இடுகைகள்

உலக தலசீமியா தினம். தலசீமியா நோய் குறித்து விழிப்புணர்வு. .

படம்
  தூத்துக்குடி அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  உலக தலசீமியா தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், re இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது. ------------------------- தூத்துக்குடி அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக தலசீமியா தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  08.05.2022 அன்று கொண்டாடப்பட்டது.  நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, தலசீமியா நோயாளிகளை ஊக்குவிக்கும் விதமாக பரிசுப்பொருட்கள் வழங்கி அவர்களிடம் தலசீமியா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தலசீமியா நோய் எப்படி ஏற்படுகிறது, அதனை தடுப்பது எப்படி என்பது குறித்து மக்களிடையே விழிப்பணாவு ஏற்படுத்த ஆண்டுதோறும் மே மாதம் 8 ஆம் தேதியை உலக தலசீமியா தினம் கொண்டாடப்படுகிறது. தலசீமியா இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதிய...

‘கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம்”

படம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி தமிழக அரசின் சாதனை குறித்த ‘கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம்” என்ற புத்தகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்கள். ---------------------------- தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரவிய ரத்தின நகர் பகுதியில், தமிழக அரசின் ஒராண்டு நிறைவை முன்னிட்டு, நகர்புற அடர்காடு வளர்ப்பு முறையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், ஒராண்டு சாதனை மலரை, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், வெளியிட, மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.ஜெகன்பெரியசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். தூத்துக்குடி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திருமதி.தி.சாருஸ்ரீ,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு  பொறுப்பேற்று ஓராண்டிற்குள் தூத்துக்குடி  மாவட்டத்தில் முதல்வரின் முகவரி த...

நவின முறையில் பனை வெல்லம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மற்றும் இலவச உபகரணங்கள்

படம்
  திருநெல்வேலி மாவட்ட பனைபொருட்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நவீன முறையில் பனை வெல்லம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மற்றும் இலவச உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். --------------------------- திருநெல்வேலி மாவட்ட பனைபொருட்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நவீன முறையில் பனை வெல்லம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மற்றும் இலவச உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள்  (04.05.2022) அன்று வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் திருநெல்வேலி மாவட்ட பனை பொருட்கள் கூட்டுறவு சம்மேளனம் தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய கூட்டுறவு நிறுவனமாகும். இதில் 95 ஆரம்ப பனை வெல்ல கூட்டுறவு சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 46 பனைவெல்ல கூட்டுறவுசங்கங்கள் உள்ளது. அதில் ...

ஆழ்வார்திருநகரி மற்றும் புன்னக்காயல் ஊராட்சியில் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்

படம்
           ஆழ்வார்திருநகரி  மற்றும் புன்னக்காயல்  ஊராட்சியில்   மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்                              . -------------------------  தூத்துக்குடி மாவட்டம்,  ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம்                              புன்னக்காயல் ஊராட்சி  திருமண மண்டபத்தில்  (28.04.2022)   அன்று நடைபெற்ற மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்களின் மனுக்கள் பெறும் முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்,இ.ஆ.ப., அவர்கள், பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு தெரிவிக்கையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த 24.04.2022 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்திட ஆணையிட்டிருந்தார்கள். அதனடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம்    புன்னக்காயல் ஊர...

செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

படம்
  தூத்துக்குடியில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார் --------------------------- தூத்துக்குடி குரூஸ் பர்னாந்தீஸ் சிலை அருகில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.04.2022) தொடங்கி வைத்தார். மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.ஜெகன் பெரியசாமி அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.லோக பாலாஜி சரவணன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திருமதி.சாருஸ்ரீ, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசுகையில் .... விபத்து இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ஒவ்வொரு மாதமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோருடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது.  நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துற...

தூய்மை பாரதம் குறித்து. அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம்

படம்
  தூய்மை பாரதம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. --------------------------- தூய்மை பாரதம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தலைமையில் இன்று (23.04.2022) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.ஜெகன் பெரியசாமி அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் பேசியதாவது: மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் எல்லா உள்ளாட்சிகளுக்கும் தமிழகம் தூய்மை மாநிலமாக திகழ வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தி இருக்கிறார்கள். தமிழகம் தூய்மை மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் ஒரு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் எல்லா அமைப்புகளும் பங்கேற்க வேண்டும். குறிப்பாக சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தில...

உலக ஓவியர்தினத்தில் - ஓவியப் பயிற்சி முகாம் மற்றும் ஓவியக் கலைக் காட்சி

படம்
  உலக ஓவியர்தினம் - ஓவியப் பயிற்சி முகாம் மற்றும் ஓவியக் கலைக் காட்சிகள் நடத்துதல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு                 தூத்துக்குடி மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் வாயிலாக  6 வயது முதல் 16 வயது வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில்; சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், மற்றும் கராத்தே ஆகிய கலைகளில பகுதி நேரமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.                 தமிழகம் முழுவதும் செயல்படும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக உலக ஓவியர் தினத்தன்று  ஓவிய பயிற்சி பட்டறை நடத்திடவும் அதனை தொடர்ந்து சென்னையில் மாநில அளவிலான கலைக்காட்சி நடத்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்ஓவியப்பயிற்சி முகாம்களில் மரபுசார்ந்த ஓவியங்கள் துணி ஓவியங்கள், கண்ணாடி ஓவியங்கள், பேப்பர் ஓவியங்கள், பானை, மரம் ஓவியங்கள், வாட்டர் கலர் ஓவியங்கள், பென்சில் ஓவியங்கள் உள்ளிட்ட ஓவியங்களும் இடம்பெறும் வகையில்; நடத்த...