இடுகைகள்

மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம்

படம்
------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று (11.03.2021) நடைபெற்றது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வாறு வாக்களிக்க வேண்டும், வாக்களிக்கும்போது நாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை விவிபேட் இயந்திரம் மூலம் அறிந்துகொள்ளும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.  கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. நமது மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 1603 வாக்குசாவடிகள் இருந்தது. தற்போது தேர்தல் ஆணையம் 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடிகளை இரண்டாக பிரிக்க சொன்னதன் அடிப்படையில் 2097 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் 100 சதவீத...
படம்
      கோவில்பட்டியில்  அண்மையில்  நடைபெற்ற பாரதீய பாரம்பரிய கலைகளை ஒன்றிணைக்கும் சம்ஸ்கார் பாரதி அறிமுக விழாவில் நமது SMS இசை பள்ளி    மாணவிகள் கலந்து கொண்டுபாராட்டும்சான்றிதழும்,   கேடயமும் பெற்றனா்.அனைவரையும் SMS இசைப்பள்ளியின் வாழ்த்துகளோடு இனைந்து நமது எழுத்தாணியும்  வாழ்த்துகிறது

தூத்துக்குடி ரோச் பார்க் முன்பு மகளீர் தின கொண்டாட்ட ம்

படம்
  உலக உலக மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி நேற்று   சமூக நல துறை . மற்றும்  பெண்கள்  மற்றும் குழந்தைகள் மேம்பாடுதுறை சார்பிலும்     தூத்துக்குடி    மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கம் சார்பிலும்    மகளிர் தினத்தை  தூத்துக்குடி ரோச் பார்க்  முன்பாக  நேற்று காலையில்  சிறப்பாக  கொண்டாடப்பட்டது                                                                                           இந்த  நிகழ்ச்சியில்   திருமதி ஷெலின் S. ஜார்ஜ்     center Administrator One Stop center, Thoothukudi  அவர்களும்.      சமூக    நல ஆர்வலர்     பேராசிரியை பாத்திமா பாபு , T..செல்வ மெர்ஸி  Protectlon  officer - DSWD-    S. வீரம்மாள் ...

, மகளீர் தின நிகழ்ச்சிகள்

படம்
அனைவருக்கும் " நமது எழுத்தாணி" யின் மகளீர்   தின வாழ்த்துக்கள்       

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசி போடுதல் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம்

படம்
  . ----------- தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்குசாவடிகளில் பணியாற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசி போடுதல் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (05.03.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சமூக நோய் தடுப்புத்துறை தலைவர் மரு.சுனிதா அவர்கள் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் குறித்து விரிவாக எடுத்து கூறினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: தமிழகம் முழுவதும் இதுவரை 6,70,000 நபர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.  முன்கள பணியாளர்கள், வருவாய் துறையினர், காவல் துறையினர், 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் இணைநோய் உள்ளவர்களுக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல...

தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் ஆகியோருக்கான பயிற்சி கூட்டம்

படம்
  -----------------  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் ஆகியோருக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (27.02.2021) நடைபெற்றது.    இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 3 என 18 பறக்கும் படைகளும், தலா 3 என 18 நிலையான கண்காணிப்பு குழுக்களும், தலா 2 12 வீடியோ கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு குழுவில் உள்ள நீங்கள் பல்வேறு பதவிகளை வகித்தாலும் தற்போது நீங்கள் தேர்தல் ஆணையத்தின் அலுவலர்களாக உள்ளீர்கள். உங்களது பணி தேர்தல் காலங்களில் மிக அவசியமான பணியாகும். எனவே பணியின்போது மிகுந்த கவனத்துடன் தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி செய்திட வேண்டும். உங்களது தொலைபேசி எண்கள் அனைத்தும் மாவட்ட அளவில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ...

ஒருநாள் கராத்தே பயிற்சி முகாம். உமா ஜீவல்லரி சார்பில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு

படம்
 தூத்துக்குடியில்  டிராகன் சிட்டோ ரியூ கராத்தே சங்கம்  சார்பாக மண்டல அளவிலான ஒரு நாள் பயிற்சி வகுப்பு 28 - 2 - 2021 ஞாயிறு கிழமைஅன்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது        இந்த ஒரு நாள் பயிற்சி  முகாமில் கராத்தே தற்காப்பு கலையின் புதிய நூட்பங்கள்  தொடர்பான பயிற்சிகள் யாவும் தஞ்சையை சேர்ந்த " சீ கான்"   S. S. செந்தில்  குமார் B Se அவர்கள் தலைமையில்    கற்று கொடுக்கப்பட்டது .  இந்த ஒரு நாள் பயிற்சி முகாமிற்கு தூத்துக்குடி - திருநெல்வேலி - கன்னியாகுமரி - ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்து 200 மாணவ - மாணவியர்கள் கலந்து கெண்டனர்                      இந்த முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற   மாணவ  மாணவி யர்களுக்கு  மாலையில்   தூத்துக்குடி  "  ஸ்ரீ கருப்பசாமி     உமா ஜூவல்லர்ஸ் "     உரிமையாளர்   ராம் குமார் "    சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.   ...