இடுகைகள்

நாலுமாவடி ஏசு விடுவிக்கின்றார் அமைப்பின் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்

படம்
  தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாலுமாவடி ஏசு விடுவிக்கின்றார் அமைப்பின் மூலம் வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பெற்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வழங்கினார். ------------------------- தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாலுமாவடி ஏசு விடுவிக்கின்றார் அமைப்பின் மூலம் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (09.07.2021) நடைபெற்றது. ஏசு விடுவிக்கின்றார் அமைப்பின் நிறுவனர் திரு.மோகன் சி.லாசரஸ் அவர்கள் ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார். மருத்துவ உபகரணங்களை பெற்று மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல்வர் மரு.நேரு அவர்களிடம் வழங்கினார்.  வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் இ.சி.ஜி கருவி 2, மெட்டனல் மானிட்டர் 1, எக்ஸ்ரே மிசின் 1, எலைட் வியு பேசன்ட் மானிட்டர் 2, ஸ்டெச்சர் 4, வீல் சேர் 5 மொத்த மதிப்பு ரூ.10 லட்சத்து 9 ஆயிர...

அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில்; அதிக அளவில் வேலைவாய்ப்பு. திருச்செந்தூர் ஐடிஐ-ல் கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி

படம்
அரசு தொழிற் பயிற்சி நிலையம், திருச்செந்தூர் ஐடிஐ-ல் கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு        www.skilltraining.tn.gov.in     என்ற இணையதளம் வாயிலாக gவிண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 28.07.2021 ஆகும் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் -------------------- அரசு தொழிற் பயிற்சி நிலையம், திருச்செந்தூர் ஐடிஐ-ல் கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு           www.skilltraining.tn.gov.in    என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 28.07.2021 ஆகும். தொழிற் பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை ஆகும்.  பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.  அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கீழ்காணும் சலுக...

திருச்செந்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆய்வு.

படம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ---------------------------- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திருச்செந்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று (07.07.2021) நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள்பேசியதாவது:                                                                      திருச்செந்தூர் பேரூராட்சிக்கென குரங்கணி அருகில் தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரும் தனி குடிநீர் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தினசரி 2.10 எம்எல்டி நீர் திரு...

நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இருவர் கைது

படம்
  தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இருவர் கைது -  2 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் - தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.  தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிலும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று (05.06.2021) தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சங்கர், திருமதி. சரண்யா, தலைமைக் காவலர் திரு. முத்துராஜ், முதல் நிலைக் காவலர் திரு. பாலக்குமார், காவலர்கள் திரு. சிலம்பரசன் மற்றும் திரு. ஆனந்தகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தாளமுத்துநகர் காவல் ந...

" நான் கொரோனா பேசுகிறேன் ''... கவிஞர் ஆ.மாரிமுத்துவின் கொரனோ விழிப்புணர்வு கவிதை

படம்
  நான்  கொரோனா  பேசுகிறேன்.... எனது பிறப்பினை தேடித் தேடி உனது இறப்பினை அடையும்  ஆறறிவு மனிதா நான் கொரோனா பேசுகிறேன் கேள் ! வாழும் உடல்  தேடி அலையும் உயிர்க் கொல்லி நான் ! மனித உடலில் எனை பரப்பும் மாயசக்தி நான் ! உனை நாடாதிருக்க  நீ  கூடாதிரு உனை கொல்லாதிருக்க கூடி நில்லாதிரு உயிரைக்  கொல்வது நோக்கமல்ல உடலெங்கும் பரவி வாழ்வதே ஏக்கம்  ! எனை ஏற்கும் சக்தியிருந்தால் அந்த  சக்தி  பெறும் வழி தெரிந்தால் நீ வாழ்வது நிச்சயம்  நான் வீழ்வது சத்தியம் ..... புத்தனவன் போதனைகள் புதைத்து  விட்டாய் சித்தர்களின் சிந்தனைகள்  சிதறி விட்டாய் செத்தவர்கள் கண்டு பதறும் நீ இப்பொழுதாவாது புதைத்ததை தோண்டியெடு சிதறியதை கூட்டி அள்ளு பாட்டி சொன்ன வைத்தியம்  பாட்டியோடு போவதற்கல்ல என்னோடு போட்டி  போடுவதற்கே உன் உடலில்  வாழப்போவது நீயா  இல்லை நானா ? வீட்டிலிரு விலகியிரு நீ விளைத்த தானியம் மட்டுமே  விழுங்கியிரு உடலால்  தனித்திரு உள்ளத்தால் கூடியிரு ஆதிக்குடி தமிழா மண்ணை நேசி உன் மண்ணில்  விளைந்ததெல்லாம் ருசி புசி உப...

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

படம்
   தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,அவர்கள் தகவல். ---------------------     தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்¤த் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  விண்ணப்பிக்கத் தகுதிகள்       உதவித்தொகை பெற விண்ணப்பிப்பவர்கள் 01.01.2021 அன்று 58 வயது நிறைவடைந்தவர்களாக இருக்க வேண்டும். தமிழ்ப்பணி ஆற்றிய ஆதாரங்களுடன் ஆண்டு வருமானம் ரூ.72000-க்கு மிகாமல் வட்டாட்¤யரிமிருந்து இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழறிஞர்கள் இருவரிடமிருந்து தகுதிநிலைச்சான்று மற்றும் இதர விவரங்களுடன் தூத்துக்குடி மாவட்டத் தமிழ் வளர்ச்¤த் துணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை அ...

விவி மெரைன் புராடெக்ஸ் நிறுவன பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்

படம்
  தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம் அகரம் விவி மெரைன் புராடெக்ஸ் நிறுவன பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை, மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள்  துவக்கி வைத்தார். ------------------------ தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம் அகரம் விவி மெரைன் புராடெக்ஸ் நிறுவன பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் துவக்க நிகழ்ச்சி இன்று (04.07.2021) இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள்  கலந்து கொண்டு, தடுப்பூசி போடும் முகாமினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.  இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்ககளை கொரோனா பாதிப்பிலிருந்து காக்கும் வகையில் ஒன்றிய அரசி...