இடுகைகள்

மரவள்ளிகிழஙகில் மாவு பூசசியை கட்டுப்படுத்த மேற்க்கொள்ள வேண்டிய நடவடிககைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

மரவள்ளி உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனில் தமிழ்நாடு முதலிடம்வகிக்கிறது .  மரவள்ளியில் தற்பொழுது மாவுப்பூச்சி தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. தற்சமயம் நிலவி வரும் அதிக வெப்பநிலையின் காரணமாக மாவுப்பூச்சிகளின் தாக்கம ;அதிகமாக தென்படுகிறது.இம்மாவுப்பூச்சி மரவள்ளியின் இளம்தளிர், தண்டு மற்றும் இலையின ;அடிப்பரப்பில் இருந்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும். இதனால் நுனிக்குருதுகள் உருமாறியும், வளர்ச்சிக்குன்றியும் காணப்படும். மேலும் நுனியிலுள்ள இலைகள்ஒன்றுடன் ஒன்றாக இணைத்து முடிக்கொத்தாக தோற்றமளிக்கும். இடைக்கணுக்கள ;நீளம் குறைந்துவிடும். தண்டுகள் சிதைவடைந்து காணப்படும் இதனால் ஒளிச்சேர்க்கையின் வீரியம் குறைந்து கிழங்கு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படும். மரவள்ளிகிழஙகில மாவு பூசசியை கட்டுப்படுத்த மேற்க்கொள்ள வேண்டிய நடவடிககைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்  இப்பாதிப்னை குறைவதற்கு கீழ்க்காணும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையினை பின்பற்றுறுதல் வேண்டும் 1. போதிய அளவு நீர்; பாய்ச்சுதல் பாதிப்பினை குறைக்கும். 2. நடவு செய்யும் பொழுது அடி உரமாக ஒரு எக்டருக்கு 250 கிலோ...

விண்ணில் நடந்த சூரிய கிரகணம் வீட்டுக்குள் கொண்டு வந்த சிறுவன

படம்
விண்ணில் நடந்த சூரிய கிரகணம் வீட்டுக்குள் கொண்டு வந்த சிறுவன  21-06-2020  ஞாயிறு  அன்று தோன்றிய சூரிய கிரகணம் தமிழகத்தின்  பல பகுதிகளில் பல்வேறு விகிதத்தில்  காணப்பட்டது. அற்புத நிகழ்வான இந்த  சூரிய கிரகணத்தை  நேரடியாக கண்களா ல் காண கூடாது என்றும் , பாதுகாப்பு நிறைந்த கருப்பு வண்ணம்  கொண்ட கண்ணாடி மூலமாக  பார்க்கலாம் எனஅறிவியலாளர்களால்  அறிவுறுத்தப்பட்டுள்ளது இந்த நிலையிலே தூத்துக்குடியில்  K.V.S பள்ளியில்  8 ஆம் வகுப்பு படிக்கும்  மாணவன் ஹர்சின் சந்தோஷ் தனக்கு உரிய ஆர்வத்துடன் ...வானில்நிகழும்சூரிய கிரகணத்தை  ...ஒரு சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி உதவியுடன் தனது பாட்டி  வீட்டு  சுவற்றில்  சூரிய கிரகணத்தை நிகழ்வை  காண்பித்து  மகிழ்ந்தான்

சமூக இடைவெளி பின்பற்றாத கடைகள் மீது அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைக்கு மாநகராட்சி அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர். கரோனா நோய்த்தொற்று பரவுதலை தடுக்கும் விதமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறது. மேலும் வெளியில் செல்லும் போது முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இன்று தெற்கு புதுத்தெரு பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்படுவதாக மாநகராட்சிக்கு தகவல் கிடைத்தது. எனவே சம்பந்தபட்ட கடைக்கு சென்று விசாரணை நடத்தியதில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்படுவது தெரிய வந்தது. தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலர்களால் அந்த கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது

ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகிளை பகுதியில் .தொல்லியல் துறை சார்பாக நடைபெற்ற அகழ்வாராச்சியின் போது கிடைத்த பொருள்களை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டார்

படம்

உடன்குடியில் அமைக்கப்படும் அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி கொண்டு வருவதற்கான கோல் செட்டி அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

படம்
தூத்துக்குடி மாவட்டம் புதிதாக அமைக்கப்படும் உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி எடுத்து வர ரூ.1,900 கோடி மதிப்பில் கோல்செட்டி அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள்  (16.06.2020) அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும்,மாவட்டஆட்சித்தலைவர்அவர்கள்,பணியாளர்கள்அனைவரும்முககவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றிபணியாற்றுவதைஅலுவலர்கள்  உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.                                                           மேலும  ஆட்சித்தலைவர் அவர்கள் கோல்செட்டிமூலம்நிலக்கரிகளைசுமார்8கி.மீ.கடலுக்குள் எடுத்து செல்வதற்கு ஏதுவாக நடைபெற்று கொண்டிருக்கும் பாலம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு,இந்தபணிகளின்விவரங்களைகேட்டறிந்தார். IPD  சிமிண்டேசன் இந்தியா லிமிட் மூலம் தற்போது 30 சதவிதம்பணிகள்முடிவுபெற்றதாகவும்சம்பந்தப்பட்ட  அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. இந்த பணிகளுக்கு த...

தமிழக அரசு நடப்பு ...ஆண்டிற்காண - யு . ஓய் .இ .ஜி .பி . திட்ட தொழிற் கடனுக் கான விண்ணப்பம் வரவேற்கபடுகின்றன தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில், பொருளாதார ரீதியில் நலிவுற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குசொந்தமாகதொழில்கள் தொடங்கும் விதத்தில் 25 சதவீத மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்கும் யு.ஒய்.இ.ஜி.பி. திட்டத்தினை தமிழக அரசு மாவட்ட தொழில் மையம்; மூலம்சிறப்பானமுறையில்செயல்படுத்த தி  வருகின்றது.                                                                      தமிழக அரசின் அரசாணை எண்:69இகுறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை நாள்: 11.10.2019ன் படி வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு உச்ச வரம்பு முறையே ரூ.1,00,000/- மற்றும் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.உற்பத்திதொழிலுக்கு உச்ச வரம்பு ரூ.10 லட்சமாகவே உள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் இனிவிண்ணப்பிக்கும்விண்ணப்பதாரர்களின்...

போலி இ பாஸ் மூலம் வருபவர்களை தடுக்க நடவடிக்கை

படம்
போலி இ பாஸ் மூலம் வருபவர்களை தடுக்க நடவடிக்கை                                                             போலி இபாஸ்  மூலம் வருபவர்களை தடுப்பதற்காக மாவட்ட எல்கை பகுதிகளில் க்யூஆர் ஸ்கேனர் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது : தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 16,536 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 398பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 3பேர் இறந்துள்ளனர். 316பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இன்று மதியம் 12 மணி நிலவரப்படி 95பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 20பேருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது.  மகராஷ்ட்ரா, குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து 398பேர் தூத்துக்குடி வந்துள்ளனர். இதில் 185பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். கடந்த 2 வார ...