இடுகைகள்

73ஆவது குடியரசு தினம்: தியாகிகளின் வாரிசுகளுக்கு மரியாதை

படம்
73ஆவது குடியரசு தினவிழா தினத்தில் தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டியை சேர்ந்த தியாகிகளின் வாரிசுகளுக்கு  மாவட்ட நிர்வாகம் சார்பில் கௌரவப் படுத்தப்பட்டனர்  தியாகி கழுகுமலை புசைப்பிள்ளை |  ,தியாகி அழகப்ப செட்டியார் ,  தெய்வு  தியாகி IiNS. மாடசாமி , இவர்களது வாரிசுகளான _  வை சோமசுந்தரம், சங்கர குற்றாலம் , கே எஸ் செல்வம் , இந்திரா ராமஜெயம்,  இவர்களுக்கு கோவில்பட்டி வட்டாட்சியர் அமுதா அவர்களும் மற்ற  அலுவலர்கள ஆகியோர்  தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவ படுத்தபட்டனர். சுதந்திர போராட்ட  தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் தியாகிகளின் வாரிசுகளை கௌரவப்படுத்திய தமிழக அரசுக்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கும்  கோவில்பட்டி வட்டாட்சியர் மற்றும் அலுவலர்களுக்கு   கோவில்பட்டி சுதந்திர போராட்ட தியாகிகள்  நல வாரிசுகள் சங்கம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது

வீரமங்கை வேலுநாச்சியார் " அலங்கார ஊர்தி அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் மலர் தூவி வரவேற்பு

படம்
"விடுதலைப் போரில் தமிழகம்"  என்ற தலைப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட " வீரமங்கை வேலுநாச்சியார் " அலங்கார ஊர்தி பொதுமக்கள் பார்வைக்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்தது  வருகை தந்த வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை மாண்புமிகு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் எட்டையாபுரம் விளாத்திகுளம் விளக்கில் இன்று மலர்தூவி வரவேற்றார்  உடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் திரு கருணாநிதி ஆனந்த சேகரன் திரு முருகேசன் திரு நவநீதகிருஷ்ணன் திரு பாரதி கணேசன் திருமதி கஸ்தூரி தங்கம் சுப்புராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்

வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை

படம்
"விடுதலைப் போரில் தமிழகம"   என்ற தலைப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி யிணை மாவட்ட ஆட்சித் தலைவர் மறுகி செந்தில்ராஜ் இ.ஆ.ப. அவர்கள் மதுரை தூத்துக்குடி  தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச் சாலையில் இன்று மலர் தூவி வரவேற்றனர்  உடன் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு சங்கர நாராயணன் ஆகியோர் உள்ளனர

தூத்துக்குடியில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள்

படம்
செ.வெ.எண்:45 நாள்: 26.01.2022 தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார். மேலும் 95 பயனாளிகளுக்கு ரூ.51,42,453ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.  ------------------- தூத்துக்குடி மாவட்டம் தருவை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்; குடியரசு தின விழா நிகழ்ச்சி இன்று (26.01.2022) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், காவல்துறையில் 80 நபர்களுக்கு மெடல், 44 நபர்களுக்கு சான்றிதழ், கொடிந...

தூத்துக்குடி சம்ஸ்கார் பாரதி சார்பில் குடியரசு தின விழா

படம்
தூத்துக்குடி சம்ஸ்கார் பாரதி சார்பில் பாரத அன்னைக்கு 73வதுகுடியரசு   தினத்தில்  சமரப்பணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரத மாதா படத்திற்கு    சமஸ்கார் பாரதியின் தூத்துக்குடி   மாவட்ட தலைவர் திரு கணேசன் -  SMS இசை மற்றும் நாட்டியப்பள்ளி நிர்வாகி திருமதி மாரி கணேசன்  ஆகியோர்  மலர் தூவி  வணங்கி மரியாதை செலுத்தினர்     பின்னர்  SMS  இசைப்பள்ளி   மாணவர்கள்  இசை  கருவிகளோடு    தேசபக்தி பாடல்கள்  இசைத்தனர்  .    நிகழ்ச்சியில் சமூக ஆர்வலரும் ஹிந்தி பண்டிட் டுமும்ஆன   திரு.ராம்ஜி அவர்கள்.சிறப்பு விருந்தினராக    கலந்து கொன்டு  சிறப்புரை ஆற்றி  அனைவருக்கும்  குடியரசு தின  வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொண்டார். சமஸ்கார் பாரதியின் மாவட்ட தலைவர் திரு கணேசன் சிறப்பு விருந்தினர் திரு.ராம்ஜி அவர்களுக்கு  பொன்னாடை போர்த்தி  கௌரவப்படுத்தி நன்றி உரையாற்றினார்

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

படம்

குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

படம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் அவர்கள் தலைமையில், நடைபெற்றது.  ----------------------   தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் அவர்கள் தலைமையில் இன்று (24.01.2022) நடைபெற்றது.   கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் அவர்கள் தெரிவித்ததாவது:- தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 26.01.2022 அன்று தருவை மைதானத்தில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற உள்ளது. மாநகராட்சியின் சார்பில் விழா நடைபெறும் மைதானத்தில் சிறிய சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். மேலும், மைதானம் தூய்மையாக இருக்க தேவையான குப்பை தொட்டிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மூலம் தூய்மைப்படுத்திட வேண்டும்.  அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு தீயணைப்புத்துறை மூலம் தீ தடுப்பு கருவிகள், தீயணைப்பு வாகனம் ம...