தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையில் வல்லநாடு அருகே கொலை குற்றவாளி கைது நடவடிக்கையின்போது வெடிகுண்டு வீச்சில் மரணமடைந்த காவலர் சுப்பிரமணியம் அவர்களுக்கு தமிழக காவல் துறை இயக்குநர் திரு.ஜெ.கே.திரிபாதி, இ.கா.ப. தென்மண்டல சரக காவல் துறை தலைவர் திரு.முருகன், இ.கா.ப. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., மற்றும் காவல்துறை அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். ------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையை சேர்ந்த ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றும் சுப்பிரமணியம் வல்லநாடு அருகே கொலை குற்றவாளி கைது நடவடிக்கையின்போது வெடிகுண்டு வீச்சில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரசு பணி மேற்கொள்ளும்போது ஏற்பட்ட இந்த துரதிர்ஷ்டமான சம்பவத்தில் உயிரிழந்த சுப்பிரமணியம் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து அவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ.50 லட்சம் வழங்கவும் குட...