இடுகைகள்

மாற்று திறனாளிகளுக்கு இலவச பயணஅட்டை

படம்
                      தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்   மாற்று திறனாளிகள் நலத் துறை சார்பில்  மாற்று திறனாளிகளுக்கு இலவச பயணஅடடையை   மாவட்ட ஆட்சிதலைவர்  மரு. கி.செந்தில் ராஜ் அவர்கள் 28-03-2023 அன்று வழங்கினார்.அருகில்..மாற்றுத்திறனாளிகளின்நலஅலுவலர் திரு.சிவசங்கரன் ஆகியோர் உள்ளனர்

தடகளப் போட்டியில் வெங்கலபதக்கம் வெற்ற மாணவி; மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

படம்
            நாள்:30.03.2023                                      தூத்துக்குடி மாவட்டம் தேசிய அளவில் நடைபெற்ற காதுகேளாதோர் மற்றும் வாய்பேசமுடியாதோருக்கான தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப., அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய அளவில் நடைபெற்ற காதுகேளாதோர் மற்றும் வாய்பேசமுடியாதோருக்கான தடகளப் போட்டியில் மூன்றாம் பரிசு வென்ற செல்வி.ஆர்.பிரித்தி பிச்சம்மாள் என்பவர், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்களை இன்று (30.03.2023) சந்தித்து, வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரத்தைச் சேர்ந்த திரு.ராகவானந்தம் (தந்தை), திருமதி.ரா.மாலதி (தாய்)  ஆகியோரது மகள் செல்வி ஆர்.பிரித்தி பிச்சம்மாள் என்பவர் தூத்துக்குடி வ.உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை வணிகவியல் முதலாம் ஆண்டு ...

கேஸ் சிலிண்டர் உபயோகிப்பாளர்கள் பாதுகாப்பு குறித்து ஜனநாயகமக்கள் உரிமைக்கழகம் சார்பாக கோரிக்கை மனு

படம்
 தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், கேஸ் சிலிண’டர்களை பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் விபத்து ஏற்படாமல் தடுப்பது தொடர்பாக “ஜனநாயகமக்கள் உரிமைக்கழக நிறுவனத்தலைவர் டாக்டர் S .சுந்தர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் மாவட்ட தலைவர்.  T.J. கார்திக்கேயன் அவர்களின் ஆலோசனையின் படி  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 29.3.2023 புதன் கிழமை அன்று …. ஜனநாயகமக்கள் உரிமைக்கழகம்” மற்றும் ஹீயுமன் ரைட்ஸ் டுடே ”பத்திரிக்கை சார்பாக ஐந்து வித கோரிக்கைகள் கொண்ட கோரிக்கை மனுவை தூத்துக்குடி மாவட்ட வழங்கல் அலுவலர் திரு. அபுல்காசிம் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.  இந்த நிகழ்வில் மாவட்டநிருபர்கள் E.சிவகாமிநாதன்- புகைப்படநிருபர்.S.முருகன் – தூத்துக்குடி மாவட்ட ஜனநாயகமக்கள் உரிமைக்கழக மக்கள் தொடர்பாளர் M.கரிகாலன் மற்றும் கார்திக் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்

தூத்துக்குடியில் எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த திறனாய்வு நிகழ்ச்சி

படம்
  தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையும் தொடுவானம் கலை இலக்கியப் பேரவையும் இணைந்து  (19.03.2023) ஞாயிற்று கிழமை அன்று தூத்துக்குடியில்  கலை இலக்கிய நிகழ்ச்சி  நடத்தியது .   ச.தே.செல்வராசு அவர்கள்  தலைமையில்...    கவிஞர், ஆ.மாரிமுத்து எழுதிய “ உளி தீண்டா கல்லோவியம் "  கவிதைத் தொகுப்பும் - சப்திகா டொமிலா எழுதிய “கொடியா...  மரமா” சிறுகதைத் தொகுப்பும், கண்ணகுமார விஸ்வரூபன் எழுதிய “தேரியாயணம்” நாவலும் திறனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு. படைப்புகள் குறித்த திறனாய்வை முறையே  லில்லி மலர், சொ.பிரபாகரன், மி.சு.எழிலரசி ஆகியோர் முன்வைத்தனர். . படைப்பாளர்கள் மூவரும் தங்களது ஏற்பரையை நிகழ்த்தினார்கள். நிகழ்வில் ஆகம் கலைக்குழு, தொன்பாஸ்கோ இளையோர் இயக்கம் மற்றும் ஆழி கலைக்குழுக்களின் மூன்று குறு நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. நாடகங்கள் குறித்த தங்களது பார்வையை எம்.எம்.தீன், லட்சுமி விசாகன்  உள்ளிட்டோர் சுருக்கமாக முன்வைத்தனர். "ஔவை காலத்தில் சமூகம்" என்ற தலைப்பில் தங்கத்துரையரசி  சிறப்புரையாற்றினார். நிகழ்வை தொடுவானம் அமைப்பின...

" பெண் குழந்தைகளை காப்போம் " என்பதை வலியுறுத்தி "சைக்கிள் மற்றும் வீல் சேர் "பேரணி : டாக்டர் ஜாஸ்மின் ராஜேஷ் துவக்கி வைத்தார் :

படம்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு " பெண் குழந்தைகளை காப்போம் " என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி " ரோட்டரி  ட்ரையல் ப்ளேசர்ஸ்   சங்கம் " சார்பில் " சைக்கிள் " மற்றும் "வீல் சேர்" பேரணி   நடத்தப்பட்டது 12-03-2023 ஞாயிறு  காலையில் தூத்துக்குடி வ-உ-சி  கல்லூரி முன்பாக புறப்பட்டு தூத்துக்குடி அருகில் உள்ள புதுக்கோட்டை வரையிலான இந்த பேரணியை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு டி டி ஆர் சிவ சங்கரன் அவர்கள் முன்னிலையில்  Rtn. டாக்டர்  ஜாஸ்மின் ராஜேஷ்   அவர்கள் இந்த பேரணியை துவக்கி வைத்தார்கள் பெண்கள் பலர் கலந்து கொண்ட இந்தப் பேரணியில் மாற்றுத்திறனாளி பெண்களும்  சக்கர நாற்காலி பேரணியில்.. ஆர்வத்தோடு பங்கு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது   " பெண் குழந்தைகளை காப்போம்" என்பதை வலியுறுத்திய சைக்கிள் பேரணியில்   " ரோட்டரி  ட்ரையல் ப்ளேசர்ஸ்   சங்கம் சார்ந்த  Rtn .Adv.சொர்ணலதா   Rtn. ராஜீவி   Rtn அஜித்தா  Rtn.டாக்டர் ப்ளோரா  ஆகியோர் கலந்துகொண்டு , பேரணியில் கலந்து கொண்ட  மாற்றுத்திறனாளி பெண் குழந்தை...

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

படம்
    *தூத்துக்குடி ட்ரையல்ப்ளேஸர்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்கம் சார்பில் மகளிர் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.* சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 11-03 - 2023 வெள்ளியன்று தூத்துக்குடி ட்ரையல்ப்ளேஸர்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்கம் இணைந்து மகளிர் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்  போட்டிகள் தூத்துக்குடி தருவை மைதானத்தில்  நடைபெற்றது    நடந்த இந்த போட்டிகளை தூத்துக்குடி மாவட்ட  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஆண்டனி அதிர்ஷ்டராஜ், தூத்துக்குடி ட்ரையல்ப்ளேஸர்ஸ் ரோட்டரி சங்க தலைவர் மலர்விழி , தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்க தலைவர் முஹம்மது நசீர், ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறப்பு பள்ளிகளைச் சேர்ந்த மகளிர் மாற்றுத்திறனாளிகள் இந்த போட்டிகளில் கலந்துகொண்டனர். இவர்களுக்கு ஓட்டப்பந்தயம், குண்ட...

காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் காலமானார்

படம்
  தூத்துக்குடி மாவட்டம் : 06.03.2023 கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜ் அவர்கள் சாலை விபத்தில் இன்று காலமானார் - அன்னாரது உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜ் (53) அவர்கள், இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் பணிக்காக கிழக்கு காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகம் அருகே அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துராஜ் அவர்கள்  சம்பவ இடத்திலேயே உயிரழந்தார். அன்னாரது உடலுக்கு  (06.03.2023) அ ன்று   தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் அவர்கள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் த...