இடுகைகள்

காவல்துறையின் புதிய சேவை மையத்தை நாடிய 50 பேருக்கு நிவாரண தொகுப்புகள்

படம்
  ஏழை, எளிய மக்களின் பசியை போக்குவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று ஆரம்பித்த காவல்துறையின் புதிய சேவை மையத்தை நாடிய  50 பேருக்கு அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.            கொரோனா கால ஊரடங்கின்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்,  மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள்;, ஏழை எளிய மக்கள்,  உணவின்றி தவிப்பவர்கள் மற்றும் அத்தியாவசியத்தேவை வேண்டுபவர்களுக்கு வீடு தேடி வந்து உதவுவதற்கு 24 மணி நேரமும்; இயங்கும் காவல்துறையின் புதிய சேவைக்கான தனிப்பிரிவு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன் அவர்கள் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேற்று (26.05.2021) துவக்கி வைத்து, பொதுமக்கள், தங்கள் உதவிக்கு தொடர்பு கொள்வதற்கான செல்போன் எண். 95141 44100 எண்ணையும் அறிவித்திருந்தார்.   நேற்று அறிவித்தது முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் பல ...

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தவர் கைது

படம்
 . தூத்துக்குடி மாவட்டம்   எப்போதும் வென்றான்   காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவஞானபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.  ஜெயக்குமார் அவர்கள் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்களுக்கு சோதனையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முத்துமாலை, ஆய்வாளர் ரமேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சுப்பையா, தலைமை காவலர் திரு. கோபால் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவஞானபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த சர்க்கரை மகன் அறிவழகன் (42) என்பவரது வீட்டருகில் உள்ள ஒரு ஓட்டு சாய்ப்பில் சோதனை செய்தனர். அங்கு 15 சாக்கு மூட்டைகளில் சட்டவிரோத விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை; அறிவழகன் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  மேற்படி போலீசார் அறிவழகனை கைது செய்து,...

பலத்த காற்றினால் சேதமான வாழைகளை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ஆய்வு

படம்
தூத்துக்குடி மாவட்டம் மேலஆத்தூர், வெள்ளகோவில், ஆறுமுகமங்கலம் பகுதியில் பலத்த காற்றினால் சேதமான வாழைகளை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள்; நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் ---------------------            தூத்துக்குடி  மாவட்டம் மேலஆத்தூர், வெள்ளகோவில், ஆறுமுகமங்கலம் பகுதியில் பலத்த காற்றினால் சேதமான வாழைகளை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள்; நேரில் பார்வையிட்டு இன்று (26.05.2021) ஆய்வு செய்தார். அருகில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார். திருச்செந்தூர் வட்டம் மேலஆத்தூர் பகுதி, வெள்ளகோவில் சுகந்தலை பகுதி ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்றின் காரணமாக ஒடிந்து சேதமடைந்த வாழைமரங்களை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அவர்கள்; பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து ஏரல் வட்டம் ஆறுமகமங்கலம்...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

படம்
  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் செந்தில்ராஜ், இ.ஆ.ப., ஆகியோர் பங்கேற்றனர். ---------------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில்  (25.05.2021) அன்று நடைபெற்றது.         மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர். ராதாகிருஷ்...

தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெரு *காமராஜர் மஹாலில்* நடைபெற்ற கொராணா தடுப்பூசி முகாம்

படம்
  25-05-2021 இன்று  தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலகம் சார்பாக  தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெரு *காமராஜர் மஹாலில்* * நடைபெற்ற கொராணா தடுப்பூசி முகாமில்  45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு  தடுப்பூசி  போட்டுக் கொண்டுள்னர் ,                                                                                                                       பிரையண்ட் நகர் ஐக்கிய நாடார்கள் சங்க  செயலாளர்  *சுகன்யாS.செந்தில்குமார்*     அப்பகுதியில்   உள்ள மக்களுக்கு  விழிப்புணர்வு  ஏற்படுத்தும்    வகையில்    தானும்     தடுப்பூசி போட்டுக் கொண்டார்                 ...

புதிதாக அமைக்கப்பட்ட வாட்டர் பியூரிஃபையர் இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

படம்
தூத்துக்குடி ரோட்டரி கிளப் மற்றும் ஜெயா இன்ஜினியரிங் சார்பாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு வி.வி.டி. சிக்னல் மற்றும் குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட வாட்டர் பியூரிஃபையர் இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.  முழு ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே சோதனை நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் மிக முக்கிய சந்திப்புகளான வி.வி.டி சிக்னல் மற்றும் குரூஸ்பானாந்து சிலை சந்திப்புகளில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு உதவும் வகையில் தூத்துக்குடி ரோட்டரி கிளப் மற்றும் ஜெயா இன்ஜினியரிங் சார்பாக வழங்கப்பட்;ட வாட்டர் பியூரிஃபையர் இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் வழங்கப்பட்ட காலால் மிதித்து இயக்கக்கூடிய கிருமி நாசினி தெளிப்பான் மற்றும் வெப்பப் பரிசோதனை கருவி ஆகியவற்றையும் பார்வ...

சிறப்பாக பணியாற்றிய. 31 காவல்துறையினருக்கு பாராட்டு

படம்
         தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த வாரம்; சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 31 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.   கடந்த 17.05.2021 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பண மோசடி செய்து நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த நபரை தேடி கண்டுபிடித்து கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 5 லட்சத்தை கைப்பற்றிய கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு. மணிவண்ணன், உதவி ஆய்வாளர் திரு. அரிகண்ணன், முதல் நிலை காவலர் திரு. நாகராஜ், காவலர் திரு. பாலமுருகன், ஊர்காவல் படை காவலர் திரு. ஆறுமுக சங்கர் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும், கடந்த 19.05.2021 அன்று எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த மினி லாரியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை இருப்பதை கண்டறிந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான அவற்றை பறிமுதல் செய்து, 2 எதிரிகளை கைது செய்த எட்டையாபுரம் காவல்நிலைய ...