இடுகைகள்

500 பயனாளிகளுக்கு இலவச பட்டா: சட்டமன்ற உறுப்பினர் -.சண்முகையா வழங்கினார்.

படம்
 தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஒன்றியத்தின் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ்  இலவச இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி காமராஜ் மேல்நிலைப்பள்ளிமில்.நடை பெற்றது இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் . சட்டமன்ற உறுப்பினர் திரு.சண்முகையா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  , MGR நகர் - டேவிஸ்புரம் மருத்துவர் நகர்-S.காமராஜர்புரம் - சுடலையாபுரம் போன்ற பகுதியில் உள்ள 500 பயனாளிகளுக்கு இலவச  பட்டாக்களை வழங்கினார்  இந்த நிகழ்ச்சியில் வட்டாச்சியர் திரு.திருமணி ஸ்டாலின்- ஒன்றிய செயலாளர் திரு. சரவணக்குமார்- மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் திரு. TTC.ராஜேந்திரன்-மாவட்ட சுற்று புறசூழல் அணி அமைப்பாளர். திரு.பொன்பாண்டி- ரவி ஒன்றிய துணை செயலாளர் கணேசன் - மாவட்ட தொழிலாளர் அணி திரு.அந்தோணி தனுஷ் பாலன் - மாவட்ட வர்த்தக அணி பிளேமின்ராஜ் - ஒன்றிய சுற்று புறசூழல் அணி ராஜேந்திரன்-மகளிர் அணி திருமதி. ஆரோக்கியமேரி- மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

படம்
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...

SDR அபிஷேக் பொன் சீலன் புதிய பொறுப்பேற்பு

படம்
தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை சங்க புதிய தலைவர் பதவி ஏற்பு விழா  தூத்துக்குடி மாவட்ட குத்து சண்டை சங்கத்தின் புதிய தலைவர் பொறுப்பேற்பு விழா  31 -01-2026 (சனிகிழமை) SDR ரெஸ்டாரண்டில் வைத்து நடைபெற்றது  இதில் தூத்துக்குடி மாவட்ட குத்து சண்டை கழகத்தின் செயலாளர் சுப்புராஜ், துணைத் தலைவர் முருகையாபாண்டியன். டெக்னிக்கல் சேர்மன் ராஜசிங்கம் - மற்றும் புதிய தலைவர் SDR அபிஷேக் ப பொன்சீலன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் , காவல் உதவி ஆணையர் (திருநெல்வேலி மாவட்டம்)- S.D.பொன்சீலன் -SDR விஜயசீலன்.SDR சாமுவேல்ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள். மாணவர்கள் - மற்றும் பெற்றோர்கள். கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் முக்கிய நிகழ்வாக புதிய தலைவராக பொறுப்பேற்று கையொப்பம் இடும் நிகழ்வு மற்றும் இந்த வருடம் குத்துச்சண்டை போட்டிகளில் சாதித்த மாணவர்களை கௌரவிக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் புதிய தலைவர் அபிஷேக் பொன்சீலன் அவர்கள் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்கள்  இறுதியாக தூத்துக்குடி மாவட்ட குற்ற...

குடியரசு தின வாழ்த்து

படம்
திருநெல்வேலி கிழக்கு  மாவட்டம் பாளை. வடக்கு ஒன்றியம் KTC நகர் தெற்கு கிளை செயலாளர்  டாக்டர் S. முகமது இலியாஸ் - நாட்டின் குடியரசு தினமான இன்று அனைவருக்கும் தனது  குடியரசு தின வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கிறார்

கதைசொல்லல் கலையின் அறிமுகம்

படம்
 தூத்துக்குடியில் கலையின் குரல்   அமைப்பின் சார்பில் '(25-01-2026) அன்று காலை "கலை_அறிவோம்" நிகழ்வில் - கதைசொல்லல் கலையின் அறிமுகம்..., மில்லர்புரம் புரூஸ் லீ தற்காப்புக் கலை பயிற்சிப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக பறைப் பயிற்சி மாணவி ம.மகாலெட்சுமி அவர்கள் பாடலுடன் வரவேற்புரை வழங்கி அனைவரையும் வரவேற்றார்.  தொடர்ந்து கதை சொல்லல் கலையின் அறிமுகம்,  வரலாறு மற்றும் கதை சொல்லல் சிறார்களுக்கு எவ்வளவு அவசியம் என்றும் கதைகளை சொல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நுட்பங்கள், கதை பின்னல் போன்ற பயிற்சிகளை  தோழர் சு.லெட்சுமி விசாகன் அவர்கள் சிறப்பாக வழங்கினார். தொடர்ந்து நெடுஞ்சாலை கவிஞர் தா.செல்வராஜ் பயிற்சியாளர் சு.லெட்சுமி விசாகன் அவர்களை வாழ்த்தி கவிதை வாசித்து சிறப்பித்தார். தொடர்ந்து எழுத்தாளர் ஸ்ரீதர கணேசன் அவர்கள் பயிற்சியாளர் சு.லெட்சுமி விசாகன் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார், ஓய்வு பெற்ற கருவூல அதிகாரி திரு. செய்யது முஹம்மது செரிப்  அவர்கள் பயிற்சியாளருக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தா...

மாநில அளவிலான கட்டுரை, கலை போட்டி

படம்
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி Mother Fiverose Trust ன் சார்பாக உலக பிரெய்லி தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான கட்டுரை, கலை போட்டிக்கான பரிசளிப்பு விழா,  நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரெய்லி கண்காட்சி மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளி உரிமைத்துறை அமைச்சர் திருமதி கீதாஜீவன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் K.B பிரம்ம நாயகம், முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி ரா. சங்கீதா சின்னராணி, மாநில மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் திரு. மெயகண்டன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாட்டில் பல மாவட்டகளில் இருந்து பார்வைற்றோர், மாணவ மாணவிகள் Teachers கலந்து கொண்டனர். இதில் IBN AL HAYTHAM BRAILLE வாழ்நாள் சாதனை விருது முனைவர் வே. சுகுமாரன் அவர்களுக்கும் சிறந்த முறையில் மக்களுக்கு சேவை ஆற்றி வரும் சமூக ஆர்வலர் DR. S.முகமது இலியாஸ் B. A., அவர்களுக்கு Best Social Service Award  வழங்கப்பட்டது.  தொடர்ந்து டிரஸ்டி Dr. முகம்மது நஸிர் பிஸியோதெரபிஸ்ட் அவர்கள் பிரெய்லி கண்காட்சி மற்றும் உலக பிரெய்லி தினத்ததை பற்றி சிறப்புரையாற்றினார...

வேண்டாம் ... சாலைகளில் சாகசம்

படம்
  சாலை பாதுகாப்பு மாத விழா முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட வட்டார போக்கு வரத்து துறை சார்பில்...தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில்... தமிழண்டா கலை குழுவினர் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர் இந்த நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.AK முருகன், மோட்டார் ஆய்வாளர் பாத்திமா- ஆய்வாளர் தனபாலன் மற்றும் தமிழன்டா கலை குழுவின் இயக்குனர் : ஜெகஜீவன் மற்றும் சமூக ஆர்வர்கள் கலந்து கொண்டனர்