இடுகைகள்

மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியர்கள், சங்க தூத்துக்குடி கிளை சார்பாக வ.உ..சி அவர்களின் சிலைக்கு மரியாதை

படம்
   சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல்  வ .உ. சிதம்பரனார் அவர்களின்  151 வது பிறந்தநாளான 5-9-2022 திங்கள்கிழமையான  இன்று நாடு முழுவதுவும்  கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு  ,  மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியர்கள், சங்க தூத்துக்குடி கிளை  சார்பாக  தூத்துக்குடி மாநகராட்சி பழைய கட்டிட வளாகத்தில்  அமைக்கப்பட்டுள்ள   வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவ  சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள்  சங்க அமைப்பு செயலாளர் திரு சி ஆனந்தன் , ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி கீதா மாரியப்பன் , மாமன்ற உறுப்பினர் சுரேஷ் குமார் அவர்கள்  , தமிழ்நாடு நகராட்சி , மாநகராட்சி ஓய்வூதியர்கள்  தூத்துக்குடி  கிளை  சங்க தலைவர் இரா.மாடசாமி ஆகியோர்  வ.உ..சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்க துணைத் தலைவர் நேரு,  செயலாளர்  B.ஜெயசீலன் , இணைச...

படித்ததில் ... பயனுள்ள தகவல் "மூச்சுக் பயிற்சி."

படம்
 **மூச்சுக் பயிற்சி “ஸோ”, “ஹம்*  "ப்ராணயாமம்" இடது நாசியில் ஓடும் சுவாசம் இடகலை,  வலது நாசியில் ஓடும் சுவாசம் பிங்கலை,  இரண்டு நாசியிலும் ஒரே நேரத்தில் ஓடுவது சுழுமுணை..  மூச்சை உள்ளே இழுப்பது பூரகம்,  சுவாசித்த காற்றை உள்ளே நிறுத்துவது கும்பகம், அந்த காற்றை வெளியே விடுவது ரேசகம். இந்த அடிப்படைகளை மனதில் கொண்டு இனிவரும் தகவல்களை அணுகிட வேண்டுகிறேன். மூச்சுக் கலையின் முதல் படி உள்ளே ஓடும் மூச்சினை கவனிப்பதும், உணர்வதுமதான்.  அந்த வகையின் இன்று எளிய பயிற்சி முறை ஒன்றை பார்ப்போம். இந்த பயிற்சியினை முதலில் ஐந்து நிமிடங்கள் என ஆரம்பித்து தினமும் கொஞ்சம் கொஞ்சமாய் நேரத்தை அதிகரிக்கலாம்.  முப்பது நிமிடங்கள் செய்ய முடிந்தால் நல்லது. வெறும் வயிறுடன் அல்லது உணவு உண்டு இரண்டு மணி நேரம் கழிந்த நிலையில் செய்வது உத்தமம். தனிமையான இடத்தில் உடல தளர்வாக இருக்கும் படி அமர்ந்து கொள்ள வேண்டும்.  முதுகுத் தண்டு நேராய் இருத்தல் அவசியம். பத்மாசனம் அல்லது சுகாசனம் உகந்தது. இப்போது வெறுமனே மூக்கின் வழியே சுவாசம் உள்ளே சென்று வெளியே வருவதை மட்டும் கவனியுங்கள்.  ம...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணை செயலாளர் அக் கட்சியிலிருந்து விலகி 100 பேர்களோடு SDPI கட்சியில் இணைப்பு

படம்
  தூத்துக்குடியில் 08-08-22  திங்கள் கிழமை அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் செயல் பட்டு வந்த தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் மின்னல் அம்ஜத் அவர்கள் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட நபர்கள் ,  SDPI கட்சியின் கொள்கை கோட்பாடுகளால் கவரப்பட்டு SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் முன்னிலையில்  அக்கட்சியில் இணைந்தனர்  இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் பாத்திமா பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள் மேலும் SDPl கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் காதர் , மைதீன் கனிஷேக் காதர் முகைதீன் ரசாக் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மூக்குபேரி பள்ளியில் சிலம்ப பயிற்சி முகாம்.

படம்
  மூக்குபேரி பள்ளியில் சிலம்ப பயிற்சி முகாம். தூத்துக்குடி மாவட்டம்  நாசரேத் அருகே உள்ள  மூக்குபேரி தூய மார்க் மேல்நிலைப் பள்ளியில் வைத்து சிலம்ப பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிலம்ப மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் மாநில அளவிலான சிலம்ப போட்டிகளில் வெற்றி பெற சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது  இந்த பயிற்சிக்கு திசையன்விளை சிலம்பப் பயிற்சியாளர். பாலசுப்பிரமணியம் மற்றும் அவர்களுக்கு குழுவினர் பயிற்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நாசரேத் காவல் நிலையம் ஆய்வாளர் பட்டாணி அவர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளை ஊக்கி வைத்து பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.  இந்தப் இந்த பயிற்சி முகாமுக்கு பள்ளி தாளாளர் செல்வின் பள்ளித் துணை ஆய்வாளர் ஆனந்தகுமார், திருச்செந்தூர் வீரபாபு மற்றும் கலந்து பலர் கொண்டனர். இந்த சிலம்ப பயிற்சி முகாமை மாஸ்டர் டென்னிசன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

மாநில அளவிலான சிலம்ப போட்டி : மூக்கு பேரி தூய மார்க் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி

படம்
  24 -07-2022 அன்று     மாநில அளவிலான சிலம்ப போட்டி   விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்றது   200க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த மாநில அலைிலான இந்த போட்டியில் மூக்கு பேரி தூய மார்க் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். இந்தப் போட்டியில் பல மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்  தூய மார்க் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலம்ப சண்டை பிரிவில் இரண்டாவது பரிசை முத்துராஜ், ஆல்ட்ரின், யூதா ஆகியோர்கள் வென்றனர் இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த சிலம்ப மாஸ்டர் கராத்தே டென்னிசனையும் பள்ளி  தாளாளர் செல்வின், பள்ளி தலைமையாசிரியர் குணசீலன் பள்ளி, ஆசிரியர் அமிர்தராஜ், பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் ஏஞ்சல் மற்றும் கலந்து கொண்டு பாராட்டினர்.

44வது சர்வதேச சதுரங்க போட்டி : தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த துவக்க விழா ஜோதி

படம்
   சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச சதுரங்க போட்டி நடைபெறுவதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஹாக்கி மைதானத்துக்கு வருகை தந்த துவக்க விழா ஜோதியினை              மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் வரவேற்றார்கள். -------------------------- சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச சதுரங்க போட்டி நடைபெறுவதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஹாக்கி மைதானத்துக்கு வருகை தந்த துவக்க விழா ஜோதியினை              மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (26.07.2022) வரவேற்று பேசியதாவது:   சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச சதுரங்க போட்டி நடைபெறுவதற்கு காரணமான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது பாராட்டினை தெரிவித்துக்கொள்கிறேன். சதுரங்க விளையாட்டு போட்டி நடத்துவதற்கு மிகத் துல்லியமாக திட்டங்கள் தீட்டி குறுகிய காலத்த...

தூத்துக்குடியில் மாலை தோரும் சூழும் கரு மேகங்கள்

படம்
  தமிழ்நாட்டில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது  அதேபோல் தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது ...குறிப்பாக தூத்துக்குடி பகுதியில் மாலை நேரம் தொடங்கியவுடன் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு வெயிலை குறைத்து வெட்கையை தணித்து குளிர்ந்த காற்றுடன் இதமான மழைபெய்கிறது  இந்த சூழல் இருக்கும் இடத்தில் இருந்து குற்றால சூழலை உணர்த்துகிறது