இடுகைகள்

பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சி கூட்டமைப்பு சார்பாக ஊரடங்கை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு. நிவாரணப் தொகுப்புகள்

படம்
தூத்து.க்குடி மாவட்ட பத்திரிக்கை  மற்றும்  தொலைக் காட்சி கூட்டமைப்பு சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசிப்பை, காய்கறிகள்  மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணப் தொகுப்புகளை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு இன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.   தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை ரூ தொலைக்காடசி கூட்டமைப்பு சார்பாக இன்று (13.06.2021)  தூத்துக்குடி வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் 30 பேருக்கு அரிசிப்பை, காய்கறிகள் மற்றும் மளிகை பொருள்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்புகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை ரூ தொலைக்காடசி கூட்டமைப்பு தலைவர் திரு. பிரான்சிஸ், செயலாளர் திரு. மார்க் மகேஷ், இணை செயலாளர் திரு. அண்ணாத்துரை,...

தூத்துக்குடி மாவட்ட மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் மூலம் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

படம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் மூலம் மருத்துவ உபகரணங்களை மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்களிடம் வழங்கினார்கள். ----------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் மூலம் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (12.06.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மருத்துவமனைக்கு தேவையான ரூ.1.99 லட்சம் மதிப்பிலான் வீல்சேர், மாஸ்க், பல்ஸ் ஆச்சிமீட்டர், சாணிடைசர், பிபி கிட், பெட்சீட் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களை மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்களிடம் வழங்கினார்கள். மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் அவர்கள் மருத்துவ உபகரணங்களை பெற்று மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நேரு மற்றும் மருத்துவ கல்லூரி அலுவலர்கள், முக்கிய ...

தூத்துக்குடி மாவட்டம் அமலிநகர், ஆலந்தலை, சிங்கிதுறை, கொம்புதுறை பகுதி மீனவர்கள் 25 நபர்களுக்கு நாட்டு படகுகளுக்கு மானிய விலையில் வெளிப்பொருத்தும் இயந்திரங்கள்

படம்
  தூத்துக்குடி மாவட்டம் அமலிநகர், ஆலந்தலை, சிங்கிதுறை, கொம்புதுறை பகுதி மீனவர்கள் 25 நபர்களுக்கு நாட்டு படகுகளுக்கு மானிய விலையில் வெளிப்பொருத்தும் இயந்திரங்களை மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார். ------------------------- தூத்துக்குடி மாவட்டம் சிங்கிதுறை, அமலிநகர், ஆலந்தலை  மீனவர் கிராம பகுதியில் மீன்வளம் - மீனவர் நலத்துறையின் சார்பில் பாரம்பரிய நாட்டு படகுகளுக்கு மானிய விலையில் வெளிப்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.06.2021) நடைபெற்றது. விழாவில் மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு சிங்கிதுறையில் 5 மீனவர்களுக்கும், கொம்புதுறையில் 5 மீனவர்களுக்கும், அமலிநகர் மீனவர்கள் 8 நபர்களுக்கும், ஆலந்தலை மீனவர்கள் 7 நபர்கள் என மொத்தம் 25 நபர்களுக்கு மானிய விலையிலான வெளிப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார். பின்னர் மாண்புமி...

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் நலிவடைந்தவர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள்

படம்
  தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் மகளிர் திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்கள். ------------------------- தூத்துக்குடி மாநகராட்சி அறிஞர் அண்ணா கூட்டரங்கம் மற்றும் கோவில்பட்டி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் மகளிர் திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் இன்று (11.06.2021) நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் கலந்துகொண்டு, தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவடைந்தவர்கள் 100 நபர்களுக்கும், கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் 50 நபர்களுக்கும் என மொத்தம் 150 நபர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.  பின்னர் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீ...

குழந்தைதொழிலாளர் எதிர்ப்பு தினம் : உறுதிமொழி. ஏற்பு

படம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைதொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் தலைமையில் நடைபெற்றது --------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைதொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் தலைமையில் இன்று (11.06.2021) நடைபெற்றது. இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அகற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன என உறுதி மொழி எடுக்கப்பட்டது. நிகழ்;ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.அமுதா, அலுவலக மேலாளர் திரு.இளங்கோ, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் திரு.ஆதிநாராயணன், திட்ட மேலாளர் திரு.செல்வம், மாவட்ட குழந்தை ...

இஸ்ரோ நில எடுப்பு கையகப்படுத்தப்படும் பகுதி சேர்ந்தவர்களுக்கு வசதியுடன் கூடிய குடியிருப்பு அமைக்க நில தேர்வுக்கான கள ஆய்வு

படம்
  தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் செட்டியாபத்து ஊராட்சி தாங்கையூர் பகுதியில்  இஸ்ரோ நில எடுப்பில்  கையகப்படுத்தப்படும் கூடல்நகர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு வீடுகள், சமுதாய கூடம் மற்றும் பல்வேறு வசதியுடன் கூடிய குடியிருப்புகளை அமைப்பதற்கு நிலம் தேர்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார். ---------------- தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் செட்டியாபத்து ஊராட்சி தாங்கையூர் பகுதியில்  இஸ்ரோ நில எடுப்பில் கையகப்படுத்தப்படும் கூடல்நகர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு வீடுகள், சமுதாய கூடம் மற்றும் பல்வேறு வசதியுடன் கூடிய குடியிருப்புகளை அமைப்பதற்காக நிலம் தேர்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.06.2021) கள ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளுக்கு நிலஎடுப்பு பணிகள் நடைபெற்ற...

கோவில்பட்டியில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு. . நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண உதவி

படம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கோவில்பட்டி சிதம்பரநாடார் காமாட்சியம்மாள்திருமண மஹாலில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் போன்ற நிவாரண பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு இன்று (10.06.2021) கோவில்பட்டி சிதம்பரநாடார் காமாட்சியம்மாள் திருமண மஹாலில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் 125 பேருக்கு அரிசிப்பை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற நிவாரண பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கி கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அவர் பேசுகையில், அரசு அறிவித்துள்ளவாறு 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முக...