இடுகைகள்

சமூக வலை தளங்களில் அமைதிக்கு பங்கம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

படம்
     இன்று முழு ஊரடங்கை அமல்படுத்தும் காவல்துறையினரின் பணியை தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு - சமூக வலைதளங்களில் ஜாதி, மதக் கலவரத்தையோ, பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்கு புறம்பான செய்தியையோ பரப்புவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என மாவட்ட எஸ்.பி  எச்சரிக்கை.  கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (23.08.2020) ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையின் முழு ஊரடங்கு பணியினை தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று ஆய்வு செய்தார்.  ...

புதுப்பிக்கப்பட்ட மகாகவி பாரதியார் இல்லம் : அமைச்சர் கடம்பூர் ராஜீ திறந்து வைப்பு

படம்
தூத்துக்குடி எட்டயபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் பழமை மாறமல் புதுப்பிக்கப்பட்ட  மகாகவி பாரதியார் இல்லத்தை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி எட்டயபுரத்தில் பழமை மாறமல் புதுப்பிக்கப்பட்ட  மகாகவி பாரதியார் இல்ல திறப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.08.2020) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட இல்லத்தில் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.போ.சின்னப்பன் அவர்கள்  முன்னிலை வகித்தார்கள். பின்னர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:- இந்திய திருநாட்டிலேயே நாட்டின் விடுதலைக்கு வி...

மாற்று திறனாளிகள் நல சங்கத்தின் பிரதிநிதிகள் .... தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை அவர் அலுவலகத்தில் சந்திப்பு

படம்
 

காவல்துறை சோதனைச் சாவடியின் புதிய கட்டிடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்திறந்து வைப்பு

படம்
  21.08.2020 தூத்துக்குடி மாவட்ட எல்லையான கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்துறை சோதனைச் சாவடியின் புதிய கட்டிடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றினார்.  தூத்துக்குடி மாவட்ட எல்லையான கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்துறை சோதனைச் சாவடிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை நேற்று (20.08.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.  பின் அவர் பேசுகையில் தூத்துக்குடி மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இந்த சோதனைச் சாவடி நீண்ட நாள் கோரிக்கையாகும். அருகில் தென்காசி மாவட்டம் உருவாகியுள்ளது. சோதனைச் சாவடி என்பது மிக, மிக முக்கியமான ஒன்றாகும். முன்பு இந்த சோதனைச் சாவடி சாதாரண கொட்டகையாகத்தான் இருந்தது. இப்போது காவல்துறையினர் வாகன சோதனை பணியை மேற்கொள்வதற்கு ஏற்ப அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு;ள்ளது. இந்த சோதனைச்சாவடி அமைந்திருப்பது உங்களுடைய சமுதாயப்பணியில் ஒன்றாக இந்த திறப்பு விழா அமைந்துள்ளது, இந்த சோதனைச் சாவடி கட்டிடம...

வீர மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வீரர் சுப்பிரமணியன் அவர்களுக்கு மாவட்ட காவல் துறை சார்பில் மலர் அஞ்சலி

படம்
.                                                                                  வீர மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வீரர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்களுக்கு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.  ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்ட காவலர் திரு. சுப்பிரமணியன் அவர்கள்  கடந்த 18.08.2020 அன்று மணக்கரை அருகே ரவுடியை கைது செய்யச் சென்றபோது நாட்டு வெடி குண்டு வீசப்பட்டதில் வீர மரணமடைந்துள்ளார்.  அவருக்கு இன்று (20.08.2020) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் அனைவரும், அவரது ஆத்மா சாந்தியடைய 2 நிமிட ம...

அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு (ஐ.டி.ஐ) சேர ஆன்லைன் கலந்தாயவு; மூலமாக 15.09.2020 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

படம்
    மேலும் விவரங்களுக்கு                                                                                                                                                                                   தூத்துககு;டி மாவட்ட திறன் பயிற்சி அலுவலக  உதவி   இயக்குனர்  0461-2340041 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர்  திருமதி   ஏஞ்சல் விஜய நிர்மலா   அவர்கள்   தெரிவித்துள்ளார்                         ...

குண்டு வீச்சில் மரணம் அடைந்த காவலர் சுப்பிரமணியத்தின் உடல் அனைத்து மரியாதையுடன் இறுதி சடங்கு

படம்
தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையில் வல்லநாடு அருகே கொலை குற்றவாளி கைது நடவடிக்கையின்போது வெடிகுண்டு வீச்சில் மரணமடைந்த காவலர் சுப்பிரமணியம் அவர்களுக்கு தமிழக காவல் துறை இயக்குநர் திரு.ஜெ.கே.திரிபாதி, இ.கா.ப. தென்மண்டல சரக காவல் துறை தலைவர் திரு.முருகன், இ.கா.ப. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., மற்றும் காவல்துறை அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். ------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையை சேர்ந்த ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றும் சுப்பிரமணியம்  வல்லநாடு அருகே கொலை குற்றவாளி கைது நடவடிக்கையின்போது வெடிகுண்டு வீச்சில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரசு பணி மேற்கொள்ளும்போது ஏற்பட்ட இந்த துரதிர்ஷ்டமான சம்பவத்தில் உயிரிழந்த சுப்பிரமணியம் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து அவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ.50 லட்சம் வழங்கவும் குட...