இடுகைகள்

ரூ.85 லட்சம் மதிப்பில் திடக்கழிவு உரம் தயாரிக்கும் எந்திர கட்டிட திறப்பு

படம்
தூத்துக்குடி குமாரகிரி ஊராட்சி கூட்டாம்புளியில் தூத்துக்குடி விமான நிலைய சமுக பொறுப்பு நிதி ரூ.85 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் எந்திர கட்டிடத்தினை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார். ---------------- தூத்துக்குடி குமாரகிரி ஊராட்சி கூட்டாம்புளியில் தூத்துக்குடி விமான நிலைய சமுக பொறுப்பு நிதி ரூ.85 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் எந்திர கட்டிட திறப்பு  நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.07.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்துகொண்டு  திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் எந்திர கட்டிடத்தினை திறந்து வைத்தார். மேலும் குப்பைகளை எடுத்து வர பயன்படுத்தப்படும் மின்சாரத்தால் இயங்கும் மூன்று சக்கர வாகன பணிகளை துவக்கி வைத்தார். ...

எட்டையபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, -. 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான மாணவியர் சேர்க்கை

படம்

ஊராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக்கூட்டம்

படம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் ஊராட்சி பகுதியில் வளர்;ச்சி திட்ட பணிகள் மற்றும் மரம் வளர்ப்பு தொடர்பாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ----------------------- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் ஊராட்சி பகுதியில் வளர்;ச்சி திட்ட பணிகள் மற்றும் மரம் வளர்ப்பு தொடர்பாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் தலைமையில் இன்று (12.07.2021) நடைபெற்றது. கூட்டத்தில் மாண்புமிகு சமூக நலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.மார்க்கண்டேயன் அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஃ கூடுதல் ஆட்சியர் திரு.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தூத்துக்குடி ந...

தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையம் திறப்பு :

படம்
தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.ஜ.பெரியசாமி அவர்கள் திறந்து வைத்தார். மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். மாண்புமிகு சமூக நலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையம் அருகில் தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலைய திறப்பு விழா மற்றும் புதிய உறுப்பினர்கள் மற்றும் இதர கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (11.07.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.ஜ.பெரியசாமி அவர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தை திறந்...

திருச்செந்தூரில் இருந்து உவரி, நாகர்கோயில், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு புதிய வழித்தட பேருந்து துவக்கம்

படம்
  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து உவரி, நாகர்கோயில், கன்னியாகுமரி புதிய வழித்தட பேருந்துகளை மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்  ------------------------------   தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் திருச்செந்தூரில் இருந்து உவரி, நாகர்கோயில், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு புதிய வழித்தட பேருந்து துவக்க நிகழ்ச்சி இன்று (10.07.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு 5 புதிய வழித்தட பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, பெரியதாழை பேருந்து நிலையத்தில் இருந்து உடன்குடிக்கு நகர பேருந்தினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசியதாவது: மாண்பும...

நாலுமாவடி ஏசு விடுவிக்கின்றார் அமைப்பின் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்

படம்
  தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாலுமாவடி ஏசு விடுவிக்கின்றார் அமைப்பின் மூலம் வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பெற்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வழங்கினார். ------------------------- தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாலுமாவடி ஏசு விடுவிக்கின்றார் அமைப்பின் மூலம் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (09.07.2021) நடைபெற்றது. ஏசு விடுவிக்கின்றார் அமைப்பின் நிறுவனர் திரு.மோகன் சி.லாசரஸ் அவர்கள் ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார். மருத்துவ உபகரணங்களை பெற்று மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல்வர் மரு.நேரு அவர்களிடம் வழங்கினார்.  வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் இ.சி.ஜி கருவி 2, மெட்டனல் மானிட்டர் 1, எக்ஸ்ரே மிசின் 1, எலைட் வியு பேசன்ட் மானிட்டர் 2, ஸ்டெச்சர் 4, வீல் சேர் 5 மொத்த மதிப்பு ரூ.10 லட்சத்து 9 ஆயிர...

அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில்; அதிக அளவில் வேலைவாய்ப்பு. திருச்செந்தூர் ஐடிஐ-ல் கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி

படம்
அரசு தொழிற் பயிற்சி நிலையம், திருச்செந்தூர் ஐடிஐ-ல் கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு        www.skilltraining.tn.gov.in     என்ற இணையதளம் வாயிலாக gவிண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 28.07.2021 ஆகும் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் -------------------- அரசு தொழிற் பயிற்சி நிலையம், திருச்செந்தூர் ஐடிஐ-ல் கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு           www.skilltraining.tn.gov.in    என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 28.07.2021 ஆகும். தொழிற் பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை ஆகும்.  பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.  அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கீழ்காணும் சலுக...