இடுகைகள்

தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் சார்பதிவாளர் அலுவலகத்தினை திறந்து வைப்பு

படம்
  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தினை திறந்து வைத்தார்கள் ------------------------------- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தினை இன்று (07.12.2021) திறந்து வைத்தார்கள். அதன்பின்னர் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றினார்கள். மேலும் மரக்கன்று நட்டி வைத்தார்கள்.  புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகம் சுமார் 25 சென்ட்; (3230 சதுர அடி) பரப்பில் சுமார் ரூ.93.26 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் காத்திருப்பு அறை, சார்பதிவாளர் அறை, கணினி அறை, பதிவு வைப்பு அறை, மதிய உணவு அறை, இ சான்றிதழுக்கான அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள அமைப்புகள், அவர்களுக்கான கழிப்பறைகள் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான அறை, ஆண் மற்றும் பெண்களுக்கா...

சிவகாசி பகுதியில் குளங்கள் நிரம்புகின்றன.

படம்
விருதுநகர் மாவட்டம்    சிவகாசி, சாத்தூர்,   அதைச் சுற்றியுள்ள க பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையினால் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றது  இந்நிலையில்சிவகாசி ஆனையூர் பஞ்சாயத்து பகுதியில் அமைந்துள்ள பெரியகுளம்  கண்மாய் கடந்த  சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்பு இந்த வருடம் பெய்து வந்த மழையினால் இந்த கண்மாய்  முழுவதுமாக  நீர் நிரம்பியுள்ளது  என்பது குறிப்பிடதக்கது    கரையோர பகுதிகள் உள்ள வீடுகள் நீரால் சூழப்பட்டு வருகிறது.இனி அடுத்தடுத்து மழை பெய்யும் நிலையில்  மழை வெள்ளத்தால்  பெரும் சிரமம்   ஏற்ப டுமோ என்று   அப்பகுதி மக்கள் அச்சத்தோடு இருப்பதாக கூறுகிறார்கள்

தூத்துக்குடியில் திடீர் சாலை மறியல் ஆர்ப்பாட்டம்

படம்
  கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையின் காரணமாக       தூத்துக்குடியில் பெரும் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது   இந்த நிலையில் தூத்துக்குடி  ( சேது பாதை  ரோடு  ) ராமேஸ்வரம் செல்லும் சாலை  பகுதியில்   அமைந்துள்ள ஆ.சண்முகபுரம் ஆரோக்கியபுரம். மாதா நகர் கிழக்கு - சோட்டையன் தோப்பு ,பகுதிகளில் உள்ள தெருக்கள். மற்றும் குடியிருப்பு பகுதியிலும்  வீட்டுக்குள்ளேயும் நீர்  புகுந்ததால்  குழந்தைகள், முதியவர் மிகவும் பாதித்துவருவதோடு நோய் தொற்று புரவும் நிலை ஏற்படும் என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர் இந்தபகுதிகளில்  ஆக்கிரமிப்பினால்  நீர் ஓடைகள்  அடைக்கப்பட்டதோடு அந்த நீர் ஓடைகள்  இருந்த இடம் தெரியாமல்  போனதால்...  மழை நீர்  தெருக்களையும்,  வீடுகளையும் ஆக்கிரமித்து சூழ்ந்து கொண்டது. தேங்கியுள்ள நீரை வெளியேற்றவும் , இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டி    ஆ.சண்முகபுரம் ஆரோக்கியபுரம். மாதா நகர் கிழக்கு - சோட்டையன் தோப்பு , ராஜபாளையம் , பகுதிகளில்...

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் தின விழா

படம்
04.12.2021 தூத்துக்குடி தருவை மைதான உள் விளையாட்டு அரங்கத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது . ----------------------  தூத்துக்குடி தருவை மைதான உள் விளையாட்டு அரங்கத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா 2021 மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  (04.12.2021)    அன்று  நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் 204 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.06 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.  மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பரிசுகளும், சிறப்பாக பணியாற்றிய மாற்றுத்திறனாளி அலுவலத்தை சார்;ந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்று, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:  தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 03 அன்று சிறப்பாக கொ...

மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு

படம்
  தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையொட்டி  மாநகராட்சி பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக குடியிருப்பு பகுதி சாலையில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். ---------------------------- தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையொட்டி  மாநகராட்சி பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக குடியிருப்பு பகுதி சாலையில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு  (03.12.2021)   அன்று  செய்தார்கள். அருகில், மாநகராட்சி ஆணையாளர் திருமதி.சாருஸ்ரீ,இ.ஆ.ப., அவர்கள், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சி.சண்முகையா அவர்கள் ஆகியோர் உடன் உள்ளார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது: தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையொட்டி  மாநகராட்சி பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக மழை ...

தூத்துக்குடியில். கன மழையால். பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நிவாரண உதவி

படம்
   தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.  தமிழ்நாடு முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நவம்பர் மாதம் 7-ஆம் தேதி தொடங்கி இரவு, பகல் பாராமல் சென்னை மற்றும் ஏனைய மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள்.   இன்று (2.12.2021) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கனமழை  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும், மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரணப் பணிகளையும் பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள...

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு .க .ஸ்டாலின் அவர்கள் மழை நீரால் பாதிக்கப்பட்ட. தூத்துக்குடி பகுதிகளை நேரில் ஆய்வு

படம்
 தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரைட் நகர் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள நீரால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வெள்ள நீரை அகற்றும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க ஸ்டாலின்,  அவர்கள் உத்தரவிட்டார்