இடுகைகள்

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையினர் அனைவருக்கும் கொரானா தொற்று பாதுகாப்பு உப கரணங்கள்

படம்
தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையினரின் உபயோகத்திற்காக  முகக்கவசம், கிருமி நாசினி மற்றும் கையுறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினர் 317 பேர் சேவையாற்றி வருகிறார்கள். இவர்கள் பாதுகாப்பு பணி, போக்குவரத்து சீர் செய்தல் போன்ற பல பணிகளில் காவல்துறையினருடன் இணைந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். இந்த கொரோனா கால ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல் படையினர் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். ஆகவே தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையினர் அனைவருக்கும் முகக்கவசம், என்.95 முகக்கவசம், கிருமி நாசினி மற்றும் கையுறைகளை ஊர்க்காவல் படையின் வட்டார துணை தளபதி திருமதி. கெசல்யா மற்றும் உதவி ஆய்வாளர் திரு. நடராஜன் ஆகியோரிடம் ஒப்படைத்து அனைவருக்கும் வழங்கும்படி உத்தரவிட்டார்.  இந்நிகழ்வின் போது தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து, காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர் திரு. ரமேஷ் பாபு உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர். 

கொரோனா தொடர்பான தகவல்களை அறிய இணையதள சேவை துவக்கம்

படம்
  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொடர்பான அனைத்து தகவல்களையும்,  stopcoronatuti.in  இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் இணையதள சேவையை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கிவைத்தார்.  --------------------------   தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொடர்பான அனைத்து தகவல்களையும்            stopcoronatuti.in  இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் இணையதள சேவை துவக்க நிகழ்ச்சி  இன்று (08.06.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள்  கலந்துகொண்டு இணையதள சேவையை துவக்கிவைத்து தெரிவித்ததாவது:- இணையதள சேவையில் பொதுமக்கள்    stopcoronatuti.in  இணையதளத்தில் தினசரி எடுக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை விபரங்கள், கொரோனா தொற்று விபரங்கள் குணமடைந்தோர் எண்ணிக்கை, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலிய...

ஒன்றிய அரசிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தூத்துக்குடியில் ஆர்பாட்டம்

படம்
         8-6-2021  செவ்வாய்  அன்று தூத்துக்குடியில் 17வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக  அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது                                                                                                                                                       கொரோனா  தடுப்பு ஊசியை இலவசமாக வழங்கவும் , செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கவும், ஜி.எஸ்.டி வரியில் தமிழ்நாட்டின் பங்கை வழங்கவும்,  உயர்த்தப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலையை திரும்பப் பெறக் கோரி,     ஒன்றிய  அரசை வலியுறுத்தும் முகமாக ஆர்ப்பாட்ட...

கடல் அரிப்பை தடுக்க பெரியதாழையில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு பாலம் : நாடாளுமன்ற உறுப்பினர்: .கனிமொழி கருணாநிதி ஆய்வு

படம்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பெரியதாழையில் கடல் அரிப்பை தடுக்க அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு பாலம் தற்போது கடலின் தென் பகுதியில் 360 மீட்டரும் வடபகுதியில் 270 மீட்டரும் தூண்டில் வளைவு பாலம் நீட்டிப்பு பணி 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திரு : .கனிமொழி கருணாநிதி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். ___________________ தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பெரியதாழையில் கடல் அரிப்பை தடுக்க அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு பாலம் தற்போது கடலின் தென் பகுதியில் 360 மீட்டரும் வடபகுதியில் 270 மீட்டரும் தூண்டில் வளைவு பாலம் நீட்டிப்பு பணி 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் 06.06.2021 நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். ஆய்வின்போது மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஊர்வசி எ...

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த இருவர் கைது

படம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த இருவர் கைது - ரூபாய் 1,50,000ஃ- மதிப்பிலான 126 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - குலசேகரப்பட்டினம் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. குலசேகரபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மங்கையற்;கரசி தலைமையிலான போலீசார் இன்று (06.06.2021) உடன்குடி சத்யமூர்த்தி ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த நபரை பிடித்து சோதனை செய்ததில் அவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  மேற்படி போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் உடன்குடி கொத்துவா பள்ளி தெருவைச் சேர்ந்த ஜலாலுதீன் மகன் தாவூத் (43) என்பதும், அவர் வெள்ளாளன்விளை கீழத்தெருவைச் சேர்ந்த குணசீலன் மகன் ஜெயசிங் (39) என்பவரிடமிருந்து புகையிலை பொருட்களை வாங்கியது தெரியவந்தது. உடனே ஜெயசிங் என்பவருக்குச் சொந்தமான கடையில் ச...

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கொரோனா பரிசோதனைக்காக கலைஞர் மருத்துவமனையாக மாறறம்

படம்
                 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கொரோனா பரிசோதனைக்காக அரசு கலைஞர் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளதை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் திறந்துவைத்தார் ------------------------------- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கொரோனா சிகிச்சை பயன்பாட்டிற்காக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.மார்கண்டேயன்  அவர்களால் அரசு கலைஞர் மருத்துவமனைகாக மாற்றப்பட்டுள்ளது. இதன் திறப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்துகொண்டு மருத்துவமனையை திறந்துவைத்து அங்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை துவக்கிவைத்தார். மேலும் 4 கர்ப்பிணி தாய்மார்களுக்கு உட்டசத்து பெட்டகம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் ...

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு பணியில், ஈடுபடும் போலீசாருக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு  இரண்டாம் கட்டமாக முகத்திரை, கையுறை, முகக் கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை                                                                                                                                                                                                                   மாவட்ட காவல் கண்காணிப்பாளர்             திரு. எஸ். ஜெய்க குமார...