இடுகைகள்

தேவாரப்பண் இசைப்போட்டி

படம்
  தூத்துக்குடியில்  மஹா சிவராத்திரி உற்சவத்தை  அன்று  அருள்மிகு .பாகம்பிரியாள் உடனுறை ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலின் கலை அரங்கத்தில்  கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  தேவாரப்பண் இசைப்போட்டி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில்  SMS  இசை மற்றும் நாட்டிய பள்ளி Institute மாணவிகள் J.SE.லக்ஷினி Senior பிரிவில் முதல் பரிசும்,வளர்மதி மூன்றாம் பரிசும்,Junior பிரிவில் செல்வஶ்ரீஸன்விகா மூன்றாம் பரிசும் பெற்றனர். தூத்துக்குடி  மாநகரம் முழுவதுமிருந்து  சுமார் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  கலந்து கொண்டு வெற்றி பெற்ற வர்களுக்கு  பரிசுகளை தொழிலதிபர்.D.A.தெய்வநாயகம் வழங்கினார். இந்த போட்டி ஏற்பாடுகளை தூத்துக்குடி வ.உ.சி.இளைஞர் அணி மற்றும் இந்து அறநிலையத்துறையும் இணைந்து செய்திருந்தனர்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 6(1)-ன் கீழ் தகவல் தராத அலுவலர்கள் மீது நடவடிக்கை

படம்
  தூத்துக்குடி மாவட்டம் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 இரண்டாம் மேல் முறையீடு வழக்குகள் தொடர்பான விசாரணை தமிழ்நாடு மாநில தகவல்  ஆணையர் முனைவர் ரா.பிரதாப்குமார் அவர்களால் நடத்தப்பட்டது. இன்று நடைபெற்ற 61 வழக்குகளில். 4 வழக்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தகவல் ஆணைய மாநில தகவல் ஆணையர் முனைவர் ரா.பிரதாப்குமார்அவர்கள் தகவல் --------------------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் நீதிமன்றம் கூடத்தில் வைத்து தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 கீழான இரண்டாம் மேல்முறையீட்டு வழக்குகள் தொடர்பான விசாரணை தமிழ்நாடு மாநில பொது தகவல் ஆணையர் முனைவர் ரா.பிரதாப்குமார் அவர்களால் இன்று (04.03.2022) நடத்தப்பட்டது. பின்னர் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர்;  முனைவர் பிரதாப்குமார் அவர்கள்; தெரிவித்ததாவது: தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மூலம் ஆணையர்கள் மற்றும் தலைமையாணையர் உட்பட பல்வேறு அலுவலர்களால் அனைத்து மாவட்டங்களிலும்  மனுதாரர்களின் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்...

மகளிர் தினத்தில் மகளிருக்கான சிறப்பு தொழில் ஊக்குவிப்பு முகாம்

படம்
மகளிர் தினத்தில் மகளிருக்கான சிறப்பு தொழில் ஊக்குவிப்பு முகாம்     தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயமாகத் தொழில் தொடங்கி வருவாய் ஈட்டவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் 25 முதல் 35 சதவிகிதம் வரை மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்களை தமிழக அரசு மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கி வருகிறது. படித்த வேலைவாயப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ,  (PMEGP)  புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில நிறுவன மேம்பாட்டுத் திட்டம்   (NEEDS)  மற்றும் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்  (PMEGP)   ஆகிய மூன்று திட்டங்களின் மூலமும் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கடன் பெற்று சுயதொழில் தொடங்கி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.  இம்மூன்று திட்டங்களிலும் மகளிருக்கு 50சதவிகித ஒதுக்கீடு செய்யப்பட்டு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களுக்கான அழகு நிலையம், ஜவுளி வியாபாரம், தையல் தொழில், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், உடற்பயிற்சி நிலையங்கள், உணவுப் பொருட்கள் பதப...

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக. ஜெகன் பெரியசாமி போட்டியின்றி தேர்வு

படம்
  தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட திமுக சார்பில் அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீயிடம் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேறு யாரும் போட்டியிடாததால் ஜெகன் பெரியசாமி போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மேயருக்கான அங்கி, ஜெகன் பெலியசாமிக்கு அணிவிக்கப்பட்டு அவருக்கு 111 பவுன் தங்கச் செயின் மற்றும் வெள்ளி செங்கோலை மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக எல். பாலாஜி சரவணன் இன்று (02.03.2022) பொறுப்பேற்பு

படம்
   சென்னை பெருநகர காவல் துணை ஆணையர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் இன்று காலை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்பு. சென்னை பெருநகர காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்த டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் இன்று (02.03.2022) காலை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.  பொறுப்பேற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் எவ்வித பாரபட்சமுமின்றி சட்டம் ஒழுங்கு முழுமையாக பராமரிக்கப்படும்,  மாவட்டம் முழுவதும் அனைத்து சமுதாய உறுப்பினர்களுடன் காவல்துறையினர் நல்லுறவு வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தப்பட்டு சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகளை அறிந்து தீர்த்து வைப்பதற்கான சிறந்த சமுதாயக் காவல் பணி மேற்கொள்ளப்படும்.   சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுப்பதில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் எவ்வித பாரபட்சமுமின்றி சட்டப்படி க...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்

படம்
 

ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் செயற்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம்

படம்
  ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் செயற்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம் மதுரையில் 27-2 -2022 ஞாயிற்று கிழமை  அன்று நேற்று  ஹோட்டல் டியூக் - ல் ஜனநாயக மக்கள் உரிமை கழக செயற்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம் மாநில   நிர்வாகிகள் முன்னிலையில் ஜனநாயக மக்கள் உரிமை கழகம் மனித உரிமை கழகம் நிறுவனர் தலைவர் ஹியூமன் ரைட்ஸ் டுடே மாத இதழின் ஆசிரியருமான டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது கொரோனா  நோய்த்தொற்று பரவல்  காலகட்டமான  கடந்த 2 ஆண்டுக்கு பின் கூடிய நிர்வாக செயற்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம் தமிழ்தாய் வாழ்த்துடன்  தொடங்கியது  ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் நிறுவனர் தலைவர் டாக்டர் சுந்தர் அவர்களின் தாயார்  மறைவுக்கும் , மறைந்து போன ஜனநாயக மக்கள் உரிமை கழகம் நிர்வாகிகளுக்கும், நிர்வாகிகளின் குடும்பத்தில் மறைந்து போன உறவுகளுக்கும்  ஒரு  நிமிடஅஞ்சலி  அனுஷ்டிக்கப்பட்டது பின்பு மாவட்ட வாரியாக மாவட்ட நிர்வாகிகளிடம் வளர்ச்சி குறித்தும் பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்...