இடுகைகள்

அனைவருக்கும் நமது எழுத்தாணியின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

படம்
 

தூத்துக்குடியில் புத்தகத் திருவிழா ஆரம்பம்

படம்
                              நாள்.22.10.2022 தூத்துக்குடி ஏ.வி.எம். மஹாலில் மாவட்ட நிர்வாகம் சார்பாக  புத்தகத் திருவிழா – 2022 நவம்பர் 22 முதல் நவம்பர் 30 வரை நடைபெறவுள்ளது  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல். ------------------------------- தூத்துக்குடி ஏ.வி.எம். மஹாலில் மாவட்ட நிர்வாகம் சார்பாக புத்தகத் திருவிழா – 2022, நவம்பர் 22 முதல் நவம்பர் 30 வரையில் (22.11.2022  -30.11.2022) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.  புத்தகத் திருவிழா – 2022 தொடர்பான இலச்சினையை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப. அவர்கள், மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.பெஜெகன் அவர்கள், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சி.சண்முகை...

கராத்தே வீரருக்கு "வீரக்கலை வித்தகர்" விருது.

படம்
 நாசரேத் கராத்தே வீரருக்கு வீரக்கலை வித்தகர் விருது.  20-10-2022  வியாழக் கிழமையன்று தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள மூக்குபேரி  கிராமத்தில். . கிராமப்புற தமிழ் மன்றத்தின் சார்பாக மாதாந்திர கூட்டம்  நடைபெற்றது. இந்த மாதாந்திர கூட்டத்திற்கு தமிழ் மன்ற நிறுவனர் கவிஞர் தேவதாசன் வரவேற்பு உரையாற்ற தமிழ் மன்ற பணியாளர் அரிமா வி.வி.ன் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார் .  தமிழ் மன்றத்தின் சார்பாக  நாசரேத் பகுதியில் உள்ள   மாணவ, மாணவியற் களுக்கு  தற்காப்பு கலைகளான கராத்தே, சிலம்பம் போன்ற கலைகளில்  சிறப்பான பயிற்சியளித்து  மாவட்ட, மாநில, மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க  செய்து , வெற்றியை  பெற செய்த  ஆலன் திலக் கராத்தே பள்ளி மாஸ்டர் டென்னிசன் அவர்களுக்கு வீரக்கலை வித்தகர்  என்ற விருது வழங்கப்ட்டு  கௌரவிக்கப்பட்டது  டென்னிசன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார். நிறைவாக தமிழ் மன்ற பணியாளர் முனைவர் மோசஸ் தயான் நன்றி கூறினார். மூக்கு பேரி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

சாயர்புரத்தில் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் தூய்மை பணி.

படம்
 சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் சாயர்புரத்தில் தூய்மை பணி.   கடந்த 14-10-2022  வெள்ளி கிழமையன்று   சாயர்புரத்தில்  உள்ள டாக்டர். ஜி. யு. போப்  பொறியியல்  கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் சார்பில் மாணவ மாணவிகள் தூய்மை இந்தியா தினத்தை ஒட்டி சாயர்புரம் பகுதியில் தூய்மை பணி நடைபெற்றது.      இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் திரு. ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக சாயர்புரம் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி திரு.சுப்பிரமணியன்  தொடங்கி வைத்து தூய்மை இந்தியா பணியை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.  வார்டு கவுன்சிலர் திரு.கண்ணன், மேற்பார்வையாளர் திரு.நித்திய கல்யாண் உறுதிமொழி கூறினார். மாணவ மாணவிகள் சாயர்புரம் தெருவில்  தூய்மை பணி செய்தனர்.  இந்த நிகழ்ச்சியை நாட்டு நல பணி திட்ட அலுவலர் உதவி பேராசிரியர் சா.டென்னிசன் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் இயந்திரவியல் துறை தலைவர் திரு.கனிசெல்வன், திரு.தாமஸ், திர...

தூத்துக்குடி 3ம் கேட் பாலம் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு

படம்
  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 3ம் கேட் பாலம் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு  ----------------------- தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 3ம் கேட் பகுதியில் நடைபெற்று வரும் பாலம் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.10.2022) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:  தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள 3ம் கேட் பாலம் என்பது மிகவும் சிக்கலான பாலம். இந்த பாலமானது தூத்துக்குடி ரயில்வே கேட்டுக்கு வடபுறமும், தென்புறமும் இணைக்கக்கூடியது. இந்த பாலத்தினை நெடுஞ்சாலைத்துறையினர் பராமரித்து வருகிறார்கள்.  இந்த பாலத்தில் மொத்தம் 12 டெக்குகள் உள்ளது. ஓவ்வொரு டெக்குக்கும் இடையே இணைப்பு உள்ளது. இதில் ரயில்வே பாலத்துக்கு மேல் உள்ள 2 டெக்குகள் பழுதடைந்து சீல்; செய்யும் நிலை ஏற்பட்டது. இப்பழுதினை கண்டுபிடித்து கடந்த 2ம் தேதியில் இருந்து சீரமைப்பு பணியை செய்து வருகிறார்கள். பணிகள் முடிந்துவிட்டது. இரண்டு இணைப்புகளுக்கு இடையே ரப்பர் பொறுத்தப்ப...

தூத்துக்குடி கவிஞர் ஆ. மாரிமுத்து அவர்களின் கவிதை தொகுப்பு வெளியீடு:

படம்
 உளி தீண்டா கல்லோவியம்  கவிதை நூல் வெளியீட்டு விழா.  தூத்துக்குடி சார்ந்த  கவிஞர் மாரிமுத்து அவர்கள்  தான் எழுதிய கவிதைகளை   "உளி தீண்டா கல்லோவியம்"   என்ற பெயரில்  கவிதை   தொகுப்பாக தொகுத்து வெளியிட்டு விழா  02-10-2022 ஞாயிறு மாலையில்  அன்று தூத்துக்குடி  பாம்ஸ் அகாடமி அரங்கில் நடைபெற்றது                   தூத்துக்குடியில்   கவிஞா்  ஆ.மாாிமுத்து அவர்கள் எழுதிய    "உளி தீண்டா கல்லோவியம் "  கவிதை  நூல்  வெளியீட்டு விழா  இந்தியன்  சேம்பா் அருகில் உள்ள பாம்ஸ் அகாடமி அரங்கத்தில்   நாசரேத் தோி எழுத்தாளா்  கண்ணகுமார விஷ்வரூபன்  அவா்கள்  தலைமையில்  ,  கோவில்பட்டி  நாடாா் காமராஜ் மெட்ரிக்குலேசன் பள்ளி  முதல்வா்  பிரபு  அவா்கள்  முன்னிலையில்  தூத்துக்குடி  தூய மாியன்னைக் கல்லூாி தமிழ்த்துறை பேராசிாியரும்  தூத்துக்குடி  மாவட்ட தமிழ்நாடு கலைஇலக்கி...

நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்க சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு மரியாதை

படம்
 தூத்துக்குடி நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வு ஊழியர் சங்க சார்பாக முன்னாள் முதல்வரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114வது பிறந்த நாளில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை