இடுகைகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட எல்லைக்குட்பட்ட சோதனைச் சாவடிகளில். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

படம்
                                                                                     தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட எல்லைக்குட்பட்ட சோதனைச் சாவடிகளில் நடைபெறும் போலீசாரின் வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்;. கொரோனா 2வது அலையை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த  24.05.2021 முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது மேலும் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்து வருகிற 07.06.2021 அன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே  சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றி...

ஸ்டெர்லைட் ஆலையில் 23.12 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி

படம்
       ஸ்டெர்லைட் ஆலையில் 23.12 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி - ஆட்சியர் தகவல்.   29.05.2021  சளி கிழமை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்று மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 23.12 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : உச்சநீதி மன்ற உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலுள்ள ஆக்ஸிஜன் அலகு திறக்கப்பட்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணிதுவங்கியது. மாவட்டஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 23.12 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு 5.70 மெட்ரிக் டன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிஇ மருத்துவமனைக்கும் 5.76 மெட்ரிக் டன் நாமக்கல் ஸ்ரீலெட்சுமி ஆக்ஸிஜன் நிறுவனத்திற்கும் 0.58 மெட்ரிக் டன் தூத்துக்குடி அரசன் கேஸ் ஏஜென்சீஸ் நிறுவனத்திற்கும்  0.08 மெட்ரிக் டன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி ருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித...

கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பாக திருநங்கைகள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பு பை வழங்கல்

படம்
     தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பாக இன்று  கோவில்பட்டி லட்சுமி திருமண மஹாலில் வைத்து திருநங்கைகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித் தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.  ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லட்சுமி திருமண மஹாலில் வைத்து இன்று (28.05.2021) திருநங்கைகள் மற்றும்  ஏழை எளிய மக்கள் 110  பேருக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித் தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.  அப்போது அவர் பேசுகையில் கொரோனா 2வது அலையை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த  24.05.2021 முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் மேலும் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்து வருகிற 07.06.2021 அன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த காலம் மிகவும் சிரமமாக இருக்கும். இதனை பொறுத்துக் கொண்டு...

நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு

படம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ,  தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் திரு.பனிந்திர ரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். --------------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் திரு.பனிந்திர ரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.05.2021) ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்தும், இதில் ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகள், ஐ.சி.யு. படுக்கை வசதிகள் குறித்தும், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் கொரோனா பாதுகாப்பு மையங்கள், சித்த மருத்துவ கொரோனா பாதுகாப்பு மையங்கள் குறித்தும் அரசு மற்றும் இங்குள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், திரவ ஆக்சிஜன் வழங்குவது குறித்தும், இதற்கென அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழு குறித்தும் தெரிவித்தார்கள். மேலும...

கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள்

படம்
  தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் 29.05.2021 அன்று காய்ச்சல் பரிசோதனை முகாம், மாதிரி சேகரிப்பு மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்  தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய்  கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர்  விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.  நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சியில் 29.05.2021 அன்று காய்ச்சல் பரிசோதனை முகாம், மாதிரி சேகரிப்பு மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்  தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை பாத்திமா நகர், தருவை ரோடு, கணேஷ்நகர், திரேஸ்புரம், Pரூவு காலனி, முள்ளக்கா...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம்

படம்
  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள்;, மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள்  ஆகியோர் ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், வட்டார வளர்;ச்சி அலுவலர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது ----------------------------   தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள்;, மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள்  ஆகியோர் ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், வட்டார வளர்;ச்சி அலுவலர்கள், கொரோனா தடு...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் கொரோனா அன்னதான பணி துவக்கம்

படம்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் கொரோனா அன்னதான பணியை தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு ஏழை, எளிய மக்களுக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மதிய உணவு பார்சல் வழங்கி துவக்கி வைத்தார். தூத்துக்குடி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பாக தூத்துக்குடியில் உணவின்றி கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு ஒரு நாளைக்கு 500 பேர் வரை அன்னதானம் ஏற்பாடு செய்துள்ளனர். மேற்படி அன்னதானத்தை இன்று (28.05.2021) தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு ஏழை, எளிய மக்கள் 100 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மதிய உணவு பார்சல் வழங்கினார். இதுகுறித்து கொரோனா ஊரடங்கு காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவர் கூட உணவில்லாமல்  கஷ்டப்படக்கூடாது என்பதுதான எங்களுடைய நோக்கம், ஆகவே இந்த கால கட்டத்தில் உதவி தேவைப்படுபவர்கள் தயங்காமல் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் இதற்கென தனியாக 24 மணி நேரமும் இயங்கி வரும் சேவை மைய எண் 95141 44100 என்ற செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டால் உங்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறோம் என்று மாவட்...