இடுகைகள்

வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நாட்டு புற கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க. தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை

படம்
    கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கு அமல்படுத்தி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.                                                                                                                                                                                                                                     தற்போது தொடர்புகளை ...

கொரானா சிறப்பு நிவாரண நிதி ரூ.2000/ - மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி

படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா சிறப்பு நிவாரண நிதி ரூ.2000 / மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் பணிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் நியாயவிலைகடைகளுக்குச் சென்று பொது மக்களுக்கு கொரானா சிறப்பு நிவாரண நிதி மற்றும் மளிகை தொகுப்புகளை வழங்கி துவக்கி வைத்தார்.  -----------------------------     தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா சிறப்பு நிவாரண நிதி ரூ.2000/ - மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று மேல ஆத்தூர், சேதுகுவைத்தான், சிவகளை, பேட்மாநகரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக்கடைகளில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு கொரானா சிறப்பு நிவாரண நிதி மற்றும் மளிகை தொகுப்புகளை வழங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மீனவர் நலன்-மீன்வ...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனாவில் இறந்த பெற்றோர்களின் குழந்தைகள் தொடர்பான மாவட்ட பணிக்குழு கூட்டம்

படம்
 

இண்டர்ஸ்டிரியல் காடியர் திட்டத்தின்கீழ். சாலை அமைக்கும் பணிகளை. அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார்

படம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சென்னை - கன்னியாகுமரி இண்டர்ஸ்டிரியல் காடியர் திட்டத்தின்கீழ் திருச்செந்தூர் - பாளையங்கோட்டை, கோபாலசமுத்திரம் - கல்லிடைக்குறிச்சி சாலை அமைக்கும் பணிகளை மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார் ----------------------- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சென்னை - கன்னியாகுமரி இண்டர்ஸ்டிரியல் காடியர் திட்டத்தின்கீழ் திருச்செந்தூர் - கல்லிடைக்குறிச்சி சாலை அமைக்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (14.06.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு திருச்செந்தூரில் சென்னை - கன்னியாகுமரி இண்டர்ஸ்டிரியல் காடியர் திட்டத்தின்கீழ் திருச்செந்தூர் - கல்லிடைக்குறிச்சி சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.  பின்னர் மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத...

பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சி கூட்டமைப்பு சார்பாக ஊரடங்கை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு. நிவாரணப் தொகுப்புகள்

படம்
தூத்து.க்குடி மாவட்ட பத்திரிக்கை  மற்றும்  தொலைக் காட்சி கூட்டமைப்பு சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசிப்பை, காய்கறிகள்  மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணப் தொகுப்புகளை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு இன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.   தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை ரூ தொலைக்காடசி கூட்டமைப்பு சார்பாக இன்று (13.06.2021)  தூத்துக்குடி வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் 30 பேருக்கு அரிசிப்பை, காய்கறிகள் மற்றும் மளிகை பொருள்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்புகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை ரூ தொலைக்காடசி கூட்டமைப்பு தலைவர் திரு. பிரான்சிஸ், செயலாளர் திரு. மார்க் மகேஷ், இணை செயலாளர் திரு. அண்ணாத்துரை,...

தூத்துக்குடி மாவட்ட மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் மூலம் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

படம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் மூலம் மருத்துவ உபகரணங்களை மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்களிடம் வழங்கினார்கள். ----------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் மூலம் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (12.06.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மருத்துவமனைக்கு தேவையான ரூ.1.99 லட்சம் மதிப்பிலான் வீல்சேர், மாஸ்க், பல்ஸ் ஆச்சிமீட்டர், சாணிடைசர், பிபி கிட், பெட்சீட் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களை மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்களிடம் வழங்கினார்கள். மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் அவர்கள் மருத்துவ உபகரணங்களை பெற்று மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நேரு மற்றும் மருத்துவ கல்லூரி அலுவலர்கள், முக்கிய ...

தூத்துக்குடி மாவட்டம் அமலிநகர், ஆலந்தலை, சிங்கிதுறை, கொம்புதுறை பகுதி மீனவர்கள் 25 நபர்களுக்கு நாட்டு படகுகளுக்கு மானிய விலையில் வெளிப்பொருத்தும் இயந்திரங்கள்

படம்
  தூத்துக்குடி மாவட்டம் அமலிநகர், ஆலந்தலை, சிங்கிதுறை, கொம்புதுறை பகுதி மீனவர்கள் 25 நபர்களுக்கு நாட்டு படகுகளுக்கு மானிய விலையில் வெளிப்பொருத்தும் இயந்திரங்களை மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார். ------------------------- தூத்துக்குடி மாவட்டம் சிங்கிதுறை, அமலிநகர், ஆலந்தலை  மீனவர் கிராம பகுதியில் மீன்வளம் - மீனவர் நலத்துறையின் சார்பில் பாரம்பரிய நாட்டு படகுகளுக்கு மானிய விலையில் வெளிப்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.06.2021) நடைபெற்றது. விழாவில் மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு சிங்கிதுறையில் 5 மீனவர்களுக்கும், கொம்புதுறையில் 5 மீனவர்களுக்கும், அமலிநகர் மீனவர்கள் 8 நபர்களுக்கும், ஆலந்தலை மீனவர்கள் 7 நபர்கள் என மொத்தம் 25 நபர்களுக்கு மானிய விலையிலான வெளிப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார். பின்னர் மாண்புமி...