

படம்
துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் வயல்களில் நுண்ணீர்ப் பாசன முறையினை அமைத்து பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் --------------------------------------------------------------------- தமிழ்நாடு நீர்ப்பற்றாக்குறை உள்ள மாநிலம் என்பதால், பாசன வசதி ஏதும் இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி, நுண்ணீர் பாசன முறையினை அமைப்பதற்கு முன்வரும் விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், நுண்ணீர் பாசனமுறைக்காக வழங்கப்படும் மானியம் மட்டுமல்லாது, கீழ்;க்காணும் துணைநிலை நீர் மேலாண்மை பணிகளுக்கும் தோட்டக்கலைத்துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது. பாதுகாப்பான குறு வட்டங்களில் குழாய்க்கிணறு ஃ துளைக்கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.25000/- டீசல் பம்புசெட் ஃ மின்மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீத மானியம் ரூ.15.000 /-த்திற்கு மிகாமலும். வயலுக்கு அருகில் பாசனநீரினை கொண்டு செல்லும் வகையில் நீர்ப்பாசனகுழாய் அமைப்பதற்கு 50 சதவீத மானியத்தொகை எக்டருக்கு ரூ.10.000/-க்கு மிகாமலும், பாதுகாப்பு வ...

தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலமாக ஊக்க தொகை

படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.2,500 ஊக்கதொகையாக வழங்கப்படும்; - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் --------------------------------------------------------------  தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறிகளை பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளால் குறிப்பாக கத்திரி, மிளகாய், தக்காளி, பீர்க்கை, வெண்டை, பாகற்காய், புடலை, வெள்ளரி, பூசணி, தர்பூசணி, பரங்கி, சுரை போன்ற காய்கறிகள்  அனைத்து வட்டாரங்களில்  பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.         திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் காய்கறி பயிர்களை சாகுபடி செய்வதற்கு கொள்முதல் செய்த விதை, நடவு செடிகளின் விலை பட்டியல்,  கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற 10(1) அடங்கல் மற்றும் சாகுபடி செய்யப்பட்ட வயலின் புகைப்படம் ஆகிய ஆவணங்களை அந்தந்த வட்டார  தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் சமர்ப்பித்து பயன் அடையவும் இந்த ...

குலசேகரப்பட்டிணம் அருள்தரும் முத்தாரம்மன் கோவில் ஆடிக்கொடை திருவிழா

படம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்கொடை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கோவிட் 19 வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால்  ஆடிக்கொடை திருவிழா 28.07.2020 கொடைக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கி திருக்கோவில் வளாகத்திற்குள் நடைபெற உள்ளது.                                                                                                                                                                                 ...

திருமண மண்டபங்களில் 200 பேர் கலந்து கொள்ளும் வகையில் மீண்டும் திருமண மண்டபங்கள் திறக்க அனுமதி வேண்டி கோரிக்கை மனு

படம்

தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளர்கள் உட்பட 14 காவல்துறையினருக்கு

படம்
கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளர்கள் உட்பட 14 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.  கடந்த 21.07.2020 அன்று இரவு சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி கே.டி.சி நகரில் அதே பகுதியில் வசித்து வரும் பிரேம்குமார் (27) என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்ட 6 எதிரிகளை 24 மணி நேரத்தில் கைது செய்த சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. முத்துசுப்பிரமணியன்உதவி ஆய்வாளர்கள் திரு. முத்துகணேஷ்,திரு. நம்பிராஜன், திரு. ராஜபிரபு. திரு. ராஜா,  முதல் நிலைக்காவலர்கள் திரு. முத்துமணி, திரு. கலைவாணர் , திரு. சுப்பிரமணியன்காவலர் திரு. கண்ணன் ஆகியோரின்சிறந்தபணியாற்றியமைக்காகவும் இணையதள மோசடிய மூலம் பணத்தை இழந்த பொது மக்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கொடுத்த புகார் மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூபாய் 57.179 /- ஐ கிடைக்கச் செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு உதவி ஆ...