இடுகைகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

படம்
 சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி. சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப்  பொறியியல்   கல்லூரியில்  இயந்திரவியல் துறை மற்றும் தேசிய நாட்டு நல பணி திட்டம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .  இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் திரு. ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார்.  கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார்.  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு விநாயகம் அவர்கள் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு   குறித்து உரை நிகழ்த்தினர்,.  வாகன ஆய்வாளர் தனபால் வாகன விதிமுறைகளை எடுத்துரைத்தார் இயந்திரவியல் துறை தலைவர் டென்னிசன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் இந்த நிகழ்ச்சியில் துணை பேராசிரியர் கனகராஜ் பிரைட்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

படம்
   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

"அப்பாவின் இரண்டாவது மரணம்" என்ற சிறுகதை நூல் பற்றிய ஆய்வு

படம்
தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் 11-ஆவது நிகழ்வு கடந்த ஞாயிறு(21.01.24) அன்று தூத்துக்குடி அழகப்பா கல்வி மையத்தில் உள்ள சித்திரக்கூடம் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்- நாசரேத்தைச் சார்ந்த தேரி எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன் அவர்கள் எழுதிய "அப்பாவின் இரண்டாவது மரணம்"  சிறுகதை நூல் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் கவிஞர் சைமன் அவர்கள் வரவேற்றுப் பேசினார். தூத்துக்குடியைச் சார்ந்த தமிழாசிரியர் முனைவர் சு.முருகன் மற்றும் நாசரேத்தைச் சார்ந்த இலக்கிய ஆர்வலர் ம.கண்ணன் இருவரும் நூலைக்குறித்து சிறப்பாக ஆய்வு செய்து பேசினர். மூக்குப்பேரி கவிஞர் தேவதாசன்,நாசரேத்தைச் சார்ந்த மேனாள் பேராசிரியர் காசிராசன் மற்றும் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் அய்யாக்குட்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் கண்ணகுமார விஸ்வரூபன் அவர்கள் ஏற்புரை வழங்கினார். புலைவர் சு.முத்துசாமி அவர்கள் நன்றியுரை வழங்க நிகழ்வு இனிது நிறைவுற்றது. பேரவையின் சார்பில் நூலாசிரியருக்கு சான்றிதழுடன் நூலாடையும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. தோழமையுடன்- நெல்லை தேவன்.

தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் சார்பாக குடியரசு தின கொடியேற்று விழா

படம்
 தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் சார்பாக குடியரசு தின கொடியேற்று விழா  26 1 2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற 75வது குடியரசு தினத்தில் தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக நமது தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது   இந்த விழாவில்  ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் நிறுவனத் தலைவரும் , "ஹியூமன் ரைட்ஸ் டுடே" மாத இதழின் பதிப்பு ஆசிரியருமான டாக்டர் திரு .S.சுந்தர் அவர்களின் வழிகாட்டுதல் படி தூத்துக்குடி மாவட்டத் தலைவர், வழக்கறிஞர் திரு. T.J  கார்த்திகேயன்  தலைமையில், மற்றும் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர்  P. ரமேஷ் அவர்கள்  முன்னிலையில்  ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின்  ஆட்சி மன்ற குழு தலைவர் திரு A.V.லினோ அவர்கள் தேசிய  கொடியேற்றினார் பின்னர் இனிப்புகள்  வழங்கப்பட்டது இந்த  நிகழ்ச்சியில் மாவட்ட புரவலர்  திரு.செல்வராஜ் மாவட்டஅமைப்பாளர்  சம்சுதீன்  ஒருங்கிணைப்பாளர்  திரு. சின்னச்சாமி - மக்கள் தொடர்பு அலுவலர்  கரிகாலன் -  மாவட்...

மாவட்டம் தோறும் பார்வையற்றோர் க்கான பள்ளி கூடம் தேவை!

படம்
  உலக பிரெய்லி தினத்தை முன்னிட்டு மதர் பைரோஸ் டிரஸ்ட் சார்பா மாவட்டம் க  04-01-2024  அன்று திருநெல்வேலி பாளையங்கோட்டையில் கண் பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் ட்ரெஸ்டிஸ் திரு முகம்மது நசீர் மற்றும் திரு முகம்மது ஹயாஸ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கொண்டாடப்பட்டது.  இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர் திரு முகமது இல்லியாஸ் அவர்கள் பார்வையற்றோருக்கான பள்ளிக்கூடம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவை என்பதை வலியுறுத்தினார்.  இதில் உதவி தலைமை ஆசிரியர் திருமதி ஹெலன் அவர்கள் பிரெய்லின் முக்கியத்துவத்தை பற்றி விளக்கினார்.   Higher secondary school for the Visually Impaired  -பாளையங்கோட்டையில் World Braille Day  Mother FiveRose Trust சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மனிதநேயத்தின் மற்றொறு மறுவுறுவம் மறைந்தது

படம்
 திரை உலகிலும், அரசியலிலும்,  புரட்சி கலைஞர் என்றும் , கேப்டன் என்றும் , கருப்பு எம்.ஜி.ஆர் என்றும் ரசிகர்களாளும் , மக்களாளும் பிரியமாக அழைக்கப்பட்டவர் தான் நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்த் அவர்கள்   விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, உலக தமிழ்  வாழ்  நெஞ்சங்களிலும் , மனிதநேய கொண்டோர் மனதிலும், சாமானிய மக்கள் இதயத்திலும் நீங்கா சோகத்தை தந்துள்ளது திரைத்துறையில் சாமானியனாக .. போராடி  பிரவேசித்து  மெல்ல... மெல்ல பட வாய்புகளை பெற்று , பெற்ற வாய்புகளில் தவறாமல் தனது திறமைகளை வெளிபடுத்தினார்.  தனக்கென ஒரு பாணியை உருவாக்கி... வாய்ப்புகள் தன்னை தேடி வரும் நிலைக்கு உயர்ந்தார். தான் உயர்ந்த போது தன்னோடு நடித்த சக நடிகர்களையும் தொழில் நுட்ப கலைஞர்களையும்  கை கொடுத்து உயர்த்தினார் என்பது விஜயகாந்த் அவர்களின் தனி சிறப்பு. பிறர் பசியை போக்குவதிலும் ... பிறர் தேவை அறிந்து மனித நேயத்தோடு உதவுவதிலும்  அவர் இன்னொறு எம்.ஜி.ஆர் ஆக வாழ்ந்ததால் ... அவரை கருப்பு எம்.ஜி.ஆர்  என அனைவராலும் கருதப்பட...

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைத்தில் FISH NOVA -2023 மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையான வினாடி வினா போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி

படம்
FISH  NOVA -2023 மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையான  வினாடி வினா போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி: மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தூத்துக்குடி FISH NOVA  2023 , மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான வினாடி வினா போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சியானது 6 -12 -2023 அன்று தூத்துக்குடி மீனவ மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவர் சங்கம் 2023-  24 அறிவியல் கழகத்தால் நடத்தப்பட்டது,  இதில் ஏறத்தாழ 85 மாணவர்கள் 8  பள்ளிகளின் சார்பில் பங்கேற்றனர்   காலை 8:30 மணி அளவில் பள்ளி மற்றும் போட்டிக்கான பதிவேற்றும் தொடங்கப்பட்டது அதனை தொடர்ந்து முனைவர் B. அஹிலன் FC &RI  தூத்துக்குடி அவர்களால் இந்த நிகழ்ச்சியானது காலை 10 மணி அளவில் தொடங்கி வைக்கப்பட்டது காலை வினாடி வினா போட்டிக்கான ஆரம்பச் சுற்றில் எட்டு அணிகள் பங்கேற்றனர் அதிலிருந்து 5 அணிகள் மட்டும் பிரதான சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்   அறிவியல் கண்காட்சியில் 31 அணிகள் பங்கேற்றனர்    நிறைவு விழாவானது மாலை 5 மணி அளவில் டாக்டர் B.அகிலன் முனைவர் முதல்வர் FC&RI...