இடுகைகள்

பிரையண்ட்நகர் - சிதம்பரநகர்- வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் கூட்டம்

படம்
தூத்துக்குடி பிரையண்ட்நகர் சிதம்பரநகர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் 3-07-2026 அன்று OMM.மஹாலில் .மாநகர தலைவர் P. K. ஜெயபாலன் தலைமையில்  3 ம் மைல் சங்கத்தின் செயலாளர் செல்லத்துரை அவர்கள் நமது சங்க சட்ட ஆலோசகர் S. கெளதம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் இன்ப சுற்றுலாவாக  குற்றாலம் மற்றும் பாலாறு செல்வதற்கு  ஒரு நபருக்கு 500 ரூபாய் என முடிவு செய்ய பட்டு  28.07.2026 செவ்வாய்கிழமை இரவு 11.00 மணிக்கு செல்லவும் , சுற்றுல்லா வருவோர்க்கு காலை ,மதியம் உணவு சங்கத்தின் சார்பில் வழங்கப்படும் எனவும்  தீர்மானம் நிறைவேற்ற பட்டு உள்ளது        மேலும்  சங்க வளர்ச்சியை குறித்து ஆலோசனைவனைகள் நடத்கப்பட்டது சங்கத்தின் சார்பில் ... ஒரு லட்சம் ஏலச்சீட்டு இந்த மாதம் ஆரம்பிக்க பட்டு உள்ளது ...சேர விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கெள்ளப்பட்டது 

தானங்கள் செய்வோம்

படம்
தானங்களில் பல வகை உண்டு . அவற்றில் ஒன்றுதான் இரத்த தானம் இறைவனால் படைக்கப்பட்ட அற்புதமான படைப்புதான்..."மனிதன்" சிரிப்பினாலும்-சிந்தனையினாலும்....பிற படைப்புகளில் இருந்து மாறுபட்டவன் மனிதன் புதிய சிந்தனை.... புதிய செயல் .. புதிய முயற்ச்சி இவைகளின் மூலம் .... விஞ்ஞானம் - மருத்துவம் போன்றவற்றில் சாதித்து முன்னேறியவன் மனிதன் மனித உடல் அவையங்களை ஆராய்ந்து....உடலின் குருதியின் செயல்பாடுகளை அறிந்து... குருதியின் முக்கியவத்தையும், அவசியத்தையும்... மகத்துவத்தையும் உணர்ந்ததின் ... வெளிப்பாடுதான் குருதிதானம் (அல்லது) இரத்ததானம். ஒரு மனிதின் உடலில் - அளவு இரத்தம் இருக்க வேண்டும்... இதில் அளவு கூடுதல், குறைவு ஏற்பட்டால் அதற்கேற்ப நோயின் தன்மைகள், அதற்கான அறிகுறிகள் தோன்றும். அதன்பிறகு மருத்துவரை அனுகி .அவர் தரும் ஆலோசனை பின்படி சிகிச்சை பெறுவது அவசியம் அவர கால அறுவை சிகிச்சை (மற்றும்) விபத்து ஏற்படும் காலத்தில் இரத்தபோக்கினால் ஏற்படும் உயிர் இழப்பைத் தடுக்க, சிகிச்சை பெறும் நோயாளியின் குருதியின் பிரிவு வகை அறிந்து அதே வகை குருதியை  குருதி நன்கொடையாளர்களிடமிருந்து பெற்று நோயாளிகளை காப்பாற...

தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – ஏழை மக்களுக்கு தையல் இயந்திரம் வழங்கல்

படம்
தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – ஏழை மக்களுக்கு தையல் இயந்திரம் வழங்கல் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.  அதன் போது தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் “உதயநிதி ஃப்ரெஷ் ஜூஸ் கார்னர்” கடைக்கு வருகை புரிந்தார். இந்த கடையின் உரிமையாளர் ஜே.கே. ஜஸ்டின், தனது உழைப்பில் இருந்து சேமித்து வைத்த பணத்தை பயன்படுத்தி, ஏழை எளிய மக்களின் வேண்டுகோளை ஏற்று 7 தையல் மிஷின்களை வாங்கி வழங்கும் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். அந்த தையல் இயந்திரங்களை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கையால் இன்று ஏழை மற்றும் எளிய மக்களுக்கு வழங்கினார். ஒரு காலத்தில் வறுமையிலும் தன்னம்பிக்கை இழந்த நிலையிலும் இருந்த ஜஸ்டினுக்கு, உதயநிதி ஸ்டாலின், உதவி செய்து வாழ்வாதாரமாக இந்த கடையை அமைக்க உதவினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல், முயற்சியும் ஏற்பாட்டிலும் இந்த கடை உருவாக்கப்பட்டு ஜஸ்டினுக்கு வழங்கப்பட்டது. அந்த கடையின் வருமானத்திலிருந்து இன்று ஜஸ்டின் அவர்கள் சமூகப் பொறுப்புடன் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்த...

எதிர்காலத்தில் இவர்கள் ம

படம்
 மகளிர் தின  நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட கைம்பெண் நல்வாழ்வு சங்கம் சார்பாக "தமிழக முதல்வர் அவர்களுக்கு மனு"

படம்
தூத்துக்குடி மாவட்ட கைம்பெண் நல வாழ்வு சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனு ஒன்று அனுப்பப்பட்டது. அதில் "தமிழ்நாடு அரசு மகளிர்க்காக பல புதிய சிறப்பான திட்டங்களை அறிவித்து செயலாற்றி வருகிறீர்கள். குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விடியல் பயணத்திட்டம், காலை உணவுத்திட்டம் மகளிர் மாணவிகளுக்கான கல்லூரிகளைத் திட்டங்கள் இந்தியாவில் எந்த மாநிலமும் செயல்படுத்தாத திட்டங்களை தாங்கள் செயலாற்றி வருகிறீர்கள்.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏழை விதவைப் பெண்கள் குடியிருக்க வீடு இல்லாமல் மிகவும்கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.   ஏழை விதவைகளுக்கு, இலவச பட்டா அல்லது குடிசை மாற்று வாரியம் -  தமிழ்நாடு வீட்டு வாரியத்தால் கட்டப்பட்டு வரும் வீடுகளில்.... இலவசமாக அல்லது குறைந்த வாடகையில் வீடுகள்  ஒதுக்கி தர  உத்திரவிடுமாறு. தூத்துக்குடி மாவட்ட  கைம்பெண் நல வாழ்வு  சங்கத்தின் சார்பாக அதன் மாவட்ட தலைவி R.சங்கீதா ரமேஷ் அந்த மனுவில்  கேட்டுக் கொண்டுள்ளார்

இரட்டை மாட்டு வண்டி போட்டி: பாய்ந்து சென்ற காளைகள்

படம்
 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம்  புதூர்பாண்டியபுரம் செல்வ முத்து விநாயகர் கோவில் 37-ம் ஆண்டு வருஷோபிஷேகம் நடைபெற்றது  இந்த விழாவை யொட்டி மாட்டுவண்டி பந்தயம் இரண்டு பிரிவுகளாக . தூத்துக்குடி புதியம்புத்தூர் சாலையில் நடந்தது.  இதில் தூத்துக்குடி, நெல்லை, மதுரை, தேனி, இராமநாதபுரம் உட்பட பல மாவட்டங் களில் இருந்து பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 12 மாட்டு வண்டிகளும், சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 24 மாட்டு வண்டிகளும் கலந்து கொண் டன.   பந்தயத்தை அயிரவன்பட்டிதொழிலதிபர் முருகேச பாண்டியன், புதூர்பாண்டி யாபுரம் தொழிலதிபர்பொன் முருகன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். 15 கி.மீ.தூரம் இலக்கு நிர்ண யிக்கப்பட்ட பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசாக ரூ.2 லட்சத்தை சலப்பேரி துக்காம்பிகை மாட்டு வண்டியும், 2-வது பரிசாக ரூ.1.50 லட்சத்தை சிவ கங்கை மாவட்டம் முத்தையாதிருப்பதிமாட்டு வண் டியும், 3-வது பரிசாக ரூ.1 லட்சத்தை நெல்லை மாவட் டம் வேலங்குளம் கண்ணன் மாட்டு வண்டியும், 4-வது பரிசாக ரூ.50 ஆயிரத்தை மதுரை அவனியாபுரம் மோகன் மாட்...

இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் சார்பில் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

படம்
  தூத்துக்குடி S.A.V.மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி : தூத்துக்குடி, S.A.V.மேல்நிலைப்பள்ளியில், திருச்சிராப்பள்ளி இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் சார்பில் மேல்நிலை மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் மாரியப்பன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக Army Recruitment Office யை சார்ந்த சுபேதார் திரிபாதி (Army Recruitment Office, ARO -Tiruchi.), கார்த்திகேயன் (Civil Defence Staff) கொண்டு இராணுவத்தில் சேர்வதற்கான கல்வி மற்றும் உடல் தகுதி விதிமுறைகள், பல்வேறு வாய்ப்புகள் குறித்து விரிவாக மாணவர்களுக்கு விளக்கமளித்தனர். இந்நிகழ்ச்சி மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை உருவாக்கும் விதமாகவும், இந்திய இராணுவத்தில் சேர்வதற்கான விழிப்புணர்வு மற்றும் ஊக்கத்தை மாணவர்களுக்கு வழங்கும் விதமாகவும் இருந்தது. நிகழ்ச்சி நிறைவில் முதுகலை ஆசிரியர் சுப்பிரமணியன் அனைவர்க்கும் நன்றி கூறினார்.