இடுகைகள்

மகாகவி பாரதியாரின் பிறந்த நாள்

படம்
  தூத்துக்குடி மாவட்டம் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு தொழில் துறை, தமிழ் ஆட்சி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.   ------------------------ தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு தொழில் துறை, தமிழ் ஆட்சி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ...

தூத்துக்குடியில் மழை நீரை வெளியேற்றும் பணிகளை அமைச்சர் ஆய்வு

படம்
   தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தேங்கியிருந்த மழை நீரை வெளியேற்றும் பணிகளை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்  ---------------- தொடர்  மழையின் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பிரையண்ட்நகர், சிதம்பரா நகர் 5வது தெரு, வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முத்துகிருஷ்ணாநகர், பி அண் டி காலணி, பண்டாரம்பட்டி கால்வாய், ஆதிபராசக்திநகர், டிஎஸ்எப் கார்னர் ஆகிய பகுதியில் தேங்கியிருந்த மழை நீரை வெளியேற்றும் பணிகளை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் இன்று (08.12.2021) செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் , மாநகராட்சி ஆணையர் திருமதி.சாருஸ்ரீ, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர். மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் செய்தியாளர் பயணத்தின்போது தெரிவ...

சுகாதாரபணியாளர் பணிக்கு 15.12.21-க்குள் விண்ணப்பிக்கலாம்

படம்
சுகாதாரபணியாளர் பணிக்கு 15.12.21-க்குள் விண்ணப்பிக்கலாம் தேசியநலவாழ்வுகுழுமத்தின் மூலமாகமாநிலஅளவில் துணைசுகாதாரநிலையநலவாழ்வுமையங்களில் 4848 இடைநிலைசுகாதாரப் பணியாளர் பணியிடங்களும், 2448 பல்நோக்குசுகாதாரப் பணியாளர் (ஆண்) நிலை-ஐஐபணியிடங்களும் நிரப்பப்படஉள்ளன . தூத்துக்குடிமாவட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட 180 இடைநிலைசுகாதாரப் பணியாளர் பணியிடம் ரூ.14,000 ஒப்பந்தஊதியத்திலும் 90 பல்நோக்குசுகாதாரப் பணியாளர் (ஆண்)ஃசுகாதாரஆய்வாளர் நிலை-ஐஐபணியிடம் ரூ.11,000 ஒப்பந்தஊதியத்திலும் நிரப்பப்படஉள்ளன.  இடைநிலைசுகாதாரப் பணியாளர் பணியிடத்திற்குசெவிலியர் பட்டப்படிப்புஅல்லது இளங்கலைசெவிலியர் பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்லாம். பல்நோக்குசுகாதாரபணியாளர் பணியிடத்திற்கு இரண்டுவருடபல்நோக்குசுகாதாரப் பணியாளர் சுகாதார ஆய்வாளர்,துப்புரவுஆய்வாளர் கல்வி தகுதியினைஅங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள், இயக்குநர், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புமருந்துத்துறையால் வழங்கப்பட்டசான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.  இருபணியிடங்களுக்கும் வயது உச்சவரம்பு 50 ஆகும். இப்பணிமுற்றிலும் தற்காலிகமானது...

சிறப்பு தொழில் கடன் மேளா தொடக்க விழா

படம்
தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சிறப்பு தொழில் கடன் மேளா தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  ----------------------- தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சிறப்பு தொழில் கடன் மேளா தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (08.12.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இளம் தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:   தொழில் முனைவோர்கள் மீது நம்பிக்கை வைத்து கடன் வழங்கியுள்ளார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றி கடனை நீங்கள் திருப்பி செலுத்துவீர்கள் என நம்புகிறேன். குறுகிய காலத்தில் அதிகஅளவிலான பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கியுள்ளார்கள். தூத்துக்குடியின் வளர்ச்சிக்கு தொழில் முனைவோர்கள் மிகவும் உதவிகரமாக இருக்கிறார்கள். தூத்துக்குடி நகரம் சிறிய நகராட்ச...

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய. காவல் துறையினருக்கு பாராட்டு

படம்
          தூத்துக்குடி  மாவட்டத்தில்  கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய  3 காவல் ஆய்வாளர்; உட்பட 14 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய திருட்டு வழக்கு எதிரியை துரிதமாக செயல்பட்டு கைது செய்து, அவரிடமிருந்த திருடுபோன 3 பவுன் தங்க நகையை மீட்டு எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய முதல் நிலை வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர் சிவராஜா, முதல் நிலை காவலர்கள் சுப்பிரமணியன் மற்றும் ராஜா ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், தாளமுத்துநகர் காவல் நிலைய போக்சோ சட்டம் மற்றும் சிறுமி காணாமால் போன வழக்கில், காணாமல்போன 13 வயது சிறுமியை திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை சென்று மீட்;டு, எதிரியை கைது செய்ய உதவியாக இருந்த வடபாகம் காவல் நிலைய தலைமை பெண் காவலர் சண்முகனி மற்றும் முதல் நிலை காவலர் ஆனந்தகுமார் ஆகியோரின்  மெச்சத்தகுந்த பணிக்காகவும், பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 02.11.2021 அன்று நடைபெற்...

தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் சார்பதிவாளர் அலுவலகத்தினை திறந்து வைப்பு

படம்
  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தினை திறந்து வைத்தார்கள் ------------------------------- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தினை இன்று (07.12.2021) திறந்து வைத்தார்கள். அதன்பின்னர் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றினார்கள். மேலும் மரக்கன்று நட்டி வைத்தார்கள்.  புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகம் சுமார் 25 சென்ட்; (3230 சதுர அடி) பரப்பில் சுமார் ரூ.93.26 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் காத்திருப்பு அறை, சார்பதிவாளர் அறை, கணினி அறை, பதிவு வைப்பு அறை, மதிய உணவு அறை, இ சான்றிதழுக்கான அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள அமைப்புகள், அவர்களுக்கான கழிப்பறைகள் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான அறை, ஆண் மற்றும் பெண்களுக்கா...

சிவகாசி பகுதியில் குளங்கள் நிரம்புகின்றன.

படம்
விருதுநகர் மாவட்டம்    சிவகாசி, சாத்தூர்,   அதைச் சுற்றியுள்ள க பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையினால் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றது  இந்நிலையில்சிவகாசி ஆனையூர் பஞ்சாயத்து பகுதியில் அமைந்துள்ள பெரியகுளம்  கண்மாய் கடந்த  சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்பு இந்த வருடம் பெய்து வந்த மழையினால் இந்த கண்மாய்  முழுவதுமாக  நீர் நிரம்பியுள்ளது  என்பது குறிப்பிடதக்கது    கரையோர பகுதிகள் உள்ள வீடுகள் நீரால் சூழப்பட்டு வருகிறது.இனி அடுத்தடுத்து மழை பெய்யும் நிலையில்  மழை வெள்ளத்தால்  பெரும் சிரமம்   ஏற்ப டுமோ என்று   அப்பகுதி மக்கள் அச்சத்தோடு இருப்பதாக கூறுகிறார்கள்