இடுகைகள்

தமிழ் திரைப்பட மூத்த நடிகர் செல்லதுரை காலமானார்

படம்
    தமிழ் திரைப்பட மூத்த நடிகர் செல்லதுரை காலமானார்.அவரது வயது 84. வயது முதிர்ச்சியால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் தனது வீட்டில் செல்லதுரை சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை காலமானார். இவரது மறைவுக்கு பிரபடங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி, அட்லீ இயக்கத்தில் தெறி, தனுஷின் மாரி, ரஜினிகாந்தின் சிவாஜி உள்ளிட்ட பலவெற்றித் திரைப்படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகர் செல்வதுரை.

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்.

படம்
  BREAKING: இயக்குநர் கே.வி.ஆனந்த் காலமானா். பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார். அவருக்கு வயது 54. கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு உயிர் பிரிந்தது. பத்திரிகைகளில் புகைப்பட கலைஞராக வாழ்க்கையை தொடங்கிய கே.வி.ஆனந்த், ஒளிப்பதிவாளராக தனது முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றார். கணா கண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்த கே.வி.ஆனந்த், அயன், கோ, மாற்றான், அனேகன், கவண் மற்றும் காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன் காணமல் போன பெண் நலமுடன் மீட்டு உறவினர்களிடம் சேர்த்து வைப்பு !

படம்
        தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பண்டாரவிளை அருகிலுள்ள  வண்யனூர் சார்ந்த சித்திரைச் செல்வி  (வயது 55) என்பவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல் போயிருந்தார் .                                                                                                                                                                                                                      சித்திரை செல்வியின் கணவர்    ...

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகன தணிக்கையை நேரில் சென்று ஆய்வு.

படம்
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு அமல்படுத்தி வருவது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று வாகன தணிக்கையை நேரில் சென்று ஆய்வு. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (25.04.2021) நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் ஊரடங்கு அமல்படுத்தும் பணியிலும், வாகன சோதனையிலும், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். காவல்துறையினரின் இப்பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி முதலில் இன்று (25.04.2021) தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சிட்டி டவர் சந்திப்பில்; தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஆ...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சிதலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்ட

படம்
  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  --------------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.04.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே இடத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி கொரோனா வைரஸ் பரவலை தடுத்திடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்கு எண்ணிக்கை மேஜைகள் இ...

செயின்பறிப்பில் ஈடுபட்ட பிரபல கொள்ளையர்கள் - போலீஸ் சார் விரட்டி பிடித்து கைது

படம்
    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயின்பறிப்பில் ஈடுபட்ட பிரபல கொள்ளையர்களை ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் விரட்டிப்பிடித்து கைது - ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள தங்கச் செயின் மீட்பு - கைது செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.   ஆறுமுகநேரி குருஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜவஹர் மனைவி ரோஸ்மேரி என்பவர் நேற்று (19.04.2021) தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்ணைவிளை மொட்டையாசாமி கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது அங்கு நம்பர் பதிவு இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கத்தியை காண்பித்து மிரட்டி ரோஸ்மேரியின் கழுத்திலிருந்த 3 ¼ சவரன் தங்க செயினை பறித்து  சென்றுள்ளனர்.  இதுகுறித்து ரோஸ்மேரி அளித்த புகாரின் பேரில் உடனடியாக மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, அனைத்து போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு, ஆங்காங்கே காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரோந்துப் பணியிலிர...

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகள்

படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய்  கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர்  விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.  நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. வல்லுநர் குழுக்களின்  பரிந்துரைகளின் படி இரத்தக் கொதிப்பு, இதயநோய், சிறுநீரகபாதிப்பு, புற்றுநோய் போன்ற தொற்றா நோய் பாதிப்புள்ள மக்கள், கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள், முதியோர் போன்ற நோய் தொற்றினால்  எளிதில் பாதிக்கக் கூடிய நபர்களுக்கு கொரோனா தொற்று வராமல் தடுக்க களப்பணியாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  தொடர் கண்காணிப்பு, முகக் கவசம் அணிதல், அபராதம் விதிப்பு, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் முகக்கவசம் அணிதல் ஆகியவை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.                                             ...