இடுகைகள்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பாக தூத்துக்குடி போக்கு வரத்து காவல் துறைக்கு 100 தடுப்புகள் ( பேரி கார்டுகள் )

படம்
14-08-2020   தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறைக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பாக 100 தடுப்புகள் (பேரிகார்டுகள் )   வழங்கும் நிகழ்ச்சியும், பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர், முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பாக தூத்துக்குடி மாநகர காவல்துறை போக்குவரத்து பிரிவுக்கு முதற்கட்டமாக 100 தடுப்புகளை ( பேரிகார்டுகள்) இன்று குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறை பிரிவுக்கு தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் பொது மேலாளர் திரு. சுரேந்திரன், மண்டல மேலாளர் திரு. மோகன்ராஜ், முதுநிலை மேலாளர்கள் குமரேசன் மற்றும் முருகேசபாண்டி ஆகியோர் ஒப்படைத்தனர். அதன்பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சார்பாக தடுப்புகள் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளையும, அதனை எதிர்கொ...

கரோனா தொற்று பணியினை தைரியத்தோடும் அர்பணிப்போடு எதிர் கொண்டு மீண்ட காவலர்கள் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு:

படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து  மீண்டு  பணிக்கு திரும்பிய தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் 38 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பழக்கூடை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை எதிர்கொண்டு பொதுமக்களை காப்பதில் முன் களப்பணியாளர்களில் காவல்துறையின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் காவல் நிலையம் ஆய்வாளர் திரு. பட்டாணி, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளர் திருமதி. லட்சுமி பிரபா, முதல் நிலைக் காவலர் திருமதி. ராமலெட்சுமி, ஸ்ரீவைகுண்டம்; காவல் நிலையம் ஆய்வாளர் திருமதி. சொர்ணராணி, சிறப்பு உதவி ஆய்வளார் திரு. பிள்ளைமுத்து, முதல் நிலை பெண் காவலர் திருமதி. திருவரங்கசெல்வி, காவலர் திரு. நித்தியானந்தன், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு ஆய்வளார் திரு. மயிலேறும் பெருமாள், தூத்துக்குடி தெற்கு போக்குவரத்து பிரிவு தலைமைக் காவலர் திரு. சேரந்தையன், சிப்காட் காவல் நிலைய உதவி...

காவல்துறையினரின் பணியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு

படம்
இன்று முழு ஊரடங்கை அமல்படுத்தும் காவல்துறையினரின் பணியை தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, தடையை மீறி வெளியே வந்தவர்களிடம் காரணங்கள் கேட்டறிந்து, அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, கபசுரக்குடிநீர் வழங்கினார்.    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (09.08.2020) ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையின் முழு ஊரடங்கு பணியினை தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். திரு. ஜெயக்குமார் அவர்கள் இன்று ஆய்வு செய்தார்.   அந்த ஆய்வின்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் யாரும் தேவையில்லாமல் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே செல்லும்போது சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், அவ்வப்போது சோப்பு மற்றும் கிருமி நாசினி ...

தூத்துக்குடியில் திருடு போன 11 லட்சம் மதிப்பிலானா நகைகள் கண்டு பிடித்து உரிமையாளரிடம் ஒப்படைப்பு

படம்
தூத்துக்குடி, முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்பிக் நகரில் திருடு;போன சுமார் ரூபாய் 11 லட்சம் மதிப்பிலான 40 சவரன் தங்க நகைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உரிமையாளரிடம் நேரில் ஒப்படைத்தார்.  தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் ஸ்பிக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிலுவை சகாயம் மகன் வின்ஸ்டன் அந்தோணி சேவியர் (வயது 31), ஸ்பிக் ஆலையில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து வரும் இவர் தனது குடும்பத்துடன் ஸ்பிக் குடியிருப்பில் "சி" பிளாக்கில் வசித்து வருகிறார். இந்நிலையில் 26.03.2020 அன்று மாலை வின்ஸ்டன் அந்தோணி சேவியர் தனது மனைவி ஜேசு சகாயம் மோனிகாவுடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். வீட்டை பூட்டியவர் சாவியை, அங்கேயே எங்கோ ஒரு இடத்தில் விட்டுச் சென்றிருக்கிறார்.   சென்றவர்கள் மறுநாள் மாலை வீடு திரும்பியபோது சாவி இல்லாததால், இன்னொரு சாவியை வைத்து திறந்து வீட்டிலிருந்துள்ளார். அதன் பின்னரே வீட்டிலிருந்த சுமார் 40 பவுன் நகைகள் களவு போயுள்ளது தெரியவந்துள்ளது. அதன் பின்னரே 28.03.2020 அன்று வின்ஸ்டன் அந்தோ...

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினருக்கு முககவசம் - கிருமி நாசினி - பைபர் முகத்திரை போன்றவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.

படம்
  தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு 12000 முகக்கவசம், 1800 கிருமி நாசினி பாட்டில்கள் மற்றும் பைபர் முகத்திரைகள் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று வழங்கினார்.    தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் உள்ள தூத்துக்குடி மாநகரம், தூத்துக்குடி ஊரகம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், விளாத்திக்குளம், கோவில்பட்டி, மணியாச்சி ஆகிய 8 உட்கோட்டங்களில் பணிபுரியும் காவல்துறையினர் உட்பட அனைத்து காவல்துறையினருக்கும் 12000 முகக் கவசங்கள், 1800 கிருமி நாசினி பாட்டில்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினருக்கு 50 பைபர் முகத்திரைகள் ஆகியவற்றை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு ஒவ்வொரு உட்கோட்ட வாரியாக அனைத்து உட்கோட்ட காவல்துறையினருக்கும் இன்று (08.08.2020) மாவட்ட காவல்துறை அலுவலக வளாக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.  இதற்கான ஏற்பாடுகளை ஏகம் என்ற அமைப்பு சார்பாக செய்திருந்தனர். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. செல்வன் மற்றும் திரு. கோபி, தூ...

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வரின் உரை

படம்
  7.8.2020  அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு.பழனிசாமி அவர்கள் தலைமையில் திருநெல்வேலி மாவட்டஆட்சித்தலைவர்அலுவலகத்தில்நடைபெற்ற திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது  கூட்டத்தில்  .... உலகில் உள்ள  மக்கள் அனைவரும்    அச்சத்தில்  வாழ்கின்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்என்றதொற்றுநோய்தமிழகத்திலும் பரவியுள்ளது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு மாண்புமிகு அம்மாவின் அரசு சிறப்புத் திட்டங்களை வகுத்து, அதன்மூலம் நோய்ப் பரவல் குறைக்கப்பட்டிருக்கிறது.இந்தியாவிலேயே,தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும்அதிகரித்துள்ளது.இறப்பு சதவிகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்குத்தேவையான மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான படுக்கை வசதிகள் ஏற்...

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காயல்பட்டிண த்தில் கொரோணா வைரஸ் தொற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி

படம்
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரக்குடிநீh வழங்கப்பட்டது.       01.08.2020 அன்று மாலை தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவக்கைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பின் அங்கிருந்த பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கினார்.  அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும், எந்த ஒரு இடத்திலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், இந்த மூன்றை கடைபி...