இடுகைகள்

திருச்செந்தூரில்; புதிய. போக்குவரத்து காவல்துறை புறக்காவல் நிலையம் திறப்பு

படம்
திருச்செந்தூரில்; புதிய. போக்குவரத்து காவல்துறை புறக்காவல் நிலையம் திறப்பு       தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில்; புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து காவல்துறை புறக்காவல் நிலையத்தை இன்று   மாவட்ட   காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.  இன்று (14.10.2020) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, திருச்செந்தூர் மெயின் ஆர்ச் அருகே திருச்செந்தூர் போக்குவரத்து துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட ஒலிப்பெருக்கி வசதியுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் திறந்து வைத்தார்.  அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், மக்களுக்கு சேவை செய்வதே காவல்துறையின் நோக்கமாகும். மேலும் தூத்துக்குடியின் முக்கிய நகரமான திருச்செந்தூர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும்  மக்கள் அடிக்கடி அதிகம் கூடுமிடமாகும். அதனால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் இடமாக திருச்செந்தூர் உள்ளது. இவ்வாறு அடிக்கடி ஏற்படும் ப...

தமிழக முதல்வர் வருகை : பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் திரு எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

படம்
     தமிழக முதல்வர் வருகை : பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் திரு எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் தூத்துக்குடிக்கு வருகை தரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் திரு எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.        நாளை (13.10.2020) தூத்துக்குடிக்கு வருகை தரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை முன்னிட்டு இன்று (12.10.2020) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் 5 ஏ.டி.எஸ்.பிக்கள், 19 டி.எஸ்.பிக்கள் 50 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இக்கூட்டத்தில் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு. கோபி, ச...

தமிழக முதல்வர் தூத்துக்குடி வருகை : அதற்கான முன். ஏற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு

படம்
தமிழக முதல்வர் தூத்துக்குடி வருகை : அதற்கான முன். ஏற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் பணிகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஐ_ அவர்கள் ஆய்வு செய்தார். -------------------------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்ஆய்வுக்கூட்டத்திற்கு வருகை தர உள்ளார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு  பணிகள்  குறித்து மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஐ_ அவர்கள் இன்று (10.10.2020) நேரில் ஆய்வு  மேற்கொண்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆய்வு கூட்டம் நடைபெறும்; அர...

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்துதல் - வழக்குகளின் நிலையயை ஆய்வு செய்தல் குறித்து , தூத்துக்குடி மாவட்ட S.P எஸ்- ஜெயக்குமார் உத்தரவு

படம்
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நடத்துதல் மற்றும் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் நிலையயை ஆய்வு செய்தல் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளான உதவி ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்கள், மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எங்கெங்கெல்;லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் அமைத்து குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும்,  காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புலன் விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை பரிசீலனை செய்து, அதன் மீது தினந்தோறும் எடுத்த நடவடிக்கைகள் குறித்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையங்களை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும்,  காவல் துணை கண்காணிப்பாளர்கள் அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள காவல் நிலையங்களை தினமும் ...

சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் நிறுத்தி வைப்பு : அரசு அறிவிப்பு .

படம்
தமிழ்நாடு முழுவதும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்  காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கை வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் உள்ளிட்ட தேர்வுப் பணிகள் நடைபெற உள்ளன.   இப்பணிகளுக்கு மிக அதிக அளவில் மனு பெறப்படுவதால், நேர்காணல் தேர்வு பணிகளில் மனுதாரர்கள் அதிக எண்ணிக்கையில்  கலந்து கொள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவல் முற்றிலும் நீங்காத நிலையில், நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன், சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் அரசால் நிறுத்தி வைக்கப்படுகிறது. 

MP - கனிமொழி தலைமையில் திமுக மகளிர் அணியினர் பேரணி :

படம்
  சென்னையில்ஹத்ராஸ் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கனிமொழி தலைமையில் திமுக மகளிர் அணியினர் கவர்னர் மாளிகை நோக்கி . அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து மாநி லங்களில் போராட்டம் நடக்கிறது.                                                                                                      இந்நிலையில் இன்று ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து தி.மு.க. எம்.பி.யும்,. மகளிர் அணியைச் சேர்ந்தவருமான கனிமொழி தலைமையில் கவர்னர் மாளிகை நோக்கி மெழுகு வர்த்தி ஏந்தி பேரணி சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடு...

தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியில் பைக்குகள் திருடிய இருவர் கைது : 6 பைக்குகள் பறிமுதல் - தனிப்படைக்கு எஸ்.பி - பாராட்டு

படம்
தூத்துக்குடி மாவட்டம், தெர்மல் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பைக்குகள் திருடிய இருவர் கைது, அவர்களிடமிருந்து 6 பைக்குகள் பறிமுதல் - கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. . தெர்மல்நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த சுடலைமணி மகன் சந்தனமுத்து (20) என்பவரது  இரு சக்கர வாகனம்  நகர் விலக்கு பகுதியிலும், ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூரைச் சேர்ந்த செல்லப்பா மகன் செல்வமதுகரன் என்பவரது  இரு சக்கர வாகனம் அதே பகுதியிலும், தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் மதன்குமார் (30) என்பவரது வாகனம் கீரீன் கேட் நுழைவு வாயில் அருகேயும், தூத்துக்குடி முள்ளக்காட்டைச் சேர்ந்த மூக்காண்டி மகன் முனியசாமி (27) என்பவரது வாகனம் அதே கீரீன் கேட் நுழைவு வாயில் அருகேயும், தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி மணி மகன் தினேஷ் (19) என்பவரது வாகனம் நகர் விலக்கு அருகேயும் மற்றும் விளாத்திக்குளம், பல்லாகுளத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகன் வரதராஜ் (25) என்பவரது வாகனமும் கீரீன் கேட் நுழைவு ...